கூடுதல் உணவளித்தல்

கூடுதல் உணவளித்தல்

 

குழந்தை பிறந்ததில் இருந்து, அதற்கு தேவையான அத்தனை ஊட்டசத்துக்கள் சரிவர கிடைப்பதற்கு, அதிக முக்கியத்துவம் அந்த குடும்பத்தில் கொடுக்கப்படும். அதே வேளை தாய்ப்பாலை மிஞ்சிய சத்துமிக்க உணவு முதல் 6 மாத குழந்தைக்கு கிடைக்காது. குழந்தையின் வயது அதிகம் ஆக ஆக, தாய்பால் மட்டுமே அதற்கு போதுமானதாக இராது. இந்த நேரத்தில் தான், கூடுதல் உணவளித்தல் வேண்டியதாகிறது.

கூடுதல் உணவளித்தல் என்றால் என்ன?

குழந்தையின் வளரும் ஊட்டசத்து தேவைகளை தாய்ப்பால் கொண்டு மட்டும் தீர்க்க இயலாத போது, மற்ற உணவுகளும், திரவங்களும் அதற்கு கொடுக்கப்படுவதே கூடுதல் உணவளித்தல் எனப்படும்.

எப்போது கூடுதல் உணவுகளை துவங்க வேண்டும்?

உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் கூறும் சரியான வயது, 6 மாதங்களுக்கு   கூடுதல் உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆனால், கலாச்சாரா வேறுபாடுகள் காரணமாக, 18-24 மாதங்களுக்கு பிறகும் கூடுதல் உணவுகள் துவங்கபடுகிறது. கூடுதல் உணவுகள் தாய்ப்பாலோடு சேர்த்தே வழங்கப்பட வேண்டும் என்பது இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த பருவத்தில் தான் பல நாடுகளில், முக்கியமாக மூன்றாம் உலகநாடுகளில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுரையின் நோக்கம், இந்தியாவில் உள்ள பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை கற்றுக் கொடுப்பதே ஆகும்.

மனதில் கொள்ள வேண்டியவை :

இளவயதிலேயே கூடுதல் உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அப்போது மனதில் கொள்ள வேண்டியையாதெனில்,

  • போதிய அளவு இருத்தல் (வயதுக்கு தகுந்த அளவு)
  • அடிக்கடி கொடுத்தல் (சரியான கால இடைவெளியில்)
  • சீராக இருத்தல் (தன்மை மற்றும் தரம் ஒரே போன்று இருத்தல்)
  • பலவகைகள் இருத்தல் (பலசத்துகள் நிறைந்ததாக இருப்பது)

கைகள் கொண்டு இந்த கூடுதல் உணவுகள் தயாரிக்கப்படுவதால்,  பாதுகாப்பான முறையில் அது தயாரிக்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அவற்றில் கிருமிகள் தாக்காது இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பாத்திரங்கள், அதை தேய்த்து கழுவும் நார், அதற்கான சலவைக்கட்டி, என அனைத்தையும் குழந்தைக்கு என தனியாக வைத்திருப்பது அவசியம்.

எவ்வளவு கொடுக்க வேண்டும்?

குழந்தையின் ஜீரண மண்டலம் மிகவும் சிறியது என்பதால், வயதிற்கு ஏற்ப கொடுக்கப்படும் உணவும், அளவும் இருத்தல் அவசியம். எளிதாக ஜீரணிக்கும் வகையில், காரம் சிறிதும் இன்றி உணவுகளை சமைப்பது அவசியம்.

WHO பரிந்துரையாதெனில், 6 மாதங்களில் இருந்து தாய்ப்பாலோடு சேர்த்து, ஒரு நாளைக்கு 2-3 முறையும், 9-11 மாதங்களில் ஒரு நாளைக்கு 3-4 முறையும், கூடுதல் உணவுகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதே. 12 மாதங்கள் முடிந்த பிறகு, கூடுதல் உணவுகளோடு சேர்த்து சிறிதளவு தீனிகளும் (1-2 பிஸ்கட்டுகள்) கொடுக்கப்படலாம்.(1-2 முறை).

என்ன ஊட்டுவது (6 – 12 மாதங்கள்)

கூடுதல் உணவளித்தலில் வகை வகையான உணவுகள் கொடுப்பது மட்டுமின்றி, அவற்றில் தொடர்புடைய பழக்க வழக்கத்தையும் தெரிந்துக் கொள்ளுதல் அவசியம். குழந்தைகளை கவனித்துக் கொள்கையில், மிகுந்த அக்கறையும், பொறுமையும் அவசியம். பார்த்துக்கொள்பவருக்கு அதன் அழுகைகளுக்கான காரணம், பசியின் அறிகுறி ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.  மேலும் அது உண்ண ஊக்கமளிக்க வேண்டும்.

சந்தையில் குழந்தைகளுக்கு கொடுக்கத்தகுந்த பல இயற்கை உணவுகள் உள்ளன (6-12 மாதங்கள்). வீட்டில் செய்த ராகி, கஞ்சி, அரிசி கஞ்சி, கிச்சிடி,  வேக வைத்த ஆப்பிள், வேக வைத்த வாழை, வேகவைத்த காரட், ஆகியவை குழந்தைக்கு ஏற்ற சத்து மிகுந்த உணவுகளாகும். அரைவாசி ஆரஞ்சு பழச்சாறு சுடு நீரில் கலந்தும், மாதுளைச்சாறு, அல்லது, அரைக்கோப்பை சுடுநீரில் சிறிதளவு துளசி இலைகள் கலந்தும் திரவ உணவாக கொடுக்கலாம்.

அரிசி பருப்பு ஆகியவற்றை அரைத்து, குக்கரில் வேக வைத்து மதிய உணவு அல்லது இரவு உணவாக கொடுக்கலாம். அதனோடு சிறிதளவு உப்பு மற்றும் நெய் கலந்து கொடுத்தால் மேலும் சுவையாக இருக்கும். ஒருநாளைக்கு ஒன்று அல்லது இருவகையான கூடுதல் உணவுகள் மட்டுமே முதலில் கொடுத்து பார்ப்பது சிறந்ததாகும்.

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட நிலையில் உள்ள வெவ்வேறு வயதிற்கான வளர்சிக்கு ஏற்ப சந்தையில் கூடுதல் உணவுகள் விற்கின்றன. நான் -ப்ரோ, லாக்டோ ஜென், செரலாக் ஆகியவை அவற்றில் சில.

சில உணவுகள் சில குழந்தைகளுக்கு ஒவ்வாது (அலர்ஜி) இருக்கலாம். எனவே முட்டை மற்றும் கறி ஆகியவற்றை 12 மாதங்கள் கழித்து குழந்தைக்கு ஊட்டுவது நலம்.

என்ன ஊட்டுவது (12-24 மாதங்கள்)

பல குழந்தைகளுக்கு ஒரு வயதாகும்பொழுது, முதல் பல் முளைத்து, பார்க்கும் அனைத்தையும் கடிக்க முயலுவர். அந்த தருணத்தில், சப்பாத்தி சரியான உணவாக இருக்கும். சப்பாத்தி சிறிது இனிப்பு சேர்க்கப்பட்டது, இட்லி, தோசை, பிஸ்கட், பழுத்தபழம், மசித்த அரிசி பருப்பு, பப்பாளி என அனைத்தும் சரியான உணவாக அமையும்.  குழந்தை உட்கொள்ளும் அளவை பொருத்து, உணவளிக்கும் அளவை அதிகப்படுத்தலாம். அதேவேளை பாலை மறந்து விடக்கூடாது.  சில பெற்றோர், உலர்ந்த பழங்கள் கொண்டு கஞ்சி சமைத்து தீனியாக கொடுப்பர்.

சிறுவயதில் இருந்தே, குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகள் உண்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். நமது நாட்டில் இயற்கை உணவுகள் அதிகம் உள்ளன. எனவே வீட்டில் செய்த உணவுகளை உண்பதையும், செயற்கையாக சமைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பதையும் அறிவுறுத்த வேண்டும்.  முழுமையான உணவுத்திட்டமே ஒரு ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.