6 மாதத்துக்குப் பின் தாய் பால் பலன்கள்

6 மாதத்துக்குப் பின் தாய் பால் பலன்கள்

 

ந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

குழந்தை பிறந்ததும் முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு வேகமான வளர்ச்சியை அளிப்பதுடன், போதுமான ஊட்டச் சத்துக்களையும் வழங்குகிறது. போதுமான வைட்டமின்களையும், ஆன்டிபாடிகளையும் கிடைக்கச் செய்து, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஆனால் ஆறு மாததுக்குப்பின் தாய்ப்பாலை நிறுத்தும் போது மேற்கண்ட அத்தனை பலன்களையும் உங்கள் குழந்தை இழந்துவிடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

குழந்தைகள் நலனை கவனிக்கும் பலர் முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் பற்றி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே சமயம் 6 மாதங்களுக்குப் பிறகும் இந்தப் பலன்கள் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மேலும் நீட்டிக்கப் பட வேண்டும். இது மிகவும் அவசியமானது.

6 மாதங்களுக்குப் பிறகும், தொடர்ந்து உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் சத்துக்களும், அறிவு வளர்ச்சிக்கான வைட்டமின்களும் தேவைப்படுகின்றன. எனவே குழந்தை திட உணவை சாப்பிடத் தொடங்கிய பிறகும் கூட தாய்ப்பாலைத் தொடர்வது அவசியம்.

திட உணவு போதுமானதா?

6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளை திட உணவுக்கு பழக்கப்படுத்துகிறோம். என்றாலும், ஊட்டச் சத்துக்கான தேவையை தாய்ப்பால் தான் பூர்த்தி செய்து வருகிறது. அமெரிக்கன் அகாடமி ஆப் பியாதிரேஷியஸ் (ஏஏபி) படி, நீங்கள் உங்கள் குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். அதே சமயம் 6 மாத முடிவில் உடனடியாக திட உணவை கட்டாயம் அளிக்கத் தொடங்க வேண்டும் என சிபாரிசு செய்துள்ளனர். தாய்பால் அளிக்கும் போது குழந்தை பெறும் ஊட்டச்சத்துக்கு திட உணவு மேலும் வலு சேர்க்கிறது.

திட உணவில் இல்லாத பல சத்துக்கள் தாய் பாலில் உள்ளதால், 6 மாதங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து நிறுத்தாமல் தாய் பால் தருவது அவசியம் என அமெரிக்கன் அகாடமி ஆப் பியாதிரேஷியஸ்   பரிந்துரைக்கிறது. மேலும் வேறு விதமான மருத்துவப் பரிந்துரை எதுவுமில்லை எனில் தொடர்ந்து 12 மாதங்களுக்கு தாய் பால் தரலாம் எனவும் அந்த அகாடமி பரிந்துரைத்துள்ளது.

6 மாதங்களுக்குப் பின் தாய் பாலின் பலன்கள் மகத்துவம் வாய்ந்தவை. அதனால்தான் உலக சுகாதார நிறுவனமும்(WHO), குழந்தைகள் நலனுக்கான யூனிசெப் நிறுவனமும் (UNICEF) உலகம் முழுவதும் தாய்பால் அளிக்கும் காலத்தை மேலும் விரிவுபடுத்துவது   குறித்து, விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் பல்வேறு முகாம்களை நடத்தி வருகின்றன. மேற்கண்ட அமைப்புகள் முதல் 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்பால் ஊட்டவேண்டும் என பரிந்துரைக்கிறது. அதன் பிறகும் தாய் பால் அளித்தல் தொடர வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது குழந்தைக்கு தாய்பால் அளிக்க வேண்டும் என விரும்புகிறது. யூனிசெப் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தாய் பால் ஊட்டுவது தாய்க்கும், சேய்க்கும் நலம் எனக் கூறுகிறது. எனவே உங்களால் இயன்றால் 2 வயது வரை தாய்பால் அளிக்கலாம்.
6 மாதங்களுக்குப் பிறகு தாய்பால் எவ்வாறு பலனளிக்கிறது?

தாய்பாலில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது சத்துக்கள் உட்பட பல சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளின் வேகமான வளர்ச்சிக்கு உதவுவதுடன், அதிக சத்துக்களையும் வழங்குகிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.  மேலும் உங்கள் குழந்தையின் கழுத்துப்பகுதிக்கும் பல் வேறு நிலைகளில் அசைவுப் பயிற்சியை வழங்குவதுடன், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளையும் வலுவாக்குகிறது

அறிவு வளர்ச்சி:

குழந்தைகளின் உடலுக்கான ஊட்டச் சத்துக்களை மட்டும் தாய்பால் வழங்குவதில்லை. மேலும் இது குழந்தைகளின் அறிவாற்றலையும் அபிவிருத்தி செய்கிறது. ஒரு ஆராய்ச்சி என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தாய்பால் ஊட்டுவதால் ஒரு குழந்தை 5 ஆண்டுகளுக்கான முன்னேற்றத்தைப் பெறுகிறது: பிஜே குயின் மற்றும் அவரது குழுவின் ஒரு கூட்டான ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: மனித பாலில் டிஎச்aeஏ மற்றும் மூளை வளர்ச்சிக்கான அத்தியாவசியமான பிற உயிர்மைக் கூறுகள் உள்ளன. இந்த கூறுகள் மாட்டுப் பாலிலோ அல்லது குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பார்முலா பாலிலோ இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு முறை:

உங்கள் குழந்தை சரியான ஆரோக்கியத்தை அடைய விரும்புகிறீர்களா? பொதுவான சளித் தொல்லை, ஒவ்வாமை, காது தொற்றுகள், அதிக அளவிலான சுவாசப் பிரச்சினைகளிலிருந்து விடுபெற வேண்டுமா? நல்லது. இதற்கு ஒரே தீர்வு தாய்ப்பால்தான். தாய்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், தொடர்ச்சியான நோய் களிலிருந்து வேகமாக குணப்படுத்துகிறது. தாய்பால் குழந்தைகளின் இறப்பை மட்டும் தடுக்கவில்லை. இது மேலும் டையப்பட்டீஸ் , உடல் பருமன் மற்றும் ஆஸ்த்மா போன்ற நோய்களையும் எதிர்காலத்தில் வராத வகையில் தடுக்கிறது.

மேம்பட்ட செரிமானம்:

6 மாதத்துக்குப் பின் குழந்தை திட உணவு எடுத்துக் கொண்டாலும் கூட தாய்பால் அளிப்பதை நிறுத்தக் கூடாது. ஏன் என்றால் தாய்பால் திட உணவை ஜீரணிக்க வைப்பதுடன், மலச்சிக்கலையும்  தடுக்கிறது. எனவே சத்துக்காக மட்டுமே பால் அளிப்பதாக நினைக்க  வேண்டாம். மற்ற உணவு முறைகளையும் எளிதாக்குகிறது.

தாய்பால் பல் வலியை தடுக்கிறது:

குழந்தைகள் சுய அறிவு பெறும் வரை, சந்திக்கும் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க பிரச்சினை பல் வலி. இது போன்ற சமயங்களில் திட உணவு சாப்பிடுவதையோ அல்லது தாய்பால் அருந்துவதையோ கூட குழந்தைகள் நிறுத்திவிடுகிறது. என்றாலும் இது போன்ற நேரங்களில் தாய்ப்பால்தான் மிருதுவான உணவை குழந்தைகளுக்கு வழங்குவதுடன், பல் வலிக்கான நிவாரணியாகவும் உள்ளது. எனவே இதனால் நாம் பயப்படத் தேவையில்லை.

தாய் பால் மூலம் உங்களுக்கு எவ்வாறு 6 மாதங்களுக்குப் பிறகும் பயன் கிடைக்கிறது?

பிணைப்பு:

குழந்தைக்கு நீங்கள் பால் ஊட்டும் போது ஒரு தன்னிகரற்ற அனுபவத்தை உணரலாம். இந்த உணர்வு குழந்தைக்கும் உங்களுக்குமிடையே ஒரு பிணைப்பை உண்டாக்குகிறது. நீங்கள் 2 வருடங்களுக்கு தொடர்ந்து பால் அளித்து வந்தாலும் கூட இந்த உணர்வு குறையாது. இந்த பிணைப்பு எந்த குறுக்கீட்டிலிருந்தும் தொடர்ந்து பால் அளிப்பதை நிறுத்த முடியாது. இந்த இயற்கையான உணர்வுகள் தாய் என்ற உறவுடன் பெருமை கொள்ளச் செய்கிறது.

புற்றுநோய் ஆபத்து குறைவு:

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு, தாங்கள் எங்கே தாய் வழி புற்று நோய்க்கு ஆளாகுவோமோ என்ற பயம் உண்டு. ஆனால் இந்த பயம் தாய் பால் ஊட்டுவதன் மூலம் குறைகிறது.  கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது. இதனால் நீங்கள் ஒரு ஆரோக்கியமான தாயாக வாழலாம்.

பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம் குறைகிறது:

பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம் தாய்மார்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இந்த மன அழுத்தம் நோயால் துன்புற்று சீர்குலைவு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டு, மன அழுத்தம் உண்டாகிறது. ஆனால் 6 மாதத்திற்கும் மேல் நீங்கள் உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து பால் கொடுக்கும் போது இந்த பயம் குறைந்து விடுகிறது.

இது மலிவானது

பார்முலா பாலுடன் ஒப்பிடும் போது தாய்பால் மிகவும் மலிவான ஒன்றாகும். இதில் பார்முலா பால் பயன்படுத்தும் போது வரக் கூடிய ஒவ்வாமை பிரச்சினைகள் இல்லை. பார்முலா பாலில் அடங்கியுள்ள உள் பொருள்கள் இதில் இல்லை. எனவே கவலை வேண்டாம். இது மிகவும் மலிவானது. நல்லது.

6 மாதங்களுக்குப் பிறகு சந்திக்கும் சவால்கள்

6 மாதங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து தாய்ப் பால் கொடுப்பது உங்களுக்கும், குழந்தைக்கும் நல்லது. ஆனால் சில நேரங்களில் இது சரியான முடிவல்ல என நினைத்து, நீங்கள் பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளவும் முடிவு செய்யலாம். வாழ்க்கையில் நாம் காணும் உண்மை நிலவரப்படி, தொடர்ந்து நாம் செய்யும் நன்மைகள் கூட கூட சோர்வின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்றன. தாய்பால் அளிப்பதும் அதற்க்கு விதி விலக்கல்ல. அதிஷ்ட்டவசமாக எவ்வளவு சவால்களை சந்தித்தாலும் 6 மாதங்களுக்குப் பிறகும் தாய்ப்பால் தொடர்ந்து அளிப்பதுதான் சரியானது. எனவே தாய்ப்பாலின் மகத்தான பலன்களைக் கருதி நீங்கள் தொடரலாம். இங்கே பல சவால்கள் இருந்தாலும் அவற்றை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.

பொது இடங்களில் தாய்பால்

6 மாதத்துக்குப்பின் தாய் பால் அளிக்கும் காலத்தை நீட்டிக்கும் போது உங்கள் பிரசவ கால விடுமுறை முடிந்திருக்கலாம். எனவே நீங்கள் பொது இடங்களில் குழந்தைக்கு பால் அளிக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். இது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் இல்லையா?

பொது இடங்களில் பலருடைய பார்வைக்கு உள்ளாகும் போது ஒரு சங்கடத்தை உணர்வீர்கள். அப்போது பார்முலா பால் அளிக்கலாமா என யோசிப்பீர்கள். அது கையில் இல்லாவிட்டால் ஏதேனும் ஓட்டலுக்கு சென்று பாலூட்டலாம் என நினைப்பீர்கள். சில ஓட்டல்களில் இந்த வசதி இல்லாமல் உள்ளது. இது போன்ற சூழ் நிலைகளில் பூங்கா போன்ற உங்களுக்கு உகந்த பொது இடம் தென் பட்டால் ஒரு துப்பட்டா மூலம் மறைத்தவாறு குழந்தைக்கு பால் ஓட்டலாம்.

கடி மற்றும் காயங்கள்

குழந்தைக்கு பால் கொடுக்கும்போது சில சமயங்களில் குழந்தை கீறும் போதும், கடித்து விடும் போதும் மார்பகங்களில் கடி மற்றும் இலேசான காயங்கள் ஏற்படலாம். இவை சாதாரண கீறல்களாகவோ, சிறிய காயமாகவோ இருக்கலாம். இதை தாய்மார்கள் வித்தியாசமாக சமாளிப்பார்கள். சில சமயங்களில் பால் போதும் என குழந்தைகள் கருதும் போது இவ்வாறு நேர்வதுண்டு. ஆனால் சரியான நிலையில் அமர்ந்து பால் அளிக்காவிட்டால், குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கும் போதும் இவ்வாறு நேர்வதுண்டு. எனவே நாம் அமரும் நிலை, அல்லது குழந்தைகள் அமரும் நிலையை மாற்றிக் கொண்டோ, சிறிது நேரம் இடை வெளி  கொடுத்தோ இது போன்ற சவால்களை சமாளிக்கலாம்.

நர்சிங் பிரச்சினைகள்

குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு, தாய்பால் தொடரும் போது சிறிய அளவிலான பராமரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குழந்தைக்கு கொஞ்சம் சுய அறிவு வளரத் தொடங்கியதும், பொதுவாக தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சினைதான் இது. சில சமயங்களில் தாய்பால் நிறுத்தப்படும் சமயங்களில், குழந்தை சுயமாக உணவை எடுத்துக் கொள்ளும் நிலையில் ஆரம்பத்தில் தாய்மார்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, பராமரிப்பு பிரச்சினைகள் தொடங்குகின்றன. தொற்றால் குழந்தைக்கு காதுவலி ஏற்படும் போதும், பால் குடிக்கும் நேரங்களிலும் இந்தப் பிரச்சினை வருகிறது.  பல் முளைக்கும் போது குழந்தைகள் திட உணவு சாப்பிடுவதை மறுக்கின்றன.

இது போன்ற நேரங்களில் நீங்கள் பால் அளிக்கும் நேரங்களை மாற்ற வேண்டும். குழந்தை சோர்வாக இருக்கும் போதோ, தூக்கத்திலிருந்து எழுந்த உடனேயோ அல்லது தூங்கும் போதோ பால் அளிக்கலாம். குழந்தைக்கு தேவைப்பட்ட போதும்  அளிக்கலாம். மிக முக்கியமானது என்னவென்றால் பராமரிப்பு பிரச்சினை என்பது ஒரு அறிகுறிதான். இதற்க்கான காரணத்தை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து சரிப்படுத்திக் கொள்ளலாம்.
தீர்வு:

தாய்பால் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்க்கான உறுதியை அளிப்பதால் இது ஒரு அவசியமான பழக்கமாகும். தாய்பால் ஊட்டுதல் மற்றும் குழந்தையை சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் போனசாக உங்கள் ஆரோக்கியமும் கூடுகிறது. பால் ஊட்டும் அதே சமயத்தில், சரியான நேரத்தில் திட உணவை அறிமுகப்படுத்தும்போது, பார்முலா பாலுக்காக நீங்கள் ஆயிரக்கணக் கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டாம்.