எனது குழந்தைக்கு சரியான அளவு தாயிப்பால் கிடைகின்றதா?

எனது குழந்தைக்கு சரியான அளவு தாயிப்பால் கிடைகின்றதா?

 

எனது குழந்தைக்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைகின்றதா?

குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் பல பெண்களால் கொடுக்க இயலுகிறது.  5% குறைவான பெண்களுக்கு மட்டுமே தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை.

உங்கள் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைகிறது என்பதை நீங்கள் உறுதி செய்ய விரும்பினால், பேறுக்கால மருத்துவ உதவியாளர் ஒருவரையோ, தாய்ப்பால் தொடர்பான ஆலோசகரையோ கலந்தாலோசிப்பது அவசியம்.

அவர்கள் குழந்தை சரியான முறையில் பால் அருந்துகிறதா, தேவையான அளவு பால் கிடைகிறதா, மார்போடு இணைந்துள்ளதா என்பதை கவனித்து சரி செய்வர்.

மார்பினை பற்றுதல் :

குழந்தையின் வாய் அகன்று காணப்படுவது, வாயில் மார்பினை கவ்வி இருத்தல்.

குழந்தையின் தாடை மார்போடு ஒட்டி இருத்தல், கீழ் உதடு சுருண்டு காணப்படுதல், மேலும் அவர்கள் மூக்கு மார்பினால் நசுக்கப்படாது இருத்தல்.

தாய்ப்பால் சரியாக கொடுத்தால் மார்பில் வலி இருக்காது. முதல் சில முறை மட்டுமே உரிஞ்சுவது நன்றாக தெரியும். வாயில் மேல் காம்பை சுற்றியுள்ள கருப்பு பகுதி தெரியும்.

பால் சுரப்பதை அதிகப்படுத்துதல்:

உங்கள் குழந்தை சரியாக பால் அருந்த துவங்கும் வரை அதற்கு செயற்கையான பாலையோ அல்லது புட்டிப்பாட்டிலையோ கொடுப்பதை தவிருங்கள்.  அந்த குழந்தைக்கு சரியாக பால் அருந்திப்பழக சில வாரங்கள் தேவை. குழந்தைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பாலூட்டவும்..

சரியாக குடிக்க பழகிய பிறகு,  பாலூட்டி முடித்த பின்பு சிறிது பாலினை பீச்சி எடுப்பதன் மூலம் பால் சுரப்பதை அதிகரிக்க இயலும்.

ஒவ்வொரு முறை பாலூட்டும் பொழுதும், இரண்டு மார்பு மூலமாகவும் பாலூட்டவும். ஒவ்வொரு முறையும் வேறு வேறு மார்பில் இருந்து துவங்கவும்.

உங்கள் குழந்தையை மார்போடு அனைத்து உங்கள் தோலோடு அதன் தோல் உரசுவது போல் வைத்து பாலூட்டவும்.  இதன் மூலம், குழந்தை அழுவதற்கு முன்பே அதற்கு பசிக்கிறது என்பதை உங்களால் உணர இயலும்.

மிகவும் அரிதாக அன்னையருக்கு, மருந்துகள் மூலம் பால் சுரக்க வைக்கப்பட வேண்டியது இருக்கும். ஆனால் இது எப்போதும் அவசியம் அல்ல.

 

          பால் சுரப்பதை பாதிக்கும் விஷயங்கள் :

 • சரியாக குழந்தையை பிடிக்காது பாலூட்டுதல். மார்பினை குழந்தை சரியாக கவ்வாது இருத்தல்.
 • மது மற்றும் புகைபழக்கம். பாலூட்டும் பொழுது இவை இரண்டு பழக்கமும் பால் சுரப்பதை பாதிக்கும்.
 • மார்பக அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தால், முக்கியமாக மார்பக காம்பு இடம் மாற்றப்பட்டிருந்தால், கொடுப்பதற்கு சிறிது சிரமமாக இருக்கும்.
 • குழந்தை பிறந்து பின்பு அதனோடு இல்லாது தனித்து இருத்தல். குறை மாதத்தினாலும், வேறு காரணத்தினாலும் அப்படிப்பட்ட நிலையில், மார்பகங்களில் இருந்து மிருதுவாக பீச்சி எடுக்க வேண்டி இருக்கும்.
 • உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ உடல்நிலை சரிஇல்லாது இருத்தல்.
 • மார்பில் இருந்து பால் அருந்த பழகுவதற்கு முன்பே குழந்தைக்கு செயற்கை பால் பொருட்கள் கொடுத்தல்.
 • மார்பக காம்பு கேடயங்கள் பயன்படுத்துதல். ஆனால் உங்கள் காம்புகள் சேதமடைந்திருக்கும் நேரத்தில் இப்படி கொடுப்பதுதான் சிறந்த வழி.
 • நீங்கள் உண்ணும் மருந்துகள் காரணமாகவும் பால் குறையலாம்.
 • மனதில் சோகம், மன அழுத்தம், பயம் காரணமாக.
 • குழந்தையின் நாக்கு சேதமடைந்தால் அல்லது நாக்கின் அசைவு குறைவாக இருத்தல்.

குழந்தை எத்துனை முறை பாலருந்தும் ?

இது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். சில குழந்தைகள் எப்போதும் பால் அருந்த விரும்பும். இது பசிக்கா கஅல்லாது, அவ்வாறு குடிப்பதை விரும்பும். மற்றவை பசிக்கையில் மட்டும் பாலருந்தும்.

முதல் இருபத்து நான்கு மணி நேரத்தில், உங்கள் குழந்தை பால் அருந்த இயலாமல் சோர்வாக காணப்படலாம். ஆனால் அதற்கு பின்பு,

1 முதல் 7 வாரங்கள் வரை:

ஒவ்வொரு 2  அல்லது 3 மணி நேரங்களுக்கு ஒரு முறை,  அல்லது தினமும் 12 முறை.

இது முதலில் மிகவும் அதிகம் என தோன்றலாம். குழந்தைக்கு சரியான அளவில் பால் கிடைக்கிறதா என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் குழந்தையின் வயிறு மிகவும் சிறியது என்பதால், அடிக்கடி அதனை நிரப்ப வேண்டியதாக இருக்கும்.

1 முதல் 5 மாதங்கள் வரை :

ஒவ்வொரு 2 ½ முதல் 3 ½ மணி நேரங்களுக்கு ஒருமுறை, 7 முதல் 9 முறை தினமும்.

குழந்தை வளர வளர,  சரியாக பால் குடிக்க துவங்கும். அப்போது அதிகநேர இடைவெளி விட்டு பாலூட்டுதல் சாத்தியப்படும். மேலும் குறைந்த நேரத்தில் பால் குடித்து முடித்துவிடும்.

7 மாதத்திலும் அதற்கு பிறகும் :

5 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை, தினமும் 4 முதல் 5 முறை.

இந்த  நிலையில் நீங்கள் பாலூட்டும் வரை குழந்தை பால் குடித்துக்கொண்டே இருக்கும்.

எந்த அளவிற்கு நான் பால் பீச்சி எடுக்க வேண்டியது இருக்கும்?

உங்கள் குழந்தைக்காக நீங்கள் பால் பீச்சி எடுப்பதாக இருந்தால், இந்த விதிகளை மனதில் கொள்ளுங்கள்.

1 மாதம் முடியும்வரை, 70  முதல் 85கிராம் பாலை ஒரு தடவை அருந்தும். இவ்வாறு தினமும் எட்டு முறை அருந்தும். எனவே 24 மணிநேரத்தில் 566 முதல் 680 கிராம் பால் அவர்களுக்கு தேவைப்படும்.

6 மாதத்தில் 680 முதல் 850 கிராம் பாலை 6 அல்லது  8தடவையில் அருந்தும். மேலும் திட உணவு உண்ண ஆரம்பித்த பிறகு இந்த பால் அளவு குறையும்.

மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் தோராயமான அளவுகளே. ஒவ்வோரு குழந்தைக்கும் இது மாறுபடலாம்.

எந்த வயதிற்கு எவ்வளவு தேவை?

தேவையான பாலின் அளவு        குழந்தையின் வயது
7 மில்லி (ஒரு தேக்கரண்டி அளவு) 1 நாள்  (0 – 24 மணி நேரங்கள்)
14 மில்லி (3 தேக்கரண்டி அளவு) 2 நாள்  (24 – 48 மணி நேரங்கள்)
38 மில்லி 3 நாள் (48 – 72 மணி நேரங்கள்)
58 மில்லி 4 நாள் (72 – 96 மணி நேரங்கள்)
65 மில்லி 7 நாள் (144 – 168 மணி நேரங்கள்)

தேவைக்கு அதிகமாக குழந்தைக்கு பாலூட்ட இயலுமா?

முடியும். நீங்கள் பால் புட்டி வழியாக உங்கள் குழந்தைக்கு பாலூட்டினால், அவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது.  மார்பில் இருந்து பால் உண்ணும் குழந்தையால், குறைந்த பட்ச, அல்லது தாகம் தீர்ந்து விடும்.  ஆனால் பால் புட்டியில் பால் உண்ணும் குழந்தையால் அவ்வாறு இயலாது. குறைந்த அளவு பால் தேவையாக இருந்தாலும், புட்டியில் இருந்தும் வரும் வேகம் காரணமாக அதிகமான அளவுபால் குழந்தைக்கு கிடைத்துவிடும்.

புட்டியில் மூலம் அதிக அளவு புகட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?  

மெதுவாக குழந்தைக்கு பாலூட்டவும். மேலும் அதற்கு போதும் என்று சொல்ல அவ்வப்போது வாய்ப்பளிக்கவும்.

மிக வேகமாக குழந்தை பால் அருந்துவது போன்று தெரிந்தால், அதற்கு மூச்சிழுக்க சில நொடிகளுக்கு ஒரு முறை இடைவெளி விடவும். முதல் இரண்டு மாதங்களில் இது மிகவும் அவசியம், காரணம் குழந்தை பால் உண்ண அப்போது தான் பழகும்.

குழந்தைகள் திட ஆகாரம் உண்ண துவங்கியபிறகு, தாய்ப்பால் குறைவாக அருந்துவார்கள். முதல் பிறந்த நாள் நெருங்க நெருங்க, நாள் ஒன்றிற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே தாய்ப்பால் அருந்துவார்கள்.

குழந்தைக்கு 1 வயது ஆன பிறகு, மாட்டுப்பால் குழந்தைக்கு சிப் கப் மூலம் புகட்டலாம்.

மாட்டுப்பால் நல்லது என்றாலும், அதனை அதிகமாக கொடுப்பதை தவிர்க்கவும். காரணம், மற்ற சத்து உணவுகளுக்கு பசி இல்லாது போய்விடும். (அதிகமான மாட்டுப்பால் அருந்துவதால், குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். ஒருநாளில் 450 – 680 கிராம் மாட்டுப்பால் புகட்டலாம்.

மேலும் 1 வயது கடந்தும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட விரும்பினால் நீங்கள் புகட்டலாம்.

தேவையான சத்துக்களை உங்கள் குழந்தை திட ஆகாரங்களில் இருந்து பெரும் என்றாலும், தாய்ப்பால் தேவையான அளவு கலோரிகள், எதிர்ப்புசக்தி, வைட்டமின்கள், மற்றும் நொதிகள் ஆகியவற்றை வழங்கும்.

தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என்பதற்கு என்ன அறிகுறி?  

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் கிடைகிறது என்பதை, பின்வரும் வழிகளில் தெரிந்துகொள்ளலாம்.

 1. உங்கள் மார்பகம் மிருதுவாகிவிடும். குழந்தை அவற்றில் இருந்த பாலினை அருந்திவிட்டதால் மிருதுவாகும்.
 2. தாய்ப்பால் புகட்டிய பின்பு உங்கள் குழந்தைதிருப்தியாக காட்சியளிக்கும்.
 3. பிறந்தவுடன் குறைந்த எடை பின்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லுதல்.

(பல குழந்தைகள் பிறந்தவுடன் இருக்கும் எடையில் 7% எடையை இழந்து பின்பு 2 வாரங்கள் ஆகும் பொழுது மீண்டும் எடை அதிகரிக்கும்.

தோராயமாக தெரிந்துகொள்ள:

 1. எடை அதிகரிப்பு:

முதல் நான்கு மாதங்களுக்கு, ஒரு வாரத்திற்கு  170 – 226 கிராம் வரை எடை அதிகரிக்கும். பின்னர் 4 – 7 மாதங்களுக்கு. 113 – 170 கிராம் வரை எடைகூடும்.

 1. சிறுநீர்கழித்தல்:

பிறந்தவுடன் அன்னையிடம் இருந்து கொலோஸ்ட்ரம் தான் கிடைக்கும் என்பதால், சில நாட்களுக்கு குழந்தை அதிகமாக சிறுநீர் கழிக்காது. ஆனால் தாய்ப்பால் புகட்ட ஆரம்பித்த உடன், நாள் ஒன்றிற்கு 6 முதல் 7 தடவை சிறுநீர் கழிக்கும்.

 1. மலம்:

முதல் மாதத்தில் நாள் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 3 முறை மலம் கழிக்கும். அது கரு நிறத்தில் துவங்கி வெளீர் மஞ்சள் நிறமாக பிறந்து 5 முதல் 7 நாட்களுக்குள் மாறும்.

ஒருமாதம் ஆன பிறகு குழந்தை மலம் கழிப்பது குறைவாக இருக்கும். ஒரு சில நாட்களுக்கு மலம் கழியாது கூட போகலாம். 4 – 6 மாதங்களில்,  திட உணவு கொடுக்க துவங்கிய பிறகு ஒரு நாளைக்கு ஒருமுறை மலம் கழியும்.

தேவையான அளவு பால் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறி என்ன?

 1. தொடர்ந்து எடை குறைவது. 5 நாட்கள் கழிந்தும் உங்கள் குழந்தை எடை கூடவில்லை என்றால், மருத்துவரை அணுகுதல் அவசியம்.
 2. பிறந்து 5 நாட்கள் கழிந்தும் சிறுநீர் கழிப்பது நாள் ஒன்றிற்கு 6 முறைக்கும் குறைவாக இருந்தால்.
 3. பிறந்து 5 நாட்களுக்கு பிறகும் குழந்தை கருநிறத்தில் மலம் கழித்தால்.
 4. உங்கள் குழந்தையின் சிறுநீர் மிகவும் கருநிறத்தில் இருந்தால் ( நீர்சத்து உடலில் குறைவாக உள்ளது என்பதன் அறிகுறி இது)
 5. பல நேரங்களில் குழந்தை அலட்சியமாக இருத்தல். பாலூட்ட மார்பு அருகில் வைத்த உடன் உறங்கிவிடும்.
 6. வாய் மற்றும் கண்கள் வறட்சியாக காணப்படுதல்.
 7. பாலூட்டு கையில் விரைவாக திருப்தி அடையாது இருத்தல். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பால் குடித்தல்.
 8. பாலூட்டிய பிறகு உங்கள் மார்பு மிருதுவாக இல்லாது இருத்தல்.
 9. சத்தம் இன்றி பால் குடித்தல். (சில குழந்தைகள் சத்தம் இன்றி பால் குடிக்கும். மற்ற விஷயங்கள் சரியாக இருந்தால் இதனை ஒதுக்கிவிடலாம்)

தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால், உடலில் நீர்சத்து குறைந்து போகும். இது மிகவும் ஆபத்தானது ஆகும்.

அவ்வாறு சரியான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று நீங்கள் கருதினால், மருத்துவரை அணுகுவது நலம்.

தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லை என்று இவற்றைவைத்துமுடிவெடுத்தல்கூடாது :

 1. உங்கள் மார்புகள் நிறைந்தது போன்ற உணர்வு உங்களுக்கு இல்லாது இருத்தல். பல தாய்மார்களுக்கு இந்த உணர்வு இருக்கும். உங்கள் குழந்தையின் தேவைக்கு ஏற்ப உங்கள் உடல் மாறுபடும். இது மிகவும் தீடீர் என நிகழும். சரியாக பாலூட்டும் தாய்மார்களுக்கும் இவ்வாறு தோன்றுவது இயல்பு.
 2. இரவு முழுவதும் குழந்தை உறங்குவது. இதனால் அதற்கு பால் சரியாக கிடைக்கவில்லை என அர்த்தம் ஆகாது. எப்போதும் தூங்கி வழியும் குழந்தைக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம்.
 3. பாலூட்டிய பிறகும் குழந்தை அழுதல். அதற்கு வேறு காரணங்கள் உள்ளன.
 4. எப்போதும் பாலூட்ட வேண்டிய கட்டாயம், அதிக நேரம் பால் குடித்தல்.
 5. முதல் 10 நிமிடத்தில் குழந்தைக்கு தேவையான 90% பால் கிடைத்துவிடும் என்பதெல்லாம் சரியான தகவல் அல்ல. அதற்கு எப்போது தேவையோ அப்போது அது குடிக்கும். நாள் ஒன்றிற்கு 2 அல்லது 3 முறை மலம் கழியலாம்.
 6. சிறிதளவே பால் உங்களால் பீச்சி எடுக்க முடிகிறது. இதன் காரணமாக நீங்கள் மனது உடைந்து போகுதல் அவசியம் அல்ல. அப்படி நேர்ந்தால் நீங்கள் பால் பீச்சுதல் கூடாது.

பல அன்னையருக்கு அதிக அளவில் பால் இருக்கும். குழந்தைக்கு அது கிடைக்காமல் போவதற்கு காரணம் சரியாக அதற்கு குடிக்கத் தெரியாமல் இருப்பது அல்லது பிடித்திருக்கும் கோணம் தவறாக இருப்பது. அப்படிப்பட்ட நேரங்களில் மார்பில் இருந்து பாலினை பீச்சி எடுத்து பின்பு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.

மார்பில் இருந்து பாலூட்டிய பிறகும் குழந்தைகள் புட்டிபாலில் இருந்தும் பால்குடிக்கும். இதனால் அவை பசியோடு இருப்பதாக அர்த்தம் அல்ல. புட்டிபால் மூலம் பால் கிடைத்தால் எப்போதும் குழந்தைகள் அதிகம் அருந்தும்.

பிறந்து முதல் சில வாரங்களில், பால் குடிக்கும் பொழுது பாலின் வேகம் குறைந்தால், தேவைப்படும் அளவு குடிக்கவில்லை என்றாலும் குழந்தைகள் உறங்கிவிடும்.

ஆனால் நான்கு அல்லது 6 வாரங்கள் முடியும் தருணத்தில் பாலின் வேகம் குறைந்து இருந்தால் உறங்காது, மார்பு காம்புகளில் இருந்து வாயை அகற்றுதல் அல்லது அழுவது என தங்கள் பசியை வெளிப்படுத்தும்.

எனவே குழந்தைக்கு பாலூட்ட சரியான முறையை கையாளவும். மேலும் மார்பகங்களை மிருதுவாக அழுத்துவதன் மூலம் குழந்தைக்கு பால் அதிகம் கிடைக்கும்.

முடிவு :

முதல் முறை குழந்தை பெற்ற அன்னையர் குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்று வருந்துவர். முதல் 6 மாதத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்கு இணை வேறுதுவும் இல்லை. மேலும் பாலூட்டும் பொழுது குழந்தை எந்த அளவுபால் அருந்துகிறது என்பதை கணிப்பது கடினம்.

தேவையான அளவு பால் அதற்கு கிடைகிறது என்று நாம் கூறுவதற்கு, பாலூட்டிய பிறகு குழந்தை அமைதியாக இருத்தல். தொடர்ந்து எடை கூடியும், ஆரோக்கியமாகவும் இருத்தல்.