மகப்பேறுகாலத்தில் உண்டாகும் இரத்தசோகை:

மகப்பேறுகாலத்தில் உண்டாகும் இரத்தசோகை:

 

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இரத்தசோகை உண்டாகும் வாய்ப்பு அதிகம் உண்டு. காரணம், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக அன்னையின் உடல் அதிக அளவில் இரத்தத்தை உற்பத்தி செய்யும். எனவே லேசான இரத்தசோகை கர்ப்பமாக உள்ள நேரத்தில் ஏற்படுவது சாதாரணமான நிகழ்வே. இருந்தாலும் நிலைமை மோசமடைந்தால் குழந்தை பாதிக்கப்படலாம்.

இரத்தசோகை என்றால் என்ன?

உடலில் இரத்தம் குறைவாக இருப்பதை இரத்தசோகை என்கிறோம். அப்படிபட்ட நேரத்தில், பிராணவாயுவை உடலில் உள்ள தசைகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையை செய்யும் சிவப்பணுக்கள் தேவையான அளவில் இல்லாமல் குறைந்து காணப்படும்.

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை இருந்தால் என்னவாகும்?

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை இருப்பது கவலைக்குரிய விஷயம். காரணம் அதனால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பிரசவ தேதிக்கு முன்னதாக பிறப்பது, தாய் இறந்து போவது போன்ற சிக்கல்கள் நிகழலாம். கடுமையான இரத்தசோகை இருப்பின், தேதிக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் அபாயம் அதிகரிக்கும். மேலும் இதன் காரணமாக குழந்தை இறந்து பிறத்தல் அல்லது பிறந்து இறத்தல் போன்ற நிகழ்வுகளுக்கும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன.

மகப்பேறு காலத்தில் ஏற்படும் இரத்தசோகை வகைகள் யாவை?

பல்வேறு இரத்தசோகை மகப்பேறுகாலத்தில் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. அதில் அதிகம் காணப்படுபவை,

இரும்புசத்து குறைபாட்டினால் வரும் இரத்தசோகை

அமெரிக்காவில் இந்த இரத்தசோகை வகை மகப்பேறு காலத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. 15 முதல் 25 சதவீத பெண்கள் தங்களின் மகப்பேறு காலத்தில் இதற்கு ஆளாகின்றனர். இந்த இரத்தசோகையில், இரத்தம் பிராணவாயுவை தசைகளுக்கு கொண்டு செல்ல இயலாமல், உடல் சோர்வுற்று, தொற்றுகளுக்கு ஆளாகும்.

போலேட் குறைபாட்டினால் வரும் இரத்தசோகை

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு அதிக அளவுகளில் போலேட் அவசியம். காரணம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நரம்புக்குழாய் தொடர்பான சிக்கல்களை தீர்க்க இந்த போலேட் அவசியம். போலேட் என்பது பொதுவாக பச்சிலை கீரைகள் மற்றும் காய்களில் காணப்படும் ஒருவகை வைட்டமின் ஆகும்.

கர்ப்பகாலத்தில், போலிக்அமிலம் என்ற சப்ளிமெண்ட் பெண்கள் கர்ப்பமாவதற்கு முன்பே பரிந்துரைக்கப்படுகிறது. போலேட் குறைபாடு காரணத்தால் சில பிறவி உடம்பு குறைபாடுகள், நரம்பு குழாய் குறைபாடு, நரம்புக் குழாய் சிக்கல், குறைந்த எடை போன்ற சூழலை உண்டாக்கலாம்.

வைட்டமின் பீ 12 குறைபாடு:

வைட்டமின் பீ 12 உடலிற்கு ஆரோக்கியமான சிவப்பணுக்களை உருவாக்க மிகவும் அவசியம்.  கர்ப்பிணி பெண்ணின் உடலில் வைட்டமின் பீ 12 தேவையான அளவு இல்லை என்றால், அவளது உடல் தேவையான அளவு ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இயலாது.

போலேட் குறைபாடு மற்றும் வைட்டமின் பீ 12 குறைபாடு இரண்டும் ஒன்றாக காணப்படும். இறைச்சி, கோழி, பால் பொருட்கள், முட்டை உண்ணாத பெண்களுக்கு வைட்டமின் பீ 12 குறைபாடு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை உண்டாவதற்கு காரணம் என்ன?

 • ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருவில் இருந்தால்
 • இரும்புசத்து நிறைந்த உணவுகளை நீங்கள் உண்ணாது இருந்தால்
 • கர்ப்பமடைவதற்கு முன்பு உதிரப்போக்கு மிக அதிகமாக இருந்தால்
 • அடுத்தடுத்து கர்ப்பமடைந்திருந்தால்.
 • தொடர்ந்து காலையில் வாந்தி எடுத்து வந்தால்

கர்ப்பநேரத்தில் இரத்தசோகையின் அறிகுறி என்ன ?

லேசாக இருக்கும் இரத்தசோகைக்கு அறிகுறி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் நிலைமை சிறிது மோசமானால்,  பின்வரும் அறிகுறிகளை காணலாம்..

 • சோர்வு
 • வலிமையின்மை
 • வெளிறிப்போன தோல்
 • ஒழுங்கற்ற இதயதுடிப்பு
 • மூச்சு வாங்குதல்
 • தலை சுற்றுதல்
 • நெஞ்சு வலி
 • கை, கால் மரத்து போவது
 • தலைவலி

இவை இரத்தசோகை இன்றி வேறு காரணங்களுக்காகவும் உண்டாகலாம். எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம். அவர்கள் பல்வேறு சோதனைகள் மூலம் உங்கள் உடலில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை, ஹீமோக்ளோபின் அளவுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வர்.

பிரசவத்தில் ஏற்படும் இரத்தசோகையை குணப்படுத்துவது ?

பிரசவத்தில் ஏற்படும் இரத்தசோகையை இரும்பு மற்றும் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் கொடுத்து சரி செய்ய முடியும். பிரசவத்திற்கு முன் எடுத்த வைட்டமின்களோடு சேர்த்து இரும்பு மற்றும் போலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டும்.

இரும்புசத்து நிறைந்துள்ள உணவுகள்:

 • கோழி, மற்றும் சிவப்பு இறைச்சி
 • முட்டைகள்
 • கீரைகள், ப்ரோகோலி, காலே
 • விதைகள் மற்றும் கொட்டைகள்
 • பீன்ஸ், பருப்புகள் மற்றும் டோபு.

வைட்டமின் சீ அதிகம் உள்ள உணவுகள் :

வைட்டமின் சீ, நமது உடல் இரும்புசத்தை உள்ள வாங்க உதவும். எனவே அது நிறைந்துள்ள உணவுகள்

 • சிட்ரஸ் பழங்கள் மற்றும் சாறுகள்
 • ஸ்ட்ராபெர்ரி
 • கிவி
 • தக்காளி
 • மணி மிளகுத்தூள்

உங்கள் மகப்பேறு மருத்துவர் உங்களுக்கு வைட்டமின் மற்றும் போலிக் அமிலம் உள்ள மருந்துகளை எப்படியும் பரிந்துரைப்பார். எனவே தினமும் 30மில்லிகிராம் அளவு இரும்புச்சத்து உங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

முதன்முதலாக மருத்துவரிடம் மகப்பேறுக்காக செல்லும்போது ஒரு இரத்த பரிசோதனை செய்யச் சொல்லுவார்கள்.  சராசரிக்கும் குறைவாக அப்போது உங்களுக்கு இரத்தசிவப்பணுக்கள் குறைவாக இருந்தால், அல்லது ஹீமோக்ளோபின் அளவுகள் குறைவாக இருந்தால் வேறு சில பரிசோதனைகள் மூலம் அதற்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டறிவார்.

எனவே கர்ப்பமாக நீங்கள் இருந்தாலோ, அல்லது கர்ப்பமாக முயற்சி செய்து வந்தாலோ, இரும்பு, போலிக் அமிலம், வைட்டமின் பீ 12 ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள்.  முன்னதாகவே அவற்றின் அளவுகளை பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.  நீங்களாகவே ஒரு முடிவெடுத்து செயல்படுதலை தவிர்க்கவும்.