என் குழந்தைக்கு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிரப்பிகள் தேவையா?

என் குழந்தைக்கு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிரப்பிகள் தேவையா?

 

என் குழந்தைக்கு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிரப்பிகள் தேவையா?

கனிம வளங்கள் மற்றும் வைட்டமின் கொண்ட கூடுதல் பொருட்கள்ஆரோக்கியமான தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்கு தேவைப்படாது.

தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு சிறப்பான உணவென்றாலும் சில நேரங்களில் தேவையான சத்து இல்லாமல் போகலாம். இது தாயின் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் சத்தை பொருத்தே அமையும்.

வைட்டமின் ஏ:

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைப்பாடு ஏற்படுவது அரிதாகும், ஏனெனில் தாய்ப்பால் வைட்டமின் ஏச த்துக்களின் சிறந்த மூலமாக உள்ளது. எனவே உங்கள் குழந்தையை இத்தகைய குறைப்பாட்டிலிருந்து பாதுகாக்க தாய்ப்பால் கொடுப்பதை தொடருவது சிறந்தது.

வைட்டமின் பி 1 (தியாமின்)

போதுமான தியாமின் அளவை கொண்ட தாய்மார்களுக்கு பிறந்து, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வைட்டமின் பி1 கூடுதல் அளவு கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தாய் வைட்டமின் தியாமின் குறைபாடு உடையவராக இருந்தால், அவரது குழந்தைக்கு கூடுதல் வைட்டமின் பி1  அளிக்க வேண்டுவதற்காகவாவது, அவர் தனது உணவில் வைட்டமின் பி 1 சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்)

வைட்டமின் பி1 போன்று, தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இந்த வகை வைட்டமின் குறைபாடு ஏற்படுவது அரிது.

வைட்டமின் பி6

தாயின் உணவில் போதுமான அளவு வைட்டமின் பி6 இருந்தால், மேலும் அவளுடைய குழந்தை தாய்ப்பாலை மட்டும் அருந்தினால், அக்குழந்தைக்கு கூடுதல் வைட்டமின் பி6 தேவைப்படாது. ஆனால் தாய்க்கு போதுமான அளவு வைட்டமின் பி6 கிடைக்காவிட்டால், அப்போது அதனை நிறைவு செய்ய கூடுதல் வைட்டமின் பி6 தாயின் உணவு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

வைட்டமின் சி:

ஸ்கர்வி (வைட்டமின் சி குறைபாடு) என்று அழைக்கப்படும் ஒரு வெளிப்படையான நோய் ஏற்பட்டால் மட்டும், தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு வைட்டமின் சி நிரப்பிகள் தேவைப்படும். முழுவதும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 120 மி.கி. தேவைப்படும். மேலும் தாய்க்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், இந்த அளவுக்கு மேல் ஒருநாளைக்கு 35மில்லிகிராம் சேர்க்க வேண்டும். வைட்டமின் சி குறைப்பாடு உடையதாய்மார்களுக்கு அளிக்கப்படும் நிரப்பிகள் அவர்களுடைய தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும்.

வைட்டமின் ஈ:

கூடுதல் வைட்டமின் ஈ தாய்மார்களுக்கும் அவர்களுடைய தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கும் அவசியமில்லை, இத்தகைய குறைப்பாடு அரிதாக ஏற்படுத்தும்.

ஃப்ளோரைடு:

தற்போது தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு அவர்களுடைய பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு கூடுதல் ஃப்ளோரைடு தேவைப்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தாய்ப்பாலில் போதுமான ஃப்ளோரைடு இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஃப்ளோரைடு நிரப்பிகள் குழந்தையின் ஆறு மாதகாலத்திற்கு பிறகே கொடுக்க வேண்டும், அதுவும் ஃப்ளோரைடு பற்றாக்குறை உடைய நீர் ஆதாரங்களை முதன்மையாக அருந்தும் குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தையை கிணற்று தண்ணீர் அல்லது பாட்டில் தண்ணீர் குடிக்க அனுமதித்தால், ஃப்ளோரைடு இந்த நீரில் சேர்க்கப்பட்டிருப்பதற்கான சாத்தியமில்லை. பல நீர்களில் இயற்கையாகவே ஃப்ளோரைடு கலந்திருக்கும், எனவே உங்கள் நீரில் எவ்வளவு ஃப்ளோரைடு இருக்கிறது என்பதனை தெரிந்துகொண்டு, குழந்தை மருத்துவரை அணுகிய பின்னர், உங்கள் குழந்தைக்கு கூடுதல் ஃப்ளோரைடு அளிக்க வேண்டுமா அல்லது வேண்டியதில்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ஃபோலிக் அமிலம் (ஃபோலேட்)

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம் ஃபோலிக் அமிலத்தின் குறைப்பாடு கண்டறியப்படவில்லை. எனவே இதற்கான நிரப்பிகள் பரிந்துரைக்கப்படவில்லை.

வைட்டமின் கே

வைட்டமின் கே பிறப்பின் போது மிகவும் குறைவாக இருக்கும். இரத்தம் உறைவதற்கு இது தேவை. வைட்டமின் கே குறைப்பாடு ஏற்பட்டால், அது வைட்டமின் கே குறைபாடு இரத்தப்போக்கு (விகேடிபி) நோய்க்குறிக்கு வழிவகுக்கும். தாயின் உணவில் வைட்டமின் கே எடுத்துக்கொள்வதை அதிகரிப்பது, சிக்கலைக் கட்டுப்படுத்த உதவும்.

0.5 முதல் 1.0 மி.கி அளவிலான வைட்டமின் கேயின் தசையூடான ஊசி வழக்கமாக பிறந்த குழந்தையின் முதல் நாளன்று போடப்படும். இது பிறந்த குழந்தைக்கு ஏற்படும் இரத்தபோக்கு நோய் அபாயத்தை குறைக்கும். வைட்டமின் கேயின் வாய் வழி மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது, உடம்பில் ஒவ்வொரு விதமாக ஜீரணமாவதால் வைட்டமின் கேயின் அளவு சரியாக இருக்காது.

துத்தநாகம்

ஆரோக்கியமான மற்றும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு கூடுதல் துத்தநாகம் தேவையில்லை, ஏனெனில் இது சிவப்பு இறைச்சி மற்றும் தயிரில் உள்ளது. பசியின்மை, குறைவான செயல்பாடு, எடை அதிகரிக்காமல் இருத்தல் மற்றும் குறைவான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை துத்தநாகப் பற்றாக்குறையின் அறிகுறிகள் ஆகும். பருவமடையா குழந்தைகளுக்கு இந்த குறைப்பாட்டுக்கான ஆபத்து உள்ளது.

கால்சியம்

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு கூடுதல் கால்சியம் தேவையில்லை. அவர்களுக்கு தாய்ப்பாலில் இருந்தும் மற்றும் (இரண்டாவது 6 மாதங்களில்) சத்து நிறைந்த உணவுகளிலிருந்தும் பெறப்படும் கால்சியம்சத்து அவர்களுக்கு போதுமானதாகும்.

தாய்ப்பால் மட்டும் அருந்தும் குழந்தைகளிடையே காணப்படும் அளவுக்கு அதிகமான கால்சியம் சத்துக்கள், நீண்டகால எலும்பு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கால்சியம் உங்கள் குழந்தையின் எலும்புகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நிரப்பியாகும். இது நரம்புகள் மற்றும் தசைகளை இயங்க செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆரம்பகால வாழ்வின் போது போதுமான கால்சியம் சத்துக்களை பெறும் குழந்தைகள், வலுவான எலும்புகளை பெறுகிறார்கள், எனவே குழந்தை பருவம் முதலே இதனை ஆரம்பிப்பது சிறந்தது.

வில் போன்ற கால்கள், குன்றிய வளர்ச்சி மற்றும் பலவீனமான தசைகளை ஏற்படுத்தும் ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு நோய்களை தடுக்க குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி தேவைப்படுகிறது.

நாங்கள் கால்சியத்தின் சிறந்த மூலமாக விளங்கும் உணவை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவை பின்வருமாறு:

 • பால்
 • தயிர்
 • செடார் போன்ற கடினமான பாலாடைக்கட்டி
 • ப்ரோக்கோலி, காலே, சீன முட்டைக்கோசு, மற்றும் பிற பச்சை இலைகள்
 • பாதாம் மற்றும் எள் விதைகள்
 • வெள்ளை மற்றும் சிவப்புபீன்ஸ்
 • ஆரஞ்சு, கொய்யா, அத்திப்பழம் மற்றும் கொடிமுந்திரி
 • வண்ண மிளகு

கால்சியம் மில்லிகிராமில் (மி.கி.) அளவிடப்படுகிறது. நமது குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அவர்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகளை அளிப்பதாகும். இதுசாத்தியம் இல்லைஎன்றால், அதனை சரி செய்ய நிரப்பிகளை பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கேட்கவும். கால்சியம் உட்கொள்வதின் சரியான அளவு பின்வருமாறு:

 • 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு 200 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது.
 • 6-12 மாதங்களுக்கு இடையேயான குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு 260 மில்லி கால்சியம் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி

வலுவான எலும்புகளை பெறுவதற்கு நமது குழந்தைக்கு கால்சியத்திற்கான முக்கியத்துவத்தை பற்றி விவாதித்தோம்.  அதே போல், குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளுக்கு, அவர்களது உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி குறைப்பாடு, ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு நோயை ஏற்படுத்தும் – மென்மையான மற்றும் பலகீனமான எலும்புகள் இருப்பதே ரிக்கெட்ஸ் என்னும் நோய்.

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி (ரிக்கெட்ஸ்) குறைப்பாட்டின் ஆபத்து ஏற்படுவதற்கான காரணிகள் பின்வருமாறு:

 • சூரிய ஒளிக்கு வெளிப்பாடு குறைவாக இருத்தல்: குழந்தை எப்பொழுதும் போர்த்தி வைக்கப்பட்டிருந்தாலோ, சூரிய ஒளிக்கு அப்பால் வைக்கப்படும் போது அல்லது நாள்முழுவதும் வீட்டினுள்ளேயே வைத்துக்கொள்ளும் போது இத்தகைய குறைப்பாடு ஏற்படும்.
 • தாய் மற்றும் குழந்தை கருத்த தோலை பெற்றிருந்தால், போதுமான அளவு வைட்டமின் டியை உருவாக்குவதற்கு சூரிய வெளிச்சம் அதிகம் தேவைப்படும். இருண்ட உங்கள் தோல் நிறமிகள் எவ்வளவு கருமையாக உள்ளதோ, அந்த அளவிற்கு உங்களுக்கு சூரிய வெளிச்சம் தேவைப்படும்.
 • தாய்க்கு வைட்டமின் டி குறைவாக இருந்தால், தாய்ப்பாலில் வைட்டமின் டி அளவு குறைவாக இருக்கும், அவருக்கு கூடுதல் வைட்டமின் டி தேவைப்படலாம்.

வைட்டமின் டி பெற சிறந்த வழி சூரிய ஒளியில் இருந்தேயாகும். சூரிய ஒளியை தவிர, குழந்தைகளுக்கு வைட்டமின் ‘டி’க்கான முக்கிய ஆதாரம், பிறப்பதற்கு முன்னதாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள் குறிப்பாக முதல் 2-3 மாதங்களில் போதுமான வைட்டமின் டி பெறுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தை 6 மாத காலங்கள் அடைந்த பிறகு, அவர்களுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கு பாலாடைகட்டி (சீஸ்) மற்றும் முட்டைகருக்கள் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை கொடுத்து அவர்களின் தினசரி வைட்டமின் டி தேவைகளை பூர்த்தி செய்யலாம். குழந்தைகள் சாப்பிடக்கூடிய பல உணவுகளில் வைட்டமின் டி இல்லை என்பதால், வைட்டமின் டி நிரப்பிகள் குறித்து மருத்துவ உதவி வழங்குபவரின் ஆலோசனையை பெற்று, குழந்தைக்கு கொடுப்பது நல்லது.

தாய் தனது உணவில் வைட்டமின் டி நிரப்பிகளை சேர்ப்பதும், சூரிய ஒளியில் தன்னை வெளிப்படுத்துவதினாலும், அவர்களின் தாய்ப்பாலில் உள்ள வைட்டமின் டி அளவினை அதிகரிக்கலாம். 2004 ஆம்ஆண்டின் ஆய்வின்படி [ஹாலிஸ் மற்றும் வேக்னர் 2004] தாய்க்கு தினமும் கூடுதல் வைட்டமின் டி  2000-4000 ஐயூ அளிப்பதன் மூலம் தாய் மற்றும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் வைட்டமின் டி நிலை பாதுகாப்பாக அதிகரித்துள்ளது.

2011 இல், இந்தியாவில் ஆரோக்கியமான, தாய்ப்பால் அருந்தும் 3 மாத குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களை ஒரு மருத்துவ ஆய்வு வைட்டமின் டி குறைபாட்டை மதிப்பிட்டது. இந்த குறைபாடுகளின் தாக்கம், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடமும் மற்றும் அவர்களின் தாய்மார்களிடமும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது, இந்த ஆய்வில் மூன்றில் ஒரு குழந்தை ரிக்கெட்ஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக திரியக்கம் மூலம் கண்டறியப்பட்டது. தாய்பால் மட்டும் அருந்தும் குழந்தைகளுக்கு கூடுதல் வைட்டமின் டி தேவைப்படும். குழந்தைகளின் ஃபார்முலா பாலில் வைட்டமின் டி சேர்க்கப்பட்டுள்ளது, எனவே ஒருநாளைக்கு 32 அவுன்சஸ் ஃபார்முலா பால் அருந்தும் குழந்தைக்கு, பெரும்பாலும் கூடுதல் வைட்டமின் டி தேவைப்படாது, ஆனால் தாய் முதலில் குழந்தை மருத்துவரிடம் சரிபார்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு திரவ வடிவில் வைட்டமின் டி கொடுக்கும் போது, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கொடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்ற வேண்டும் மற்றும் துளிசொட்டியை பயன்படுத்த வேண்டும்.

முடிவுரை:

பல ஆரய்ச்சிகள் தாயின் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பல வைட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன. இது குழந்தைகளுக்கு கூடுதல் வைட்டமின்கள் கொடுப்பதை போன்று பயனுள்ளதாக இருக்கும். நன்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணும் தாய்மார்களின் பாலை அருந்தும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடுகளுக்கான ஆபத்து குறைவாக இருப்பதால், அவர்களுடைய கூடுதல் வைட்டமின்களுக்கான தேவை குறைவாக இருக்கும்.  ஆனால் உங்கள் குழந்தைக்கு நிரப்பிகள் கொடுக்க தீர்மானிக்கும் முன், மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது சிறந்தது. வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது என்ற கூற்று உள்ளது தானே.