உங்கள் குழந்தை ஏன் அழுகிறது?

உங்கள் குழந்தை ஏன் அழுகிறது?

 

உங்கள் குழந்தை ஏன் அழுகிறது?

ஒரு தாயாக , அதுவும் முதல் பிரசவம் என்றால், கண்டிப்பாக தன் குழந்தை ஏன் அழுகிறது என்பதை குறிப்பிட்டு கூறுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.  குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருக்கும். குறிப்பிட்டு கூறுவதும், அழும் குழந்தையை சமாதானப்படுத்துவதும் கடினமான வேலை. ஆனால் அனைத்து நேரங்களிலும் அவ்வாறு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.  அதற்கு பசியாக இருக்கலாம். மற்ற நேரங்களில் வலியோ அல்லது காயமோ இருக்கலாம். எனவே எப்போதும் உங்கள் குழந்தை மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம்.

இன்று நாம் சற்று ஆழமாக சென்று குழந்தையின் அழுகையை பற்றி ஆராய போகிறோம். அவர்களின் அழுகையை கொண்டு ஏன் அழுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க இயலுமா என்பதை காண்போம்.

அழுகையை வைத்து குழந்தைக்கு என்ன தேவை என்பதை தாய் உணர இயலுமா?

குழந்தை ஏன் அழுகிறது என்று அன்னைக்கு தெரியும் எனபலரும் கூற நீங்கள் கேட்டுருப்பீர்கள். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தாலும், உங்கள் குழந்தையின் வேறுவேறு அழுகைகள் உங்களுக்கு ஒரே மாதிரியானதாக தெரியும். இது சாதாரணம்தான்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், தங்கள் குழந்தையின் அழுகையை வைத்து அதற்கு என்ன வேண்டும் என்பதை கண்டுபிடிக்க முயலுமாறு அன்னையரிடம் கூறப்பட்டது. ஆனால் அந்த ஆய்வில் கலந்துகொண்ட 1/3 பங்கு பெண்களால் கூட தங்களது குழந்தையின் அழுகை இவற்றில் எது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை.

எனவே அழுகையை வைத்து குழந்தையின் தேவையை உணர பயிற்சியும் பழக்கமும் அவசியம். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை பல வழிகளில் முயற்சித்து பார்த்து பின்பே அறிய இயலும். உங்கள் செயலால் அவர்கள் சமாதானம் அடைந்தால், அந்த செயலை அந்த காரணத்தோடு பொருத்தி மனதில் கொள்ள வேண்டும். மீண்டும் அப்படி ஒரு சமயம் வரும் பொழுது உங்களுக்கு இந்த அனுபவம் பயன் தரும்.

மேலும், குழந்தை அழுவது எப்போதும் ஏதேனும் வேண்டி அல்ல என்பதை மனதில் கொள்ளவும். இயற்கையாகவே குழந்தைகள் அழ நேரிடும். மற்ற சில நேரத்தில் அயர்ச்சி ஆனாலும் கூட குழந்தைகள் அழும் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது. சில குழந்தைகள் சாதாரணமாக அனைவரிடமும் பழகும். ஆனால் அனைத்து குழந்தைகளும் அவ்வாறு நடந்து கொள்ளும் என கூற இயலாது…

பசிக்கான அழுகை எது?

அவர்களுக்கு பசிக்கிறது என்பதை அழுகையின் மூலமே குழந்தைகள் வெளிப்படுத்தும். பசியாக இருக்கும் பொழுது, அவர்களது அழுகை மிகவும் சத்தமாக உச்சத்திலும், இடைவிடாதும் இருக்கும்.  குழந்தைக்கு பாலூட்டி நீண்ட இடைவெளி ஆகியிருந்தது என்றால், முதலில் நீங்கள் அவர்களுக்கு பாலூட்ட வேண்டும். அழுகையில் குழந்தைகளின் நாக்கு அவர்களின் மேல் வாயோடு ஒட்டிகொள்ளும். அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களால் எளிதாக பால் குடிக்க இயலாது. எனவே அவர்களுக்கு பாலூட்டுவதற்கு முன்பு அவர்களை சமாதானப்படுத்துவது அவசியம்.

ஆனால் பால் அருந்த அது தயாராக இல்லை என்றால், அடுத்த காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும்.

மற்ற காரணங்கள் :

அழுகைதான் குழந்தைகளின் மொழியாகும். எனவே அவை எதற்காக அழுகின்றன என்பதை அறிந்து கொள்வதும், அதனை சமாதனம் செய்வது எவ்வாறு என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

பசி அல்லாது உங்கள் குழந்தை அழுவதற்கு உள்ள காரணங்கள் பின்வருமாறு:

  1. குழந்தைக்கு சோர்வாக இருக்கலாம்: பசியாக இருப்பது போன்று சோர்வாக இருக்கும் போதும், குழந்தைகள் அழுது உங்களுக்கு தெரியப்படுத்தும். அவர்கள் கண்களை தேய்ப்பதும், கொட்டாவி விடுவதும் இருக்கும். அனைத்தும் செல்லுபடியாகாத போது அவர்கள் அழுகிறார்கள். குழந்தை சோர்வாக இருந்தால், இடைவிடாத அழுகை இருக்கும். அதன் கண்கள் சிவந்திருந்தால் கண்டிப்பாக குழந்தை சோர்வாக உள்ளது என்பதை நீங்கள் உணரலாம். அமைதியான இடத்திற்கு சென்று, குழந்தையை தாலாட்டவும். இதன்மூலம் அவர்கள் சமாதனம் அடைந்தும், நிமிடங்களில் தூங்கிவிடவும் வாய்ப்புள்ளது.
  2. குழந்தை வலியில் உள்ளது : வலியில் இருந்தால், குழந்தையின் அழுகை உச்சத்தில் இருக்கும். மிகவும் சத்தமாகவும், கைகளை வேகமாக ஆட்டியும் குழந்தைகள் அழும். இவ்வாறு அழுதால், உடனடியாக அவர்கள் உடலில் காயம் உள்ளதா என்பதை கவனிக்கவும். ஒருமுறைக்கு மேற்பட்டு இவ்வாறு நிகழுமானால், மருத்துவ உதவியை நாடுவது நன்று. சில நேரங்களில் நாம் அறியாதவாறு உள்ளுறுப்புகளில் வலி இருக்கவும் வாய்ப்புள்ளது.
  3. கவனம் வேண்டி அழுதல் : நீண்ட நேரம் பொறுமையாக இருப்பதால் அயர்ச்சியுற்று அழுவதும் நிகழும். அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களுக்கு உங்கள் கவனம் தேவைப்படும். பசி அல்லது வலி இல்லாத போது உங்கள் குழந்தை மிகவும் சத்தம் குறைவாக உங்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அழும்.

 அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக உங்கள் குழந்தைக்கு நீங்கள் கவனம் செலுத்தக்கூடாது என்கின்றனர். இப்படிப்பட்ட நேரங்களில் வேறு விதமான பொழுதுபோக்கினை உங்கள் குழந்தைகள் கண்டுகொள்ள வாய்ப்புள்ளது என்கின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம், பிறரை அண்டி இருக்கும் நிலைமாறி, பெற்றோரை பிரியும் சமயத்தில் இது உதவும்என்கின்றனர்.

குழந்தைகள் அழுவதற்கு சில காரணங்களே உள்ளன. சில நேரங்களில் காரணமே இல்லாமலும் உங்கள் குழந்தைகள் அழும் என்பதை மனதில் கொள்ளவும். அப்படிப்பட்ட நேரங்களில் என்ன செய்தாலும் அவை அழுகையை நிறுத்தாது.  அதிகமுறை இவ்வாறு நிகழாது இருந்தால் குழந்தையை நீங்கள் நன்கு கவனித்து கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அழுகையை நிறுத்த இயலவில்லை என்றால், குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கவும்.

ஒவ்வொரு குழந்தையும் வேறுவேறு விதமானது. உங்கள் சகோதரி குழந்தைக்கு கையாண்ட வழியினை உங்கள் குழந்தைக்கு கையாள இயலாது. எனவே ஒவ்வொரு முறையும் புதிய வழிகளை முயற்சித்து பார்க்கவும்.