காஃபின் மற்றும் தாய்பாலூட்டுதல்

காஃபின் மற்றும் தாய்பாலூட்டுதல்

 

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

நீங்கள் தாய் பால் ஊட்டுபவரா? நீங்கள் காபி, டீ, சாக்கலேட் அல்லது கோலா விரும்பிகளா?

ஆம், எனில் மேற்கண்ட பொருள்களில் அடங்கியுள்ள அபாயங்களை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. மேற் கண்ட அனைத்திலும் காஃபின் உள்ளது, இது பாலூட்டும்போது உங்களையும், உங்கள் குழந்தையையும் பாதிக்கிறது.

காஃபின் உள்ள பொருள்களை நீங்கள் சாப்பிடும் போது அது உங்கள் தாய்பால் மூலம் வெளியேறி உங்கள் குழந்தையையும் காஃபின் அடைகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தையும் உங்களுடன் சேர்ந்து காபி அருந்துகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அது ஒரு கப் அளவுக்கு மட்டுமல்ல, நீங்கள் அளிக்கும் தாய் பால் முழுவதிலும் அதிக அளவில் கலந்து குழந்தைக்கு செல்கிறது. சின்னஞ் சிறிய குழந்தை இந்த காபியை ஏற்றுக் கொள்வதன் மூலம் பலவிதமான தேவையற்ற தொல்லைகளுக்கு ஆளாகிறது.

காபின் இரத்தத்தில் தங்கும்  காலம்
வயது காலம்
பிறந்த குழந்தை 97.5 மணி நேரம் வரை
3 – 5 மாதங்கள் குத்து மதிப்பாக 14 மணி நேரம்
6+ மாதங்கள் 2.6 மணி நேரம்
பெரியவர்கள் 4.9 மணி நேரம்
குறிப்பு : Hale 2017

 

மேலே உள்ள அட்டவணையில், குழந்தையின் இரத்த ஓட்டத்தில் தங்கும் காஃபின் காலம் பெரியவர்களுடன் ஒப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.  காபின் இரத்த ஓட்டத்தில் இருந்து முற்றிலும் மறைந்து விடுவதற்கு முன்பு அதன் ஆரம்ப மதிப்பில் பாதிக்கும் குறைவாக காஃபின் எவ்வளவு உள்ளது என்பதை இது குறிக்கிறது. இது பெரியவர்களுக்கு 4.9 மணி நேரம். அதே சமயம்  ஒரு புதிய பிறந்த குழந்தையின் உடலில் காஃபின் அளவு 97.5 மணி நேரம் வரை உள்ளது.. எல்லா குழந்தைகளுக்கும் காஃபின் குறித்த அதே உணர்திறன் இல்லை. ஒரு சின்னஞ் சிறிய குழந்தையின் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு நாளைக்கு இது நீடிக்கிறது என்பதை நாம் மேற்கண்ட அட்டவணை மூலம் புரிந்து கொள்ளலாம்.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களில் அதிகம் பேர் காபி குடித்தாலும் குறைவான அளவில்தான் குடிக்கிறார்கள். ஆனால் இவ்வாறு குடிப்பவர்கள் மிதமான அளவிலேயே எடுத்துக் கொள்கிறார்கள். 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் வயதான குழந்தைகளை விட அதிக உணர்திறன் கொண்டவை. கர்ப்ப காலத்தில் காஃபின் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ந்த பிறகும் கூட அவர்களுக்கு காபின் குறித்த உணர்திறன் குறைவாகவே உள்ளது.  

பிற அபாயங்கள்

  • நீண்ட காலமாக காபி குடிக்கும் பழக்கம் அல்லது தொடர்ச்சியான காபி குடிக்கும் பழக்கத்தால் தாய் பாலில் உள்ள இரும்புச் சத்து குறைகிறது. ஒரு குழந்தையின் சாதாரண வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு தாய் பாலில் இரும்பு சத்து மிகவும் அவசியம்.
  • காஃபின் ஒரு குழந்தைக்கு ஆற்றலை அதிகரிக்கிறது  என்றாலும் அதுவே சிக்கலும் ஆகி விடுகிறது. குழந்தையின் உடலில் அதிக அளவு காபின் அதிகரிக்கும் போது, எரிச்சலடைவது மட்டுமல்லாமல் அடிக்கடி தூக்கத்தையும் கெடுத்துக் கொள்கிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

அதிக அளவு காஃபின் உட்கொள்வதை எப்படித் தெரிந்து கொள்வது?

நீங்கள் காபி சாப்பிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்கள் தாய் பாலில் கலந்த ஒரு சதவீத காபின் உங்கள் குழந்தைக்கும் சென்று விடுகிறது. இப்போது நீங்கள் அதிக அளவில் காபின் எடுத்துக் கொண்டிருப்பதை முதல் ஆளாக உங்கள் குழந்தையே சொல்லும். குழந்தையின் அணுகுமுறைகளில் எப்போதுமில்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டு அது அதிக அளவில் எரிச்சல், கவலைப்படுவதை காணலாம். குழந்தைக்குக்கு  பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய காஃபின் அளவு குறிப்பிட்ட குழந்தையையும், அதன் வயதையும் ஆரோக்கியத்தையும் பொறுத்து மாறுபடுகிறது. ஒரு நாளைக்கு 300-750 மி.கி / அளவுக்கு காஃபின் உட்கொள்ளலாம் என பல்வேறு ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.

இது தாயின் உடல், காஃபினை எவ்வளவு விரைவாகவும் திறமையாகவும் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது. கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான காஃபின் வரம்பு பெரும்பாலும் ஒரு நாளைக்கு 300மி.கி  காஃபினைக் குறிக்கும். அதாவது (சுமார் 2 கப் காபி, கரைப்பதை பொறுத்து). காஃபினைக் கொண்டிருக்கும் ஒரே பானம் காபி மட்டுமே இல்லை. சாக்லேட், தேநீர், சோடா, சக்தியளிக்கும் பானங்கள் போன்றவற்றிலும் இது காணப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு நீங்கள் சிறிய அளவே சாப்பிட்டாலும், அது உங்களுக்குத் தெரியாமல் பெரிய அளவில் உடலில் காஃபின் அளவைக் கூட்டுகிறது.

அதிக காஃபினை உட்கொண்டால் என்ன செய்வது?

அதிக காஃபினை நீங்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க எளிய தீர்வுகள் உள்ளன. முதலில் அதன் அளவையும்,  குடிக்கும் நேரங்களையும் குறைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் குழந்தை ஒரு சிறிய அளவாவது காபியை ஏற்றுக் கொண்டால்  நீங்கள் காபி குடிப்பதை ஓரளவு தொடரலாம், ஆனால் அதிக எச்சரிக்கையுடன் அதிக அளவில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் காபி சாப்பிடுவதை உங்கள் குழந்தை எதிர்வினை செய்யும் போது, நீங்கள் காபி குடிக்கும் அளவை குறைக்க முயற்சிக்கவும். இந்த பழக்கத்தை குறைக்க காபிக்கு முன்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்.  

குறிப்பு: இந்த விஷயத்தில் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது.

காஃபிக்கு பதிலான மாற்றுப் பொருள்கள்

ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பது என்பது எளிதான வேலை அல்ல, எனவே ஒவ்வொரு  நாளும் உங்கள் தினசரி கடமைகளை செய்யத் தேவையான ஆற்றலை அதிகரிக்க காபி தேவைப்படுகிறது. பாலூட்டும் போது வழக்கமாக உங்களுக்கு உண்டாகும் தாகத்தைவிட பாலூட்டும் காலத்தில் உங்கள் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். எனவே   காஃபினேட்டட் பானங்களை குடிக்கத் தூண்டப்படுவீர்கள். இது போன்ற சமயங்களில் இதற்கு பதிலாக வேறு பானங்களை குடிக்க முயற்சிப்பது நல்லது. காஃபின் நீக்கப்பட்ட டீ அல்லது காபியை அருந்தலாம். அல்லது எலுமிச்சை, லைம் கலந்த பானங்கள், பாதியளவு கொழுப்பு நீக்கப்பட்ட பால், அல்லது சாதாரண பால் ஆகியவற்றை காபிக்கு பதிலாக அருந்தலாம். மேலும் நீங்கள் சூடான பானங்களையும், மிதமான அளவில் குளிரூட்டப்பட்ட பானங்களையும், சர்க்கரை சேர்க்கப்படாத பழக் கூழ் வகைகளையும்  மாற்றாக எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். மூலிகை டீயையும் அருந்தலாம். ஆனால் அதில் காபின் அடங்கியுள்ளதா என்பதை அதன் பாக்கெட் மீதுள்ள விவரங்களைக் கொண்டு சரி பார்த்து பிறகு அருந்தவும். உதாரணமாக- சிவப்பு புஷ் தேயிலை காஃபினைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் கிரீன் டீயில் இது உள்ளது.

நீங்கள் எப்போதாவது காபி அல்லது தேநீர் வேண்டுமென்று விரும்பினால், அதை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டாம் . அதன் பாதகமான விளைவுகளை குறைக்க, கீழ் கண்ட ஆலோசனைகளைப்  பின்பற்றவும்:

  • குறைவான அளவில், நேரத்தில் தேயிலை நீர் குடிக்கவும்.
  • ஐந்து நிமிடங்களுக்குப் பதிலாக ஒரு நிமிட அளவுக்கு உங்கள் தேநீர் பையை பாலிலோ அல்லது தண்ணீரிலோ ஊறவிடவும். இதனால் காஃபின் அளவு பாதியாக குறையும்.
  • இன்சன்ட் காபியில், காஃபின் சற்று குறைவாக இருப்பதால், சாதாரண காபியிலிருந்து இதற்கு மாறலாம்.

.● நீங்கள் ருசியை விரும்பாவிட்டால், முழு ஸ்பூனுக்கு பதிலாக அரை டீஸ்பூன் அளவு மட்டுமே காபித் தூளை பயன்படுத்தலாம்.

குழந்தை வளர்ந்த நிலையில், பாலூட்டும் காலம் முடிந்த பிறகு நீங்கள் வழக்கம் போல் டீ, காபி, சோடா, சாக்கலேட்டுகளை மீண்டும் தொடரலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருக்கும் நீங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் தேவைகளுக்கு மட்டுமே எப்போதும்  முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் காபி, சோடா, சாக்லேட் போன்றவற்றை முழுமையாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஒரு சிறிய அளவில் நீங்கள் அவற்றை கையாள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பதை மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.