குறைந்த எடையில் பிறந்த குழந்தைக்கான ஊட்டச்சத்து

குறைந்த எடையில் பிறந்த குழந்தைக்கான ஊட்டச்சத்து

 

மருத்துவர் கூறிய ஆலோசனைகளை நாம் முழுமையாக பின்பற்றினாலும் கூட ஒரு பெண் குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பம் ஆவதும்,  பிரசவமாவதும் சில சமயங்களில் திட்டமிட்டவாறு நடந்து விடுவதில்லை. இந்தநிலையில் மிகக்குறைந்த எடையில் குழந்தை பெற நேர்ந்தால் அந்த குழந்தை மீது கூடுதல் கவனம் செலுத்தி இயல்பான வளர்ச்சிக்கு கொண்டு வர வேண்டும்.   எடை குறைந்த குழந்தைக்கான பொதுவான வரையரை 2500 கிராம்கள் (2.5கி.கிராம்).

எடை குறைவான குழந்தைகள் நிறை மாதத்திலோ அல்லது குறை மாதத்திலோ ஏற்படலாம். ஆனால் எடை குறைவான குழந்தைகள் குழந்தைகள் பெரும்பாலும் குறைப்பிரசவத்தில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும், 20 மில்லியன் குழந்தைகள் 2.5 கிலோ எடைக்கும் குறைவான நிலையில் பிறக்கின்றன. இதில் 96 சதவீதம் குழந்தைகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பிறக்கின்றன. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் பின்வரும் மருத்துவ நிலைமைகள் ஏற்பட அதிக ஆபத்தில் உள்ளனர்.

  • ஆரம்பகால வளர்ச்சிப் பிரச்சினைகள்
  • தொற்று நோய்கள்
  • வளர்ச்சி தாமதங்கள்
  • மரணம்

எடை குறைந்து பிறந்த உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான சரியான அறிவை மேம்படுத்துவது, குறுகிய மற்றும் நீண்ட காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவது இந்த கட்டுரையின் குறிக்கோள்களாகும்..

எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கான துணைப்பிரிவுகள்:

  • எடை குறைந்து பிறந்த குழந்தைகளை (எல்.பி.டபிள்யூ) பின்வரும் துணை குழுக்களாக வகைப்படுத்தலாம்:
  • குறைந்த பிறப்பு எடை: 2 முதல் 2.5 கிலோ (எல்.பி.டபிள்யூ)  –

குறைப்பிரசவத்தில் பிறக்கும் எடை குறைந்த குழந்தை (32 முதல் 36 வாரங்கள்): அப்போது பிறக்கும் குழந்தைகளின் எடை 1.5  முதல் 2 கிலோ. (LBW – குறைந்த எடையுள்ள குழந்தைகள்)

  • குறைப்பிரசவத்தில் பிறந்த எடை குறைந்த குழந்தை (<32 வாரங்கள்): 1 முதல் 1.5 கிலோ மிகக் குறைந்த எடையுள்ள குழந்தைகள் – (VBLW)
  • எடை குறைந்த குழந்தை பிறந்தகாலம் (<28 வாரங்கள்): ஒரு கிலோவிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் (மிகவும் குறைந்த பிறப்பு எடை)

பிறந்த குழந்தைகள் மேற்கண்ட பிரிவுகளுக்குட்பட்டு இருந்தால், அடுத்து உரிய மருத்துவர்களை சந்தித்து உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். எனவே உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுதல் அவசியம்.

ஊட்டச்சத்து ஒரு முக்கியமான அம்சம்:

குறைந்த எடையில் பிறந்த குழந்தைகளை நல்ல முறையில் கொண்டு வர ஒரே வழி நல்லசத்துள்ள உணவைத் தருவதுதான். தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்து அளிப்பதற்கான சரியானத் தீர்வு என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். குறைந்த எடையில் பிறந்த குழந்தையை நீங்கள் பராமரித்து வந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது,  திட்டமிட்டு, தாய்ப்பால் அளித்த நேரங்களை கவனமாக கணக்கில் வைத்துக் கொள்வது அவசியம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் குழந்தை எவ்வளவு பால் அருந்தியது என்பதை கணக்கிட்டு வர வேண்டும். எந்தெந்த நேரங்களில் குழந்தையால் திட்டமிட்டவாறு பாலை பெற முடியவில்லையோ அந்த நேரத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை மருத்துவர்கள் கேட்க்கும் போது குறிப்புகளை அளித்தல் வேண்டும்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம்:

தாய்ப்பால் அளிப்பது உங்களுக்கும் உங்கள் குழந்தை இருவருக்குமே நல்ல சுகாதாரப் பலன்களை அளிக்கிறது. உங்களிடம் சுரக்கும் தாய்பாலில் குழந்தைகளின் அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அனைத்து முக்கிய சத்துக்களும் அடங்கி இருக்கின்றன. இது உங்கள் பிள்ளைகளின் வயிற்றுப்போக்கு, நிமோனியா மற்றும் பல நோய்களைக் கட்டுப்படுத்தும். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் தாய்ப்பால் தரத் தொடங்கிய நாளிலிருந்தே பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் எடைக்குறைவு பிரச்சினையால் ஏற்படும் சிக்கல்கள் குறைகின்றன.

எடை குறைந்த குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் முதலில் செய்ய வேண்டியது குழந்தை பிறந்ததுமே தாய்பாலை அளிக்கத் தொடங்க வேண்டும். மிகவும் எடை குறைந்து பிறந்த குழந்தைகளுக்கு (VLBW ) பிறந்த முதல் நாளன்றே, குழந்தையின் எடையில் கிலோவுக்கு 10மிலி எ    ன்ற அளவில் ஒருநாளைக்குத் தரப்பட வேண்டும். மேலும் 6 மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் தரப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.  எடை குறைந்த குழந்தைகளுக்கும், மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்குமான சிபாரிசுகளை உலக சுகாதார நிறுவனம் கீழ்கண்டவாறு விவரமாக அளித்துள்ளது

தாய்ப்பாலுக்கு என்ன செய்வது?:

எடை குறைந்த மற்றும் மிகவும் எடை குறைந்த குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் முதலில் செய்ய வேண்டியது குழந்தை பிறந்ததுவமே தாய்பாலை அளிக்கத் தொடங்க வேண்டும். சில சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு தாய்பால் பெற முடியவில்லை என்றால், வெளியிலுள்ள தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை பெறலாம்.  மேற்கண்ட இரு வழிகளிலும் அக்குழந்தைக்கு பால் பெற முடியவில்லை என்றால் அக்குழந்தை குழந்தைகளுக்கான பார்முலா அடங்கிய உணவை அடுத்த 6 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் மிகக்குறைந்த எடையுடைய குழந்தைகளுக்கு, அனைத்துக் குழந்தைகளுக்கு கொடுக்கும் நிலையான பார்முலா அடங்கிய உணவு சரிப்பட்டு வரவில்லை என்றால் முன் கூட்டியே பிறந்த குழந்தைகளுக்காக பால் பவுடரை கொண்டு வழங்கலாம்.

மிகக் குறைந்த எடையுடைய குழந்தைகளுக்கு உரிய முயற்சிகள் செய்தும் எடை சரியாக கூடவில்லை என்றால், செறிவூட்டப்பட்ட தாய்ப்பால் கொடுக்கலாமே தவிர செறிவூட்டப்பட்ட மாட்டுப்பால் கொடுக்கக்கூடாது.

குறைந்த எடைக் குழந்தைகள் (LBW) மற்றும் மிகக் குறைந்த எடைக்குழந்தைகளின் (VLBW ) உணவுப்பழக்க அதிர்வெண்கள்:

எடை குறைந்த குழந்தைகள் மற்றும் மிகவும் எடை குறைந்த(VLBW) குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும் அல்லது சில நேரங்களில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும் வழங்கப்பட வேண்டும். குழந்தை விழித்துக் கொண்டிருந்தாலும் அல்லது ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

மிகக்குறைந்த எடையுடைய குழந்தைகள் (VLBW) மாற்று வழிகளிலிருந்து பால்பெரும் நிலையில், பசியின் அடிப்படையில் அவ்வப்போது பால் எடுத்துக்கொள்ளும். ஆனால் குழந்தை தொடர்ந்து 3 மணிநேரத்திற்கு மேல் தூங்குமானால் பால் அளவை அதிகப்படுத்த குழந்தையை எழுப்பி கொடுக்க வேண்டும். கிலோ அடிப்படையில் ஒருநாளைக்கு 1 கிலோவுக்கு 30மிலி என்ற அளவில் வேண்டும். இதில் தீவிர கண்காணிப்பு அவசியம்.

VLBW  குழந்தைகளுக்கான சப்ளிமெண்ட்ஸ்:

தாய்பால் அளிக்கும் போது VLBW குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட சப்ளிமெண்ட்ஸ் சிபாரிசு செய்யப்படுகிறது.

வைட்டமின் டி :    400 லிருந்து 1000 IU தினமும் 6 மாதங்கள் வரை

கால்சியம்         :     120 லிருந்து 140 மி.கி, முதல் மாதங்கள்

பாஸ்பரஸ்         :     60 லிருந்து 90 மி.கி, முதல் மாதங்கள்

இரும்பு                :      2 முதல்  4 மி.கி வரை, முதல் மாதங்கள்

எடை குறைந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு:

கீழ்கண்ட  சிபாரிசுகள்படி மேற் சொன்னவற்றை தவிர எடை குறைந்த குழந்தைகளை கவனமாக பராமரிப்பது அவசியம்:

ஒவ்வொன்றாக அறிதல்:

எடை குறைந்த குழந்தைகள் தாய்பால் அருந்தும் காலத்தில், அவர்களின் எடை கூடிவரும் அளவு, இதயத்தின் சீரான இயக்கம், சுவாச அளவுகள், தினமும் தூங்கும் அளவு ஆகியவற்றை அடிக்கடி, துல்லியமான வகையில் அறியவேண்டும்.

தூக்கம்:

குழந்தை தூங்கும் போது நீங்களும் தூங்கினால் தாய்ப்பால் கொடிப்பது எளிதாகிறது. குழந்தை கூட நெருக்கம் அதிகமாகும்.

குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு:

குழந்தைகளின் வளர்ச்சியை அறிய அடிக்கடி அவர்களை மருத்துவர்களிடம் கொண்டு சென்று காண்பிக்க வேண்டும். காலாகாலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவது அவசியம். எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி இல்லாவிட்டால் ஊட்டச்சத்து முறையை மறுஆய்வு செய்து கூடுதல் ஊட் டமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தோளோடு தோள் ஒட்டுதல்: குழந்தையை தோளோடு தோள் ஒட்டி வைத்தால் எடைக் கூடும். இருதயம் மற்றும் மூச்சும் சீராகும். மசாஜ் செய்வதும் மிக நல்லது.

அவர்கள் வளர உதவுதல்:

எடை குறைந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கான மிக முக்கியமான, இறுதியான ஒரு கவனிப்பு என்னவெனில் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்து அதற்க்கான தேவைகளை நிறைவு செய்வதுதான்.

தீர்வு:

எடை குறைந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கான பிரச்சனைகளை அவர்கள் மீது அதிக அளவில் அக்கறை எடுத்துக் கொள்வதன்மூலமும், சரியான உணவளிப்பதன் மூலமே தீர்க்க முடியும். இது சிரமமென்றால் குறைபாடுகளை சரி செய்யமுடியாது. நீங்கள் உங்கள் குழந்தையின் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டு செய்வீர்கள் என நம்புகிறோம்.