குழந்தைகளின் பசியின்மையைப் போக்குவது எப்படி?

குழந்தைகளின் பசியின்மையைப் போக்குவது எப்படி?

 

உலகிலுள்ள அனைத்து பெற்றோர்க்கும் தாம் பெற்ற மழலைச் செல்வத்தைக் கையில் ஏந்துவதைப் போன்ற மகிழ்வான தருணம் வேறேதுமில்லை. அதே வேளையில், அம்மழலை சரியாக உணவு உண்ணாவிடில், மிகவும் கவலைக்குரிய நிலையை அளிக்கும். பெற்றோர்கள் தாம் பெற்ற குழந்தையை வளர்க்கபடாத பாடுபடுகின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் ஊட்டச்சத்துகள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

பசியின்மை:

தொடர்ந்து உணவில் விருப்பமின்மையே பசியின்மையாகும்.  பெரியவர்களைப் போல அல்லாது குழந்தைகளின் பசியானது, நாளுக்குநாள் அல்லது வேளைக்கு வேளைமாறும். ஒரு குழந்தை தனக்கு பசிக்கும்போது மட்டுமே உண்ணும் என்பதை நாமறிவோம். குழந்தையின் பசியின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. சில சமயங்களில் தன் புதிய சுற்றுப்புறத்தை ஆராயும் போது குழந்தைக்கு பசி தெரிவதில்லை. வாந்தி, எரிச்சல், இருமல், பிடித்த உணவை சில தயக்கத்தினால் உண்ணாமலிருப்பது போன்ற தருணங்களில் குழந்தையின் பசியின்மையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பசியின்மைக்கான காரணங்கள்:

  1. வளர்ச்சி விகிதம்:

குழந்தைகளின் வளர்ச்சி 0-6 மாதங்களில் வேகமாகவும், 6-12 மாதங்களில் மெதுவாகவும், 12-18 மாதங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறும். அதனால் தான் குழந்தை 14-15 மாதங்கள் தனது 1 வயதில் (12 மாதங்கள்) சாப்பிட்டதை விடக் குறைவாக உண்ணும். அத்தருணங்களில் உணவைப் பிரித்து சிறு சிறு அளவில் சிறிய இடைவேளைகளில் கொடுத்தால் ஊட்டச்சத்து பெற வைக்கலாம்.

  1. பல் வளர்ச்சி:

பொதுவாக குழந்தைகளுக்கு 8-10 மாதங்களில் பல் முளைக்கும். அப்போது சுகவீனம், வலியால் பசியின்மை ஏற்படும். 5-7 மாதங்களில் குழந்தைகள் பற்கள் முளைக்க இருப்பதால்,  ஈறுகளை கடிக்கும். இதனால் ஏற்படும் வலியைப்போக்க மென் பொம்மைகள், மசித்த கேரட், பூசணி, வாழை, அரிசி, தானிய உணவுகள் கொடுக்கலாம்.

  1. திரவஉணவுகள்:

தண்ணீர், பழச்சாறு, பால் போன்றவற்றை அதிகமாக குடிப்பதால் குழந்தை உணவை கொஞ்சமாகவே உண்ணும். சமச்சீரான சத்துள்ள தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைக்கு 6 மாதம் வரை தண்ணீர் தேவையில்லை. தவழும் குழந்தைக்கு பால் (அதிக அளவில்) கொடுத்தாலே பசி போய்விடும். அந்த பாலின் அளவைக் குறைத்து மற்ற உணவுகளையும் அறிமுகப்படுத்துதல் அவசியம்.

  1. நோய்:

நோய்தொற்று என்பது மிக ஆபத்தான ஒன்று. கிருமி மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் (ஃப்ளூ, காதுவலி, தொண்டைவலி, மூக்கொழுகல்) வலி மற்றும் சுகவீனத்தை ஏற்படுத்தி, உணவுபழக்கத்தில் இடையூறு ஏற்படுத்தும். நோய்களால் குழந்தையின் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். பசியின்மைக்கு புழுத்தொற்றும் ஒரு காரணமாகும்.  புழுநீக்கம் செய்வதே உடனடி தீர்வாகும்.  அதுவே குழந்தையின் உடல் நலத்தை மேம்படுத்தும். இரத்தசோகையும் பசியின்மைக்கு மற்றொரு காரணமாகும். அதனால், குழந்தை களைப்பாகவும், பலவீனமாகவும் இருக்கும். இது போன்ற சமயங்களில் குழந்தை நல மருத்துவரின் அறிவுரை தேவை.

  1. உணவை வெறுத்தல்:

புதிய உணவை விரும்பி உண்ண குழந்தைக்கு சில காலம் பிடிக்கும். பொறுமையும், தீவிர முயற்சியும்,இணக்கமான சூழ்நிலை, குழந்தையே உணவை எடுத்து சாப்பிடவைத்தலும், அதிகபடியான உணவு கொடுக்காமலிருப்பதும் குழந்தையை நன்றாக உண்ண வைக்கும்.  தினமும் ஒரே மாதிரியான உணவை உண்பதும் குழந்தைக்குப் பிடிக்காமல் போகும். பல விதமாக, பசியைத் தூண்டக்கூடிய  வகையில் உணவை அளிப்பது முக்கியம். சில உணவுகளை ஜீரணிக்க நேரம் ஆவதால் பசி எடுக்க நேரம் ஆகலாம்.

எப்பொழுது பசியின்மைப்பற்றி கவலைப்பட வேண்டும்?

பசியின்மை என்பது சில காலம் மட்டுமே இருக்கும். ஆனால் அக்காலக்கட்டத்தில் முற்றிலும் சாப்பிட மறுத்தாலோ, அல்லது நை, நை என்று அழுது கொண்டிருந்தாலோ அல்லது எடை குறைந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பசியின்மையோடு சுரம், தோளில் கட்டி பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கவனம் தேவை.

பசியை தூண்டுவது எப்படி:

  • உணவு பழக்க வழக்கத்தில் சில சில மாறுதல் செய்வதன் மூலம் மேம்படுத்தலாம்.
  • துத்தநாகம் நிறைந்த உணவுகள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்திசெய்து, முறையான செரிமானம் நடக்கும். எ.கா. கோழி.
  • செரிமானத்திற்கான போதுமான நேரத்தை செலவழிப்பது, சமமாக உணவை சாப்பிடுவது.
  • பசிக்கு உதவும் உணவை உட்கொள்ளுதல். ஓமம் மற்றும் துளசி உன்னதமான எடுத்துக்காட்டுகள். ஓமம் மற்றும் துளசி இலைகளை நீரில் காய்ச்சி கொடுக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி ஒரு ஆரோக்கியமான உணவே ஒரு குழந்தைக்கு ஊட்டமளித்து வளர்த்த வேண்டும்.