மகப்பேறு காலத்தில் ஏற்படும் அடங்கா உணவு விருப்பம்

மகப்பேறு காலத்தில் ஏற்படும் அடங்கா உணவு விருப்பம்

 

கர்ப்பகாலத்தில் அடங்காத உணவு ஆசை என்பது சாதாரணமாக உருவாகும் ஒன்று.

60-80% அம்மாக்கள், அவர்களில் ட்ரைமஸ்டரை பொறுத்து அவர்களின் உணவு விருப்பம் அமையும். முதல் மாதத்தின் துவக்கத்தில் துவங்கி, மூன்றாம் ட்ரைமஸ்டர் முடிவடையும் தருணம் வரை இந்த உணவு விருப்பம் இருக்கும்.

கர்ப்பத்தின் காரணமாகத்தான் இந்த அடங்காத உணவு விருப்பம் ஏற்படுகிறதா? இவற்றை கவனித்தல் அவசியமா? உண்ணும் உணவு ஆரோகியமனதாக உள்ள வரை அதனை பற்றி கவலைப்பட தேவை இல்லை. எனவே இந்த உணவு உண்ணும் விருப்பத்தினை சுற்றி இருக்கும் நம்பிக்கைகள் மற்றும் உண்மைகளையும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றியும் இந்த கட்டுரையில் காண்போம்.

கர்ப்பகாலத்தில் உணவு உண்ண வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், மாதங்கள் ஓட, அந்த விருப்பம் அதிகமாகும் என்பது உண்மை இல்லை. மேலும் அந்த விருப்பத்திற்கு ஏற்ப சத்தான உணவுகளை உண்ணலாம். தவறில்லை. கர்ப்பிணிகள் விரும்பி உண்ணும் உணவுகளை வைத்து அவர்கள் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கூற இயலும் என்பதும் உண்மையில்லை.

கர்ப்பத்திற்கு முன்பு அவர்கள் வெறுத்த உணவை, தற்போது விரும்பி உண்ணுவதும் ஏற்படலாம். அல்லது உணவு அல்லாத பொருட்களை உண்ணவேண்டும் என்ற எண்ணமும் உருவாகலாம். ஐஸ், களிமண், பல்பம் முதலானவை அந்த பட்டியலில் வரும். எனவே இந்த பழக்கத்தினை மருத்துவரிடம் கூறி அதற்கான தீர்வு காண்பது முக்கியமாகும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் அடங்காத ஆசைகள்:

உடலில் ஹார்மோன்கள் மாறுவதால் பெண்களிடம் பல வித மாற்றங்களை மகப்பேறு காலத்தில் காண இயலும். உண்ணும் உணவு, ருசி மற்றும் நுகரும் வாசம் ஆகியவற்றிலும் மாற்றங்கள் இருக்கும்.  வலுவான வாசம் காரணமாக உணவை வெறுக்கவும் வாய்ப்புண்டு. இவை கர்ப்பகாலத்தின் துவக்கத்தில் இருக்கும். இதன் காரணமாக அதிகாலை அயர்ச்சி ஏற்படலாம்.  இந்த விஷயங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்றவாறு மாறுபடும். அவை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத வரை அவற்றை கண்டு அஞ்ச தேவையில்லை.

என்ன வகையான உணவு விருப்பங்கள் இருக்கலாம்?

  1. சாக்லெட்டுகள் : கருமை நிற சாக்லெட்டுகள் இந்த நேரங்களில் நல்ல மாற்றாகும். அவற்றில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்ற காரணிகளாகும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு பலமாவதுடன், இரத்த அழுத்தமும் குறைகிறது. அதன் காரணமாக முன்சூல்வலிப்பு தடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கருமை நிற சாக்லெட்டுகள் உண்ணுவதால் பயனடைந்த பெண்கள் ஏராளம்.
  2. முட்டைகள் : அவற்றில் புரதம் அதிகம் உள்ளன. அவை சரியான விதத்தில் சமைகப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வது அவசியம். காரணம் அவை மூலமாக சாலமநெல்லா என்ற கருமி பரவும் ஆபத்து உள்ளது.
  3. பீனட் பட்டர் : தனியாக இதனை உண்ணாமல் சத்தான உணவுகளோடு இதனை உண்ணலாம். மேலும் சமீபத்திய ஆய்வுகள் கூறுவது என்னவெனில் மகப்பேறு காலத்தில் பீனட் பட்டரை தவிர்ப்பதால், குழந்தைக்கு கடலை ஒவ்வாமை ஏற்படும் என்ற கருத்து தவறு என்று. மேலும்மகப்பேறு காலத்தில் அதனை உண்ணுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்கின்றது. பீனட் பட்டரில்  அதிகமான கலோரிகள் உள்ளன. இதன் மூலம் அனீமியா தடுக்கப்படுகின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலும் இதன் மூலம் தவிர்க்கபடுகிறது.ஆதாரம் : (https://www.beingtheparent.com/is-peanut-butter-safe-during-pregnancy/_}
  4. பாலாடைக்கட்டி : இதன் மூலம் எடை கூடும் என்றாலும், இதில் அதிக அளவு கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும்.
  5. ஐஸ்கிரீம் : அனைத்து பால் பொருட்களிலும் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே அடங்காத ஆசையில் அவை கட்டாயம் இடம்பெறும்.
  6. எலுமிச்சை : இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமஸ்டரில் இந்த ஆசை வந்து சேரும். இதன் காரணமாக வித்தியாசமான உணவு முறை உடலுக்கு ஏற்படும்.
  7. பழங்கள் : இந்த ஆசை நல்லதாகும். ஆனால் இதனை சமன் படுத்த சரியான அளவு புரதம் உண்ணுவதும் அவசியம்.
  8. காரசார உணவு : மிளகாய் அதிகமாய் சேர்த்த உணவு, சூப், பல பொருட்கள் கலந்து காரசாரமாக உள்ள உணவுகள் அஜீரணம் தந்து, நெஞ்சுகரிக்க வைத்தாலும், அவற்றின் மீது ஆசை ஏற்படலாம். அளவாக உண்டால் அவற்றின் மூலம் சிக்கல் ஏதும் இல்லை.
  9. ஊறுகாய்: அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்படும் சாதாரண ஆசையாகும். உடலுக்கு சோடியம் தேவை என்பதை இவை உணர்த்தும்.

பிக்கா :

இந்த அடங்காத ஆசைகளில் தவிர்கவேண்டியவை எவை? தாய்க்கும் சேய்க்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எவை? சில நேரங்களில் கர்ப்பிணிகள் உணவு அல்லதா பொருட்கள் மீது ஆசை கொள்வர். துவைக்க உதவும் கஞ்சி, களிமண், தூசு இப்படி அசாதாரணமான பல பொருட்கள் உள்ளன. இந்த வகை ஆசைகளுக்கு பிக்கா என்று பெயர்.

ஆய்வுகள் கூறுவது என்ன வென்றால், இது போன்ற ஆசைகள் ஏற்பட காரணம் உடலில் சத்து குறைபாடுகள் என்று. முக்கியமாக இரும்புச் சத்து குறைவாக இருப்பதனால் என்று. ஆனால் அதனை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. கலாச்சாரங்கள் பொருத்து இந்த ஆசைகள் வேறுபாடும். ஆனால் அவற்றை நிறைவேற்றுமாறு பல சமூகங்கள் கூறுகின்றன.

இரத்தத்தில் ஈயம் கலந்திருந்தால், அது நஞ்சுக்கொடி வழியே குழந்தையை சென்று அடையும். இதன் காரணமாக பல குறைபாடுகள் குழந்தைக்கு ஏற்படலாம். அதிக அளவுகளில் ஈயம் இருந்தால் கரு கலையும் ஆபத்தும் உண்டு. ஈயம் உணவுல் இருந்தால் குழந்தைக்கு மந்த புத்தி, கற்றல் குறைபாடு,கவனிக்கும் திறன் குறைந்து இருப்பது போன்ற பல சிக்கல்கள் உருவாகலாம். எனவே மகப்பேறு காலத்தில், ஈயம் இரத்தத்தில் இருக்கிறதா என்ற சோதனை அவசியம். பிரசவத்திற்கு பின்னர் பாலூட்டும் பொழுதும் இது அவசியம். இதன் மூலம் சிக்கல்களின் அளவுகளை நாம் கணிக்க முடியும்.

தூக்கம் மிகபெரிய இடத்தை பிடித்துள்ளது. தூக்கம் சரியாக இல்லை என்றால் நொறுக்கு தீனி உண்ண வேண்டும் என்ற ஆசை ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

இந்த பட்டியலில் அதிகமான உணவுகள் உள்ளன. மென்மையான பாலடைக்கட்டிகள், சமைக்காத முட்டை, குறைவாக சமைத்த இறைச்சி, சூஷி போன்றவை கெடுதியாகும். அவற்றில் சாலமநெல்லா, ஈ-கோழி கிருமி தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றின் மூலம் லிஸ்ட்டீரியா மற்றும் டாக்ஸோபிளாஸ்மோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

மென்மையான பாலாடைக்கட்டிகளில், பீடா, ப்ரீ, கேமெம்பர்ட், மெக்ஸிக்கன் வகைகளான குயுசோ பிலான்கோ, குயுசோ பிரெஸ்கோ, பனேலா, ரோகுபோர்ட், கோர்கோன்சோலா போன்ற போன்றவையும் தவிர்க்கப்படவேண்டும்.  காட்டேஜ் பாலாடைக்கட்டி, கிரீம் பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட செட்டர், பார்மீசன் போன்றவையும் உண்ணலாம்.

டெலி மாமிசம் லிஸ்டீரியா பாதிப்பை ஏற்படுத்தலாம், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. சமைக்காத, குறைவாக சமைக்கப்பட்ட மாமிசம் டாக்ஸோபிளாஸ்மோசிஸ்

என்ற நோயினை உருவாக்கலாம். அதன் மூலம் கரு கலையும் அபாயமும் உள்ளது. எனவே மாமிசம் உண்பதற்கு முன்பு எவ்வாறு சமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும்.

அதிகமான உப்பு, அதிகமான கார்போஹைட்ரேட், அதிகமான கொழுப்பு உணவுகளையும்  மருத்துவர்கள் வேண்டாம் என கூறுகின்றனர். அவற்றில் காரணமாக எடை கூடுவது, மகப்பேறு கால நீரழிவு நோய் போன்றவை ஏற்படலாம். மேலும் குழந்தை பிறந்த பிறகும் இவை நீடிக்கலாம். பிரசவகால நீரழிவு நோய் வந்தால் பின்னர், நீரழிவு நோயில் இரண்டாம் வகை உண்டாக வாய்ப்புகள் அதிகமாகும். எனவே மருத்துவரை அணுகி, சரியான அளவு எடை கூடுவதற்கு என்ன உணவுத்திட்டம் கடைபிடிக்க வேண்டும், என்ன பயிற்சிகள் மூலம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சரியான எடையை அடைவது போன்றவற்றை தெரிந்து கொள்வது நல்லது.

ஏன் பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் அடக்க இயலாத உணவு ஆசைகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்களுக்கு தெரியாவிட்டாலும், அவற்றை சரியான முறையில் சத்தான உணவுகள் மூலம் எதிர்கொண்டால், நலமாகும்.