உண்பதும் அருந்துவதும் என்ன என்பது முக்கியம்

உண்பதும் அருந்துவதும் என்ன என்பது முக்கியம்

 

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

தனது குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கர்ப்பிணியின் ஆசையாக இருக்கும். அதற்கு தேவைப்படும் அத்துணை செயல்களையும் அவள் பார்த்து பார்த்து செய்வாள். ஆனால், தங்களது தினசரி  மற்றும் சுத்த சுகாதார நடவடிக்கைகள்  மூலம் தனது குழந்தை பாதிக்கப்படலாம் என்பது அனைத்து பெண்களிடமும் இருக்கும் ஒரு பயமாகும்.  தொடர்ந்து மது மற்றும் புகையிலை உபயோகிக்கும் பெண்களுக்கு அவற்றின் மூலம் எந்த அளவிற்கு அவர்கள் குழந்தை அதன் மூலம் பாதிக்கப்படும் என்பது தெரிவதில்லை.

இந்தக் கட்டுரையில், புகையிலை மற்றும் மதுவின் காரணமாக உங்களது குழந்தைக்கு எந்த அளவிற்கு பாதிப்புகள் உண்டாகும் என்பது மட்டுமல்லாது, எவ்வாறு அதனை தடுக்கலாம் என்பதையும் அறிந்து கொள்ள உள்ளீர்கள்.

 உண்பதும் அருந்துவதும் என்ன என்பது  முக்கியம் :

நீங்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் நஞ்சுக்கொடி மூலம் உங்கள் சிசுவை சென்று சேர்கின்றது என்பதை நீங்கள் அறியவேண்டும்.

சத்தான உணவு உட்கொண்டால் குழந்தைக்கும் சத்தான உணவு கிடைகின்றது. மது அல்லது புகையிலை உட்கொண்டால் குழந்தையும் அவற்றை உட்கொள்கிறது.

மகப்பேறு காலத்தில் மது :

மகப்பேறு காலத்தின் துவக்கதில் மது அருந்துவது குழந்தைக்கு  ஆபத்தானது என்பது அனைத்து வல்லுனர்களும் ஒப்புக்கொள்ளும் ஓர் உண்மை. முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் இதயம், மூளை, நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள்  உரு பெறுகின்றன.

எனவே இந்த மாதங்களில் மதுவை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். மேலும் கருத்தரிக்கும் வாய்ப்பையும் மது அருந்துதல் குறைக்கின்றது.

குறைவாக குடிப்பது சரியா?

ஒவ்வொருவர் உடலும் மதுவிற்கு எப்படிப்பட்ட விளைவுகளை கொடுக்கின்றது என்பது வேறுபடுவதால், கருவின் மீது எந்த அளவிற்கு பாதிப்பு மது அருந்துவதன் காரணமாக இருக்கும் என்பது சரிவர அறியப்படவில்லை.

“நான்கு மாத குழந்தைக்கு மது கொடுக்க மாட்டோம் எனக் கூறும் நீங்கள், கர்ப்பமாக உள்ள போது ஏன் மது குடிக்கவேண்டும்?” என்ற வாதமும் முன் வைக்கப்படுகின்றது.

மதுவினை உடலில் உடைக்கும் ஏடீஹெச் என்ற நொதி ஒவ்வொரு பெண்ணிலும் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால், குறிப்பிட்ட அளவு மது, எவ்வாறு ஒரு கர்ப்பிணியை பாதிக்கும் என்பது சரிவர கணிக்கப்படவில்லை.  உங்களில் உடலில் இந்த நொதி குறைவாக இருந்தால், மது உங்களது உடலில் அதிக நேரம் இருக்கும் அதன் காரணமாக குழந்தைக்கு அதிகப்படியான பாதிப்புகள் உண்டாகலாம்.

அதன் காரணமாக கருத்தரித்துள்ள நேரத்தில், உங்களது நலனுக்காகவும் குழந்தையின் வளர்ச்சிக்காகவும் மதுவினை முற்றிலுமாக ஒதுக்குமாறு உங்களது மருத்துவர் அறிவுறுத்துவார்.

மகப்பேறு காலத்தில் மது அருந்துவதால் உண்டாகும் சிக்கல் :

கர்ப்பமாக இருக்கும் பொழுது மது அருந்துவதால் உடல் அளவிலும் மனதளவிலும் சிக்கல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. இவற்றை மொத்தமாக பீட்டல் ஆல்கஹால் சின்ட்ரோம் என்கின்றனர்.

இவற்றில் இருப்பவை :

 • முகம் மற்றும் உடலில் ஏற்படும் குறைபாடுகள்.
 • பிளவு அண்ணம் (உதடு பிளவு படுதல்)
 • வேகம் குறைந்த வளர்ச்சி, சிந்தித்தல், அசைதல், மற்ற சமுக செயல்பாடுகளில் மந்தமான செயல்பாடு.
 • கற்றலில் குறைபாடு
 • அதீத செயல்பாடு மற்றும் வேகமான மனமாற்றம்.
 • இதயம், சிறுநீரகம் தொடர்பான சிக்கல்கள்

இவற்றை சமாளிப்பதை விடவும், மதுவினை தவிர்ப்பது சுலபம் எனலாம்.

மகப்பேறும் புகைத்தலும் :

உலகில் அதிகமான மக்கள் இறப்பதற்கும், ஆரோக்கியம் இழப்பதற்கும் புகையிலை பயன்பாடு காரணமாக உள்ளது. உங்களது மகப்பேறு காலத்தில், புகையிலை  பயன்படுத்தினால், உங்களது நலமும், உங்கள் குழந்தையின் நலமும் சேர்ந்து பாதிக்கப்படும்.

புகையிலையில் 7000திற்கும் அதிகமான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 70 புற்றுநோயை உண்டாக்குபவை என கண்டறியப்பட்டுள்ளது. அவை அனைத்தும் உங்களது நஞ்சுகொடியின் மூலம் உங்கள் கருவை அடைய முடியும்.

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள்:

 • இறந்து குழந்தை பிறத்தல், கருகலைதல்
 • சடன் இன்பான்ட் டேத் சின்ட்ரோமிர்கான வாய்ப்புகள் அதிகரித்தல்.
 • குறைபிரசவம் ஏற்படுதல் மற்றும் குறைவான எடையில் குழந்தை இருத்தல்.

இவை மட்டுமன்றி வேறு பல சிக்கல்களும் மகப்பேறு காலத்திலும்,  பிரசவத்திற்கு பின்னரும் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மதுவைப்போன்று இதில் எவ்வித சந்தேகமும் இன்றி அனைவரும் மகப்பேறு காலத்தில் குழந்தை நலன் காக்க இதனை அறவே தவிர்க்கவும் என்றே அறிவுறுத்துகின்றனர்.

சிகரெட் புகை எந்த அளவிற்கு ஆபத்து?

வேறு ஒருவர் புகைக்கையில், அவர்கள் அருகில் நீங்கள் இருப்பதும் ஆபத்து. காரணம் அந்த சிகரெட் புகை.  அந்த புகையினை உள்ளிளுப்பதன் மூலம், புகைப்பிடிப்பவரை விடவும் அதிகமான தீங்கு உண்டாகும் என நம்பப்படுகிறது. அந்த அளவிற்கு அதில் தார், நிகோடின், கார்பன் மொனாக்சைட் போன்ற நச்சுப்பொருட்கள் உள்ளன.

அந்த புகை காரணமாக குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது. புகையிலை பயன்படுத்திய கர்ப்பிணி பெண்களுக்கு நிகராக இந்த பாதிப்புகள் இருக்கவும் வாய்ப்புள்ளது.

புகையிலை மென்னுதல் தவறா?

புகையிலையை மென்னுவது புகைத்தல் போன்று மற்றொரு பழக்கம். புகைத்தலை விடவும் அதனை மெல்லுதல் அதிகம் தீங்கிழைக்கும் என மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் புகையிலை மென்னுவதால் வாயில் புற்றுநோய், ஈறுகள் கெடுதல், பற்கள் சொத்தையாகுதல் என பல சிக்கல்கள் உண்டாகலாம்.

எனவே இவை அனைத்தும் உடனடியாக புகையிலை மென்னுவதை நிறுத்த நமக்கு கிடைக்கும் காரணங்களாகும்.  நிகோட்டின் சிறிதளவு இருந்தாலும் அந்த பொருளை கர்ப்பமாக உள்ள பெண்மணி உண்ணாதிருத்தல் நலம்.

எவ்வாறு புகைப்பழக்கத்தை நிறுத்துவது?

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பல பிரபலமான முறைகள் உள்ளன. மருத்துவரை அணுகுவதில் துவங்கி, அதற்கென இருக்கும் குழுக்களில் இணைவது வரை பல வழிகள் உள்ளன. எனவே புகைப்பழக்கத்தை நிறுத்த சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியம் கெடாது இருக்க, நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.
 • பழக்கத்தை விட்டுவிட ஒரு நாள் குறியுங்கள்.
 • உங்கள் அருகில் எவரும் புகைக்க வேண்டாம் என கோரிக்கை வையுங்கள்.
 • புகை பிடிக்க வேண்டும் என தோன்றும் பொழுது அதனை குறித்து வையுங்கள்.
 • புகையிலை மென்னும் பழக்கம் இருப்பின் அதற்கு பதில் வேறு ஏதேனும் மெல்ல முயலுங்கள்.
 • உங்கள் வீட்டில் எவரும் புகைப்பதில்லை என்பதை உறுதி செய்யுங்கள்.

இந்த படிகள் உங்களை புகைக்கும் பழக்கத்தில் இருந்து வெளியே கொணர உதவும். அதனை சொல்வது எளிது. செய்வது கடினம் என்பதை மனதில் கொள்ளவும். மெதுவாக துவங்கவும். எனவே உடனடியாக மீண்டும் புகைக்கவேண்டும் என்ற எண்ணம் எழாது. பழக்கத்தை விட்டுவிட, அதன் மூலம் உங்கள் குழந்தை எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை யோசித்துபாருங்கள்.

முடிவாக :

உங்களது குழந்தை நலமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் உட்கொள்ளும் அனைத்தும் உங்களது குழந்தைக்கும் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மகப்பேறு காலத்தின் துவக்கத்திலேயே அவற்றை விட்டு விடவும். பாலுட்டி முடிக்கும் வரை மீண்டும் துவங்க வேண்டாம்.

அந்த பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் மருத்துவரின் உதவியை நாடவும். மீண்டும் புகைக்கவோ அல்லது குடிக்கவோ தோன்றினால், உங்கள் குழந்தையை கண் முன் காணவும். அது உங்களுக்கு உத்வேகமாக அமையும்.