பாலூட்டும் போது தாய்மார்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள்

பாலூட்டும் போது தாய்மார்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள்

 

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

தாய்மைப் பருவம் என்பது கொடையுணர்வு கொண்ட மகத்தான சாதனையை நிகழ்த்தும் அற்புதமான ஒரு கால கட்டமாகும். உங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினராகிய உங்கள் குழந்தையை  பராமரிப்பதில் தாய்ப்பாலின் பங்கு மிகவும் முக்கியம். உங்கள் குழந்தை நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இத்தகைய  பாலூட்டலின் போது பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் உரிய சான்றுகளுடன் கீழே கூறப்பட்டுள்ளது:

 1. 1. முலையழற்சி

பாலூட்டும் காலக் கட்டத்தில் மருத்துவ நிலையில் மார்பகங்கள் சாதாரண அளவைவிட மிகப் பெரியதாகவும், வலி மிக்கதாகவும், வெப்பம மிக்கதாகவும் மாறுகிறது.   

இதனால் பால் குழாய்கள் அடைபட்டு, பால் வெளியேற முடியாமல் போகிறது. பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் இந்தப் பிரச்சினை மிகவும் மோசமாகி உங்கள் சுகாதாரம் பாதிக்கப்படுவதற்கு முன்பு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

முலையழற்சி உண்டாவதற்கான பொதுவான அறிகுறிகள் பல உள்ளன. இந்த அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு நோய் முற்றுவதற்கு முன் உரிய மருத்துவ உதவிகளைப் பெற்று குணமடைவது நல்லது.

சில பொதுவான அறிகுறிகள்:

 

 • அதிக அளவில் சிவந்த மற்றும் உணர்திறன் கொண்ட  தோல்

 

 • காய்ச்சல்
 • கடுமையான ஃப்ளூ காச்சல் இருப்பதை போன்ற உணர்வு
 • சோர்வாகவும், சுகவீனமாகவும் இருப்பதை உணர்தல்

இந்த சிக்கல்களில் ஏதேனும் இருந்தால், இந்த நிலைமையை கையாள சில வழிகள் இருப்பதால் கவலை வேண்டாம். உங்களுக்காக சில பயனுள்ள உதவிக் குறிப்புகள் உள்ளன:

 • தொடர்ந்து தாய்ப்பால் கொடுங்கள்.
 • ஓய்வெடுக்கவும், நன்கு தூங்குங்கள்
 • நீங்கள் வெப்ப ஒத்தட  சிகிச்சையை செய்து கொள்ளலாம். ஒரு சூடான துண்டு அல்லது துணி எடுத்து உங்கள் மார்பகத்தின் மேல் வைத்து மிதமாக ஒத்தடம் கொடுக்கவும்.  சூடான தண்ணீரிலிருந்து அல்லது துணியிலிருந்து வெளிப்படும் வெப்பத்தால் மார்பிலிருந்து பால் எளிதில் வெளியேற உதவுகிறது.
 • நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் முறையை கவனிக்க உங்கள் நர்ஸ் அல்லது மருத்துவச்சிடம் கேட்கவும். சில நேரங்களில் குழந்தையின் நிலைப்பாடு  சரியாக இல்லை என்றால், ஒரு சுகாதார வழங்குநரின் உதவி தேவைப்படும்.
 • உங்கள் குழந்தைக்கு உணவளித்த பிறகு, உங்கள் பாதிப்புக்குள்ளான மார்பகம் இன்னமும் அதே நிலையில் இருப்பதாக உணர்ந்தால், அதை உங்கள் கைகளின் உதவியுடன் வெளிப்படுத்தவும்.
 • ஆண்டி பயாட்டிக்  மருத்துவரை அணுகவும்.
 • பாதிக்கப்பட்ட மார்பகங்களை மசாஜ் செய்யவும்.

1.பால் அளிக்கும் நிலைகள்

குழந்தை எந்தவிதமான சிரமும் இல்லாமல், தாயின் மார்பிலிருந்து பால் எடுத்துக் கொள்ளும் வகையில் அதை சரியான நிலையில் அமரவைக்க பின்பற்றக் கூடிய முறைகள் குறித்து இங்கு கூறப்படுகிறது. சில சமயங்களில் சில தாய்மார்களால், குறிப்பிடப்படும் அந்த முறைகளின்படி பால் அளிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.   

பல பாலூட்டுதல் நிபுணர்கள் சிபாரிசு செய்யும் , ” ஸ்கின் டு ஸ்கின் ”  முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன்படி நேருக்கு நேராக உங்கள் குழந்தையின் தாளுக்குள் பால் மிதமான அளவில், வசதியாக அளிக்கப்படுகிறது. இந்த முறைப்படி முதலில் நீங்கள் மார்பகத்தின் மீதுள்ள துணியை வயிறு வரை நீக்கிக் கொள்ள வேண்டும்.     உங்கள் குழந்தையின் ஆடைகளையும் கழற்றிவிட்டு பாதி அளவில் நீங்கள் சாய்ந்த நிலையில் பால் அளிக்க வேண்டும்.

 1. 2. அதிகமான மார்பக பால்

பாலூட்டக்கூடிய பெண்களுக்கு, குழந்தைக்கு தேவையானதை விட அதிக பால் உற்பத்தி ஆகும் பிரச்சினையும் உள்ளது. அதிகப்படியான பால் வழங்கல் பிரச்சனை உங்களுக்கு இருக்கும் போது விரியும் மார்பகங்களால் வேதனையையும், அசௌகரியங்களையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

இது போன்ற சூழ்நிலைகளில் மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளியில் தொடர்ந்து நீங்கள் குழந்தைக்கு பால் அளித்து சமாளிக்கலாம்.  அவ்வாறு அளிக்கும் போது வலது மார்பகம் மூலம் குழந்தைக்கு அடுத்த 4 மணிநேரத்துக்கு பால் அளிக்கவும். இவ்வாறு ஒரே மார்பகம் மூலம் தருவதன் மூலம் வலது மார்பகத்திலுள்ள பால் முழுமையாக வற்றிவிடுகிறது. ஆனால் இப்போது இடது மார்பகத்தில் அதிக அளவில் பால் இருக்கும். அதையும் அடுத்த   4 மணி நேரத்துக்கு உங்கள் குழந்தைக்கு கொடுக்கவும். இதன் மூலம் நீங்கள் நிலைமையை சமாளிக்க முடியும்.

மற்றொரு முறை என்னவெனில்,  ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஒருமுறையாக மார்பகங்களை மாற்றி, மாற்றி பால் வழங்கலாம். இதன் மூலம் இரண்டு மார்பகங்களையும் ஒரே மாதிரியாக  பயன்படுத்தலாம்.

 1. முலை வெடிப்புகள்

தாய்ப்பாலூட்டல் போது, முலைக் காம்புகளில் வெடிப்பு ஏற்படுவதாக பொதுவான புகார் உள்ளது. பல காரணங்களால் இது ஏற்படுகிறது. இதற்கான சில காரணங்கள்:

 • குழந்தையின் வாய் பூட்டை  உங்கள் மார்போடு சரியாக இணைக்க முடியவில்லை என்றால்
 • குழந்தைக்கு கடுமையான தசை இறுக்கம் இருந்தால்
 • உங்கள் முலையில் ஒரு தொற்று இருந்தால்
 • குழந்தையின் வாயில் வெண் புண்கள் இருந்தால் இத்தகைய வெடிப்புகள் உண்டாகின்றன.

சில துளி தாய்பாலை  லாநோலின் கலந்த நிப்பிள் கிரீமுடன் கலந்து முலை வெடிப்புகள் மீது தடவவும். இதில் குணமாகவில்லை என்றால்  உங்கள் மருத்துவச்சி அல்லது மருத்துவரை அணுகவும்.

 1. வாய் புண் தொற்று

வெண் புண்கள் வாய் மற்றும் தொண்டை குழிப் பகுதிகளில் ஏற்படும்  தொற்று ஆகும். இது கேண்டிடா ஆல்பிக்கான்கள் என்று அழைக்கப்படும் ஈஸ்ட்டுகளால் ஏற்படுகிறது. இது குழந்தையின் வாயில் வெள்ளைப் புள்ளிகளை உருவாக்குகிறது. இதனால், குழந்தையின்  தாய்பால் நுகர்வு குறையக் கூடும். சில நேரங்களில், தொற்று குழந்தையிடமிருந்து தாயின் மார்பகங்களுக்கு பரவிவிடுகிறது. குழந்தை மார்பகத்தில் வாய் வைத்து பால் உறிஞ்சும் போது இது வேதனையையும், வலியையும் ஏற்படுத்தும்.

இந்தக் குறையை போக்க குழந்தைகளுக்கு வாயில் சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. மார்பகத்தில் ஏற்படும் தொற்றுக்கு ஆயின்மென்ட் மூலம் சிகிச்சை தரப்படுகிறது. ஆயின்மெண்ட் மருந்தை நீங்களே எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவிக் கொண்டு கைகளை நன்கு கழுவிக் கொள்ளவும்.

 1. மன அழுத்தம்

மன அழுத்தம் மற்றும் பதட்டம் நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மிகுந்த கவலை  மனச்சோர்வு மற்றும் பிற நோய்களுக்கும் வழிவகுக்கும். அதற்கான பல காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில்  ஒரு சில:

 • பிரசவத்திற்கு பின் மனத் தளர்ச்சியுடன் கூடிய  மனப்பான்மை பெண்களுக்கு ஒரு பொதுவான நிகழ்வு ஆகும்.
 • ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் பிரசவத்திற்கு பின் வீழ்ச்சியுறுவதால் இது புதிய தாய்மார்களின் மன நிலையில் ஒரு வித ஊசலாட்டத்தை  ஏற்படுகிறது.
 • உங்கள் பிறந்த குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து அளிப்பது குறித்த பதற்றம் அல்லது கவலை காரணமாகவும் இது ஏற்படலாம்.
 • உங்கள் மனதில் நடக்கும் எந்த தனிப்பட்ட சண்டை அல்லது உணர்ச்சி கொந்தளிப்பாலும்  நீங்கள் குழப்பமடையக்கூடும்.

மிக அதிகமான மன அழுத்தம் உங்களுக்கு பால் உற்பத்தியாவதை நேரடியாக பாதிக்கிறது மற்றும் பால் அளவையும் மாற்றுகிறது.

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

மன அழுத்தத்தை சமாளிக்க பல வழிகள் உள்ளன. வாழ்க்கையில் இருந்து மன அழுத்தத்தை  வெளியேற்றுவதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

 • வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொள்ளுங்கள்.
 • தாய்ப்பாலூட்டுவது உங்கள் குழந்தையிடம் உறவை வளர்க்கவும், பராமரிக்கவும், அன்பு, பாசம் வளரவும் எல்லாவற்றுக்கும் மேலாக தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு வித பந்தத்தை வளர்க்கவும் ஒரு வழியாக உள்ளது.
 • பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த ஒரு சமநிலையான உணவை உட்கொள்ள வேண்டும்.
 • உங்கள் உணவு மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளை ஒழுங்காக நிர்வகிக்க வேண்டும்.
 • போதுமான அளவு தூங்குங்கள். அதன் மூலம் நல்ல மகிழ்ச்சியைப் பெறுங்கள்.
 1. மார்பக வீக்கம்

மார்பக வீக்கம்  அல்லது பால் அடைப்பு  அடிக்கடி ஏற்படும் பிரச்சனையாகும். இது மார்பகங்களில் முழு அளவில் சுரக்கும் பால், மன உறுதியை பொறுத்த விஷயங்களாகும்.

இதற்கு காரணம் என்ன?

பாலூட்டும்போது உங்கள் குழந்தையை ஒழுங்கில்லாமலும், பாதி சாய்வான நிலையிலும் வைக்கக்கூடாது. பால் அளிக்கும்போது உங்கள் மார்பகத்தில் போதுமான காலியிடம் இல்லாவிட்டாலும்  தொற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு, வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது.

உங்கள் முலைக்காம்பை குழந்தைக்கு  அருகில் எடுத்துச் செல்லுங்கள், அதனால் குழந்தை உங்கள் மார்பில் வசதியான நிலையில் இருந்து பால் குடிக்க முடியும்.  இதன் மூலம் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் மார்பிலுள்ள பால் தீரும். இதன் மூலம் பால் தங்குவது மற்றும் மார்பு வீக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

 1. ஒழுங்கற்ற பால் வெளியேற்றம்

பால் சுரப்பிகளிலிருந்து பால் சிறு குழாய்களின் வழியாக மார்பகத்துக்கு வருகிறது. குழாய்களில் உள்ள பால் அவ்வப்போது காலியாக வேண்டும். அவ்வாறு ஆகாமல் பால் குழாய்களில் தேக்கமடைந்தால் பால் சுரப்பில் ஒழுங்கற்ற தன்மைகள் உருவாகும்.

இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு ஒரு எளிய வழி, மார்பகங்களை காலியாக வைத்திருக்கவும். நீங்கள் அணியும் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தளர்த்தியாக அணியவும். இதனால் உங்கள் மார்பகங்களிலிருந்து பால் சுலபமாக வெளியேறும்.