தாய்பால் குடிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மற்றும் உணவு உணர் திறன்

தாய்பால் குடிக்கும் குழந்தைகளின் ஒவ்வாமை மற்றும் உணவு உணர் திறன்

 

தாய்பால் குடிக்கும் தனது குழந்தை ஆரோக்யத்துடன் வளர, என்னென்ன உணவு வகைகளை நாம் சாப்பிடுவது என்பது குறித்து ஒரு தாய் கவலையுள்ளவளாக இருக்கிறாள். தாய் சாப்பிடும் சில உணவுகள் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், பொதுவாக எந்த வகையான உணவு உட்கொள்வதால் ஒவ்வாமை நோய் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், சரியற்றத்தன்மை குறித்தும், இந்தப் பிரச்சினையைப் பொதுவாக எப்படித் தீர்க்கலாம் என்பது குறித்தும் இந்தக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள், பொதுவாக தாங்கள் சாப்பிடும் ஒவ்வாத உணவுகள் குறித்து நிறைய சிந்திக்கிறார்கள். தாய்ப்பால் மூலம் ஒவ்வாமை ஏற்படுவது உண்மையிலேயே தாய்ப்பால் குடிக்கும் 100 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு மட்டுமே.

உணவு உணர்திறன் ஒவ்வாமையின் பொதுவான அறிகுறிகள்:

தாய்பால் மூலம் ஒவ்வாமை ஏற்பட்ட குழந்தைகளிடம் பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தோலில் தோன்றும் தடிப்பு, சொறி சிரங்கு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை தாய்மார்கள் அறியலாம். குழந்தைகள் அடிக்கடி அழுதுகொண்டே இருக்கிறார்கள் என்பதே  தங்கள் குழந்தைகள் பற்றி தாய்மார்கள் பொதுவாக தெரிவிக்கும் புகார். குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வாயுவால் ஏற்படும் வயிற்றுவலியால் அழும். சில சமயம் எந்த அறிகுறிகளையும் தெரிந்து கொள்ளமுடியாமல் அழுது கொண்டிருக்கும். அதுபோன்ற நேரங்களில் தனது முழங்கால்களை வயிற்றின் மேல் குவித்து வைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும். குழந்தைகள் பால் குடித்ததும் ஏற்படும் மந்தம், ஜீரணமின்மையாலும் வலி ஏற்பட்டு அழலாம்.

பல உணவுப் பொருள்கள் குழந்தைகளின் வயிற்றில் வாயுத் தொல்லையை உருவாக்குகிறது. என்றாலும் சிலவகை ஒவ்வாமை பாதகமான பின் விளைவுகளையும் உருவாக்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள்:   

“தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருள்கள் என பட்டியல் எதுவும் கிடையாது” தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பிடித்த உணவை உண்ணலாம்.  ஒவ்வொரு குழந்தைக்கு உண்டாகும் ஒவ்வாமை அந்த குழந்தையை பொருத்து. ஒரு குழந்தைக்கு தொந்தரவு செய்வது மற்ற குழந்தைக்கு எதுவும் செய்யாது.

  • சில உணவுப் பொருள்கள், குறிப்பாக பசுக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு பால் பொருள்கள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துகின்றன.
  • சோயா, கோதுமை, முட்டை, வேர்க்கடலை அல்லது சோளம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • முட்டைக்கோஸ், முளைத்தபயறுகள், வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், வெள்ளரி, ப்ரோக்கோலி மற்றும் பெல்மிளகுத்தூள். ஆகிய காய்கறிகள் வாயுவை உருவாக்கும் காய்கறிகளாகும்.
  • இலவங்கம், பூண்டு, மசாலா கறிப்பொருள்கள், மிளகாய், மிளகு மற்றும் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் சிட்ரஸ் பழங்கள் மற்றும் அவற்றின் பழச்சாறுகள் போன்றவற்றை தவிர்க்கவும். இது குழந்தையின் மென்மையான வயிற்றை பாதிக்கலாம்.
  • தாய் உண்ணும் உணவே குழந்தை உண்ணும் உணவு. குழந்தை குழந்தைக்கு முழுமையான சத்து தாயிடமிருந்தே கிடைக்கிறது. அதனால் தாய் சரிசம உணவு உண்டால் தான் குழந்தைக்கு சரியான சத்து கிடைக்கும். சரிசம உணவை பற்றி சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதே நலம்.
  • பேதி, வயிறு உபசம், அதிக காற்று வெளிடல் போன்ற சில பிரச்சனைகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு உருவாகும். இது குழந்தை பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் பொருளால் உண்டாகலாம். ஒரு சில குழந்தைகளுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படலாம். இது பால் குடித்து 30 நிமிடம் கழித்து தெரியும். இதைப்பற்றி மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நன்று.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் காபி குடிப்பதை குறைக்க வேண்டும். தேயிலை, காபி மற்றும் சாக்லேட் போன்ற உணவுகளில் இயற்கையாக காணப்படும் பொருள்களான காஃபின், அஜீரணத்தை தூண்டும். இதனால் குழந்தைக்கு மந்தம், வயிறு எரிச்சல் தூண்டப்பட்டு நீண்ட நேரம் தூங்காது. பாலூட்டும் பெண்கள் மேற்கண்ட பொருள்களை தவிர்ப்பது நல்லது.

கோலிக் பேபிஸ்:

உங்கள் குழந்தை தொடர்ச்சியாக 3 மணி நேரம் அழுதாலோ அல்லது தொடர்ந்து இதுபோல ஒருவாரம் முதல் 3 வாரங்கள் வரை அழுதாலோ உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்வது நல்லது. குறிப்பாக குறைப்பிரவசத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால் அதன் வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கப்பட்டு வலியால் தொடர்ந்து அழலாம். இதை “தசைப்பிடிப்பு” என்றும் இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளை        “கோலிக் பேபி” என்றும் குறிப்பிடுகின்றனர்.

“கோலிக்பேபிகள்” தொடர்ந்து 3 மணி நேரம் வரை அழுது கொண்டே இருக்கும். பொதுவாக இது போன்ற பாதிப்பு 5 ல் 1 குழந்தைக்கு ஏற்படுகிறது. இந்த பாதிப்பின் அறிகுறி குழந்தை பிறந்த 3 முதல் 4 வாரங்களில் தெரியவருகிறது. 6 வது வாரத்தில் முழுமையாக வெளிப்படுகிறது. மூன்று அல்லது நான்கு மாதத்தில் சரியாகி விடும். இதற்கான காரணம் குறிப்பாக தெரியவில்லை. கர்ப்பிணியாக இருக்கும் காலங்களிலும்,  பிரசவத்துக்குப் பின்னும் பெண்கள் புகைபிடிப்பதும்  “கோலிக்” நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட முக்கிய காரணங்களாகும்.

பால் குடிப்பதன் மூலம் என்னென்ன சத்துக்களை ஒரு தாய் அதிலிருந்து பெறுகிறாளோ, அதேசத்துக்கள் தான் அவளிடம் தாய்பால் குடிக்கும் குழந்தைக்கும் கிடைக்கும். எனவே குழந்தைகளின் மென்மையான வயிறு எந்தெந்தப் பொருள்களை ஏற்றுக் கொள்கிறதோ அதையே தங்கள் உணவுப் பொருள்களாக தாய்மார்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பே “கோலிக்“ பாதிப்பு ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதாவது காபீன், காரமானப் பொருள்கள், பயிறு மற்றும் தானியவகைகள், வாயுக்களை உருவாக்கும் காலிபிளவர், முட்டைக்கோஸ், வெங்காயம் மற்றும் ப்ராக்கோலி வகைகளை தவிர்ப்பது நல்லது. ஒரு தாயின் நடவடிக்கையால் 7 – 8 நாட்களேயான குழந்தை பாதிக்கப்படும் என்பதால் எதை சேர்க்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் அவள் ஒரு நீதிபதி போல இருக்க வேண்டும்.    .

இறுதியில் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய பொருட்களை கண்டுப்பிடிப்பது:

பாலூட்டுவற்கு 2   மணி நேரத்திற்கு முன்னர் கொடுக்க உணவுப் பொருள்களை பார்த்தால் தெரியும். பிறகு அந்த உணவுகளை தவிர்ப்பது நலம்.  குழந்தைகளின் மென்மையான வயிறு மற்றும் உடல் நலனுக்கேற்ற வகையில் தாய்மார்கள் தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. எப்போதுமே உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள், ஏனென்றால் இறுதியில் குழந்தைக்கு எதுசிறந்தது என்று தாயாகிய உங்களுக்குத்தான் தெரியும்.