மகப்பேறு காலத்தில்  உண்ண வேண்டிய உணவுகள்:

மகப்பேறு காலத்தில்  உண்ண வேண்டிய உணவுகள்:

 

மகப்பேறு காலத்தில், பெண்ணின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. அந்நேரத்தில் வழக்கத்தை விடவும் இருமடங்கு உண்ண வேண்டும் என ஒரு எண்ணம் பலரின் மனதில் உள்ளது. ஆனால் அது தவறாகும். உங்களின் உடலில் பசியின் அளவு எவ்வளவு உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் உணவு உண்டால் போதும். நீங்கள் உண்ணும் வைட்டமின்களும், தாதுக்களும் உங்கள் குழந்தையை வலிமையாக்க உதவும். எனவே சரியான உணவு வகைகளை உண்பது அவசியம். எனவே என்ன உண்ண வேண்டும் என்பதை முதலில் பார்ப்போம்.

அதிகமாக உண்ண வேண்டியவை :

பழங்கள்:

சமைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளை விடவும், பழங்களை உண்ணுதல் நன்மை பயக்கும். ஜீரணத்தை தூண்டும், ஹார்மோன்களின் ஆரோக்கியத்தை பேணும் நொதிகள் (Enzymes) பழங்களில் உள்ளன.  அவற்றை உணவு உண்பதற்கு முன்பு உண்பது சிறந்தது.  மேலும், அந்த அந்த பருவ காலங்களில் மற்றும் இடத்தில் பழங்கள், மலச்சிக்கல் உண்டாக்குவதையும் தடுக்கிறது. கிடைக்கும் பழங்களை உண்ணுதல் சிறப்பு. வாந்தி வருவது போன்றோ, அஜீரணமாகவோ நீங்கள் உணர்ந்தால் , உடனடியாக ஒரு பழத்தை உண்ணுவது சிறந்த தீர்வாகும்.

காய்கள் :

காய்களின் முக்கியத்துவம் நமக்கு தெரியும். ஆனால் அதிவேகத்தில் ஓடும் உலகத்தில் அவை தவிர்க்கப்படுகின்றன.   கீரைகள், மற்றும் பச்சை காய்கறிகள் தங்களிடத்தில் அதிக அளவுகளில் இரும்பு மற்றும் புரதச்சத்துகளை வைத்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் இரத்த சோகையை போக்கும் (இந்திய பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது). மேலும் கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சிக்கான ஊட்டங்கள் காய்களில் உள்ளன.

மற்றவை :

பாதம் முந்திரி, வால்நட் போன்றவற்றில் அதிக அளவில் புரதமும், நல்ல கொழுப்புகளும் உள்ளன. மகப்பேறு காலத்தில் தாயின் உடலுக்கு இவை அவசியம். மேலும் அவற்றில் அதிக அளவில் போலிக் அமிலம் உள்ளது. இரவு உணவுக்கு பிறகு இவற்றை உண்டால், உடலில் போலிக் அமிலம் மிக எளிதாக போய் சேர்வதுடன், கொழுப்புகளை எளிதாக உடலால் உடைக்க இயலும்.

சமன்படுத்தப்பட்ட உணவு என்றால், சுவை இல்லாமல் உணவு உண்பது அல்ல. நம் தேவைக்கு ஏற்றவாறு, சரியான உணவுகளின் அளவுகளை அதிகப்படுத்துதல் ஆகும். அதன் மூலம் நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட உனவுகளின் அளவுகளை குறைத்து விட்டு சரியான உணவுகளில் நம் சுவைக்கு ஏற்றவாறு வெவ்வேறு வகைகளை உண்மையில் நன்மை.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

சமைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டை :

இந்தியாவில் முட்டையை பச்சையாக உண்பது உடலுக்கு நல்லது என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அவ்வாறு உண்பது மிகவும் கெடுதலாகும். அவற்றில் சால்மோநெல்லா(Salmonella) என்னும் கிருமி தொற்று இருப்பின் உண்பவருக்கு காய்ச்சல், வாந்தி, தலைசுற்றுதல் ஏற்படலாம்.

வறுத்த உணவுகள் :

இந்திய உணவுகளில் வறுத்த உணவுகள் எப்போதும் சுவையாக இருக்கும். ஆனால் உடலுக்கு அவை கெடுதலாகும். அவற்றை உண்பதால் நமது வலிமை அதிகரிக்காது. உடல் எடையும் அஜீரணமும் தான் அதிகரிக்கும். அவற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே சுவையாக இருப்பினும் அவற்றை தவிர்த்தல் நலம். மேலும் அவற்றால் பின்னாளில் ரத்தகுழாய்களில் அடைப்புகளும் ஏற்படலாம். அவற்றை உண்பதால் சதை மற்றும் நரம்புகள் தடித்து, அதன் காரணமாக பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படலாம்.

சர்க்கரை நிரம்பிய உணவுகள் :

உடலில் உடனடியாக சக்கரை தேவைப்படும் பொழுது சர்க்கரை நிரம்பிய உணவுகள் சரியான தேர்வாக இருக்கும். இருப்பினும் சர்க்கரை குறைவாக உணவு உண்பது நல்லதாகும்.  சர்க்கரை நோய், மற்றும் உயர்ரத்த அழுத்தம் அதிக அளவில் சர்க்கரை கொண்ட உணவுகளை உண்பதால் உண்டாகின்றன. மேலும் உங்கள் குழந்தைகளையும் இவை பாதிக்கும். எனவே நீங்கள் உண்ணும் இனிப்புகளின் அளவை கட்டுக்குள் வைப்பது நல்லது. அவற்றை தவிர்த்து, சக்கரை  உணவை உண்ண ஆவல் எழும்போது பழச்சாறுகள் போன்று மாற்று உணவுகளை எடுக்கலாம்.

மது மற்றும் காபி :

எந்த அளவாக இருந்தாலும் மது குழந்தையின் நலனுக்கு கெடுதல் விளைவிக்கும். அவற்றை பருகுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் உடலில் குறைபாடு ஏற்படும். எனவே அதனை முற்றிலுமாக தவிர்த்தல் அவசியம். மேலும் மருந்துகள் எடுப்பதற்கு முன்பும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து பின்பு உண்ண வேண்டும். காபி குடிப்பது அனுமதிக்கப்படுகின்றது. இருந்தாலும் அதனால் தலைவலி மற்றும் தூக்கமின்மை ஏற்படும் என்பதால், எப்போதாவது குடிப்பது நலம். உங்கள் தூக்கம் கெட்டால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

முடிவாக நீங்கள் எது உண்பதாக இருந்தாலும், அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்புடையதாக ஆரோக்கியமானதாக இருத்தல் அவசியம். என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பது அவசியம். அதே போன்று சிலநேரங்களில் நீங்கள் என்ன உண்ணக்கூடாது என்பதும் முக்கியம். மகப்பேறு காலத்தில் என்ன செய்ய வேண்டும், கர்ப்பம் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் உங்கள் மருத்துவரை உடனடியாக அணுகவும்.