தாய்ப்பால் அளிப்பதை நீங்கள் இயற்கையாக அதிகரிக்க வேண்டும்

தாய்ப்பால் அளிப்பதை நீங்கள் இயற்கையாக அதிகரிக்க வேண்டும்

 

அறிமுகம்

தாய்ப்பால் அளிப்பை அதிகரித்தல் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், தாய்மார்களின் உணர்வுபூர்வமான திருப்திக்கும் அவசியமான ஓன்று. பெரும்பாலும் ஒரு தாயிடமிருந்து சுரக்கும் பால் குழந்தைக்கு போதுமானதாக இருக்கிறது, ஆனால் சில நேரங்களில் இது போதுமானதாக இல்லை. குழந்தை பிறந்ததும் உடனடியாக பால் ஊட்டத் தொடங்கி, பிறகு தொடர்ந்து பாலூட்டுவது பால் உற்பத்தியை அதிகரிக்கும் சிறந்த வழியாகும். சில மருத்துவ காரணங்களால் பால் குறைவாக இருந்தால் இயற்கையாக கிடைக்கும் உணவினால் பால் சுரப்பதை அதிகப்படுத்தலாம்.

தாய்பால் அதிகரிப்புக்கான உணவுபொருள்கள்

தண்ணீர் மற்றும் பழரசங்கள்: தாய்பால் குறித்த நிறைய சுரக்க நீர்ச்சத்து முக்கியமானது. இது தாய்பால் அதிகரிப்பதற்காக மட்டும் சொல்லப்படவில்லை. தாயின் முழு சுகாதாரத்துக்கும் இது அவசியம். பால் சுரப்பை அதிகரிக்க, முடிந்த வரை தண்ணீர் குடித்தல் அவசியம். பால் ஊட்டுவதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியம்.

வெந்தய விதைகள்: வெந்தயம் தாய்பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் பிரசவத்திற்க்குப் பிறகு பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் மலச்சிக்கலையும் போக்குகிறது. நீங்கள் இதை காய்கறிகளில் வைத்தோ, அல்லது தேநீரில் கலந்தோ அல்லது தண்ணீரில் 7 முதல் எட்டு மணிநேரம் ஊறவைத்தோ பயன்படுத்தலாம்.

பெருஞ்சீரக விதைகள்: பெருஞ்சீரகமும் தாய்பால் அதிகரிப்புக்கு பயன்படுகிறது. இது குழந்தையின் பால் ஜீரணத்துக்கும், பால் கட்டிக்கொள்வதால் ஏற்படும் வயிற்று வலிக்கும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் தாயின் மலச்சிக்கலை போக்கவும், சுவாச புத்துணர்ச்சிக்காவும் பயன்படுகிறது. மேலும் இது மசாலா கறிகள் சமைப்பதற்கும், விருந்து உணவுகளில் மணமூட்டியாகவும் பயன்படுகிறது.

கேரட்ஸ்: கேரட்டை ஜூஸ் போட்டு காலை சிற்றுண்டியுடனும், மதிய உணவுடனும் சேர்த்து அருந்தினால் பால் அளவு அதிகரிக்கும். இதில் அடங்கியுள்ள கூறுகள் தாய்பால் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் இது தாய்க்கு இருதயநோய், வலிப்பு மற்றும் கேன்சர் வராதவாறு தடுக்கிறது.

சீரகம்: ஜீரா என்று அழைக்கப்படும் ஜீரகம் தாய்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. ஜீரணத்திற்க்கும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்வதற்கும், ஸ்நாக்ஸ் மற்றும் கறிவகைகள் தயாரிப்புக்கும், மணமூட்டியாகவும் இது பயன்படுகிறது

பூண்டு: தாய்பால் சுரப்பு அதிகரிக்க சிறந்த பொருளாக எல்லோராலும் மிகவும் அறியப்பட்டது பூண்டு ஆகும். இதிலுள்ள சத்துக்கள் பால் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் பல நோய்கள் வராத வகையில் தடுக்கிறது. உங்கள் தினசரி உணவில் இதை சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்தும், பொரித்தும் சாதத்துடனும், காய்கறிகளுடனும் கலந்து சாப்பிடலாம்.

பூசணி விதைகள்: பூசணி விதைகள் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான வைட்டமின்களை அளித்து தாய்பால் சுரப்பை அதிகரிக்கிறது. இதுகுழந்தை பெற்ற தாயின் ஜீரணத்துக்கு உதவுகிறது. மேலும் இது சாலடுகள் செய்யவும், வறுத்து உண்ணவும், ஸ்நேக்ஸ் வகைகள் செய்யவும் பயன்படுகிறது.

பாப்பி விதைகள்:   கஸ், கஸ் எனப்படும் பாப்பி விதைகள் பாலூட்டும் தாயின் சோர்வை அகற்றவும், அதிக பால் சுரப்புக்கும் உதவுகிறது. ஆனால் இதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். சிறிய அளவில் பயன்படுத்துவதே பாதுகாப்பாகும். இதை பாலுடனோ அல்லது வறுத்து, சாலட்டுகளுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

கீரை: ஸ்பிநிரச் எனப்படும் கீரையில் வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன. இரும்பு மற்றும் வைட்டமின் குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு பிரசவமான பிறகு பயன்படும். ஆகாத பொருள்களை அகற்றி உடலை சுத்தம் செய்யும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும். இதை சாலடாகவோ, கறியாக சமைத்தோ, பச்சை ஜூசாகவோ குடிக்கலாம்.

கருப்பு எள் விதைகள்: டில் என்று அழைக்கப்படும் கருப்பு எள்ளில் முக்கியமான சத்துக்களும், தாதுசத்துக்களும் உள்ளன. இதனால் தாய்பால் அபிவிருத்திக்கு சிறந்த உணவாக இந்த எள் கருதப்படுகிறது.  நீங்கள் சமையல் செய்ய எள் எண்ணெய் பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் விருந்துகளில் இனிப்புக்காகவும் அதை பயன்படுத்தலாம்.

சோம்புவிதைகள்: இது சமையலிலும்,  பொருள்களிலும் முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது. தாய்மார்களின் மார்பகத்தின் இரத்த பால் சுரக்க செய்கிறது. இதை நாம் எளிதாக மெல்லலாம். அல்லது பால், தண்ணீரில் கலந்தும் குடிக்கலாம்.

ஓட்ஸ்; ஓட்ஸ் சக்திக்கான சிறந்த பொருளாகும். இதில் நார்சத்துக்களும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் உள்ளன. ஜீரணத்துக்கும், தாயின் அனைத்து ஆரோக்கியத்துக்கும் உகந்த பொருளாகவும் இருப்பதால் தாய்பால் அபிவிருத்திக்கு பல தலைமுறையாக பயன்படுகிறது. நீங்கள் இதன் மூலம் கஞ்சி, இட்லி, போஹா, அல்லது சில்லா ஆகியவற்றைச் செய்யலாம்.

 பார்லி:  பார்லி நீர்சத்துக்கும், உடலுக்கு சக்தியளிப்பதற்க்கும் மிகவும் பயன்படுவதால் பால் உற்பத்தியை அதிகரிக்க முக்கியமானது. மேலும் எளிதில் ஜீரணமாகும் பொருளாகவும், உடல் எடையை குறைக்கவும், நோய்களை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ள எளிய உணவாகும். இதை தண்ணீரில் வேக வைத்தும், சூப் செய்தும், சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம்.

இனிப்பு உருளைக்கிழங்கு: இந்த கிழங்கு கர்ப்பிணிபெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தேவைப்படும் வைட்டமின்களையும், தாது சத்துக்களையும் அதிக அளவில் தருகிறது. இதில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. வயிற்றுப்பிரச்னைகளை தீர்த்து வைக்கிறது. இதை அவித்தும், வறுத்தும், சூப்பாகவும் ஒரு புட்டுபோல் சமைத்தும் சாப்பிடலாம்.

சுரைக்காய்: சுரைக்காய் அதிக சத்துள்ள முக்கியமான காயாகும். அதனால் தாய்பால் அதிகரிப்பதற்கு அதிகம் பயன்படுகிறது. மேலும் மனித உடலில் அதிக அளவில் நீர்சத்தை சமப்படுத்துகிறது. தாய்பால் அதிகரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைக் கறியாக சமைத்து உண்ணலாம். மற்ற காய்கறிகளுடனும் சேர்த்து சமைத்து உண்ணலாம். எலுமிச்சைபழம் சேர்த்து ஜூசாகவும் குடிக்கலாம்.

பாகற்காய்: இந்த காயில்போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ளதால் தாய்மார்களிடம் அதிக அளவில் பால் உற்பத்தியை தூண்டுகின்றன. மேலும், கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் தாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்துகிறது, உடல் எடையை குறைத்து, செரிமானத்தை அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகளால் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, எனவே, நீரிழிவு நோயுள்ள தாய்மார்களும் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பாகற்காயை பயன்படுத்த வேண்டும்.

தீர்வு:

மேலே கூறப்பட்ட அனைத்து இயற்கை உணவுப்பண்டங்களும் தாய்பால் கிடைக்கும் அளவை அதிகரிப்பதற்கு உதவும் சின்னஞ்சிறிய பட்டியல்தான். இவை தாய்பால் அதிகரிப்பதற்கு மட்டுமன்றி, பாலூட்டும் தாய்மார்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.