குழந்தையின் வயிற்றுப்போக்கை நீக்கும் வழிகள்

குழந்தையின் வயிற்றுப்போக்கை நீக்கும் வழிகள்

 

குழந்தையின் மலம் ஆரம்ப காலங்களில் மிருதுவாகவும் தளர்வாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் மலம் மிகவும் நீர்த்துப்போய் காணப்பட்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

வளர்ந்த நாடுகளில் வயிற்றுபோக்கால் குழந்தைகள் இறக்கும் சதவிகம் மிகவும் குறைவு. ஆனால் வளரும் நாடுகளில் வயிற்றுபோக்கைப் பற்றிய சரியான நோய் தீர்க்கும் வழிகளை அறியாததால், தீவிர வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பு சதவிதம் அதிகமாக உள்ளது.

எத்தனைமுறைமலம்கழிகிறது, மலத்தின்  நீர்த்தன்மை ஆகியவற்றால் வயிற்றுப்போக்கின் தீவிரத்தை அறியலாம். திட உணவுக்கு மாறும் குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்படுவது இயல்பு. ஏனெனில் குழந்தையின் ஜீரணசக்தி மாற்றம் அடைகிறது. மேலும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை குழந்தைக்கு குழந்தை மாறுபடும். பொதுவாக புதிய உணவை ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு சிறிது வயிற்றுபோக்கு ஏற்படும்.

வயிற்றுபோக்குக்கான காரணங்கள்

குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான சில காரணங்கள் பின்வருமாறு:

வைரஸ் தொற்றுகள்

குழந்தைகளின் வயிற்றுபோக்கிற்கு ரோடோ வைரஸ் முக்கிய காரணியாகும்.பெரியவர்களை விட குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி வளரும் நிலையில் இருப்பதால், இத்தொற்றுகளுக்கு எளிதில் உள்ளாகிறார்கள். இதனால் நீர்ச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது.

ஒட்டுண்ணிகள்

ஒட்டுணிகளின் தொற்றுக்கு ஆளாகும் போது கிருமியை வெளித்தள்ள வயிற்றுபோக்கு ஏற்படும். அப்போது காய்ச்சலும் ஏற்படும். குழந்தைகள் காப்பகத்திற்கு செல்லும் குழந்தையாக இருந்தால், சுகாதாரக் குறைவால் பிற குழந்தைகளின் மூலம் வயிற்றுபோக்கு பரவலாம்.

 உணவு ஒவ்வாமை

பொதுவாக லாக்டோஸ் சகிப்பின்மையால் குழந்தைகளுக்கு மிதமான வயிற்றுப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு, தாய் உண்ணும் சில உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுபோக்கு உண்டாகும்.  குழந்தைக்கு பால் புரதங்களின் ஒவ்வாமையால் வயிற்றுபோக்கு ஏற்படுவது பொதுவான காரணம் ஆகும்.

ஆண்ட்டிபயாடிக்ஸ்

சாதாரணமாக ஆண்டிபயாடிக்ஸ் உண்ணும், பத்தில் ஒரு குழந்தைக்கு வயிற்றுபோக்கால் பாதிப்பு உண்டாகிறது . ஆண்டிபயாடிக்ஸ் வயிற்றில் உள்ள கெட்ட கிருமிகளோடு சில நல்ல கிருமிகளையும் அழிப்பதால் குழந்தைக்கு வயிற்றுபோக்கு வரும்.

என் குழந்தையை கவனிப்பது எப்படி?

வயிற்றுபோக்கு என்பது சாதாரணமாக எரிச்சலைத் தரும். அதிலும் குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு என்றால் அவை மிகவும் பலவீனமாகிவிடும். எந்தத் தீவிர முயற்சியும் இல்லாமலே வயிற்றுபோக்கு என்பது தன்னாலேயே சரியாகக்கூடிய ஒன்று. கீழ்க்கண்ட முறைகளால் நீங்களும் உங்கள் குழந்தையும் வயிற்றுபோக்கிலிருந்து விடுபடலாம்.

நீர்ச்சத்தே உங்கள் நண்பன்:

வயிற்றுபோக்கால் உடலின் நீர்சத்து குறைகிறது. நீர்சத்து குறைதல் சிலசமயங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே குழந்தைக்கு போதிய அளவு திரவ உணவைக் கொடுக்க வேண்டும். சாதாரண தண்ணீரே போதுமானது. ORS கொடுப்பது அதற்கான் சரியான தீர்வு. காய்கறி குழம்பும் சூப்பும் கொடுக்கலாம். குழந்தைக்குப் பிடிக்காவிட்டால் நீருக்கு பதில் ஊட்டசத்துள்ள பால் கொடுக்கலாம்.

உணவு கொடுப்பதை நிறுத்தாதீர்கள்:

வயிற்றுபோக்கு இருந்தாலும் குழந்தைக்கு உணவு கொடுக்கவும். மிதமான வயிற்றுபோக்கு என்றால், ஒவ்வாமை இல்லையானால் பால் மற்றும் பால் பொருள்களைக் கொடுக்கலாம்.  குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுபோக்கு ஏற்பட்டால் மாவுச்சத்துள்ள உணவுகளான தானியம், உலர்தானியம், பாஸ்த்தா, மசித்த உருளைக்கிழங்கு போன்றவற்றைக் கொடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:

அதிக அடர்த்தியும் இனிப்பும் கொண்ட சோடா மற்றும் பழரசங்கள் வேண்டாம். வெறும் கஞ்சியை விட பால் சேர்த்த கஞ்சியில் கூடுதல் ஊட்டசத்து உள்ளதால் அதைக் கொடுக்கலாம். குழந்தையின் உடலில் உள்ள நீர்சத்து முக்கியம் என்பதால் திரவ உணவைக் கட்டுப்படுத்த வேண்டாம்.

வயிற்றுபோக்கை தவிர்ப்பது எப்படி?

வயிற்றுபோக்கு எளிதில் பரவக்கூடியது என்பதால், நிறைய குழந்தைகள் இருந்தால் பார்த்து கொள்வது சற்றுசிரமம் ஆகும். எனவே இதனை தவிர்க்க குழந்தை இருக்கும் சுற்றுபுறத்தை மிகவும் தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குழந்தை தனது வாயில் என்னபோடுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். மேலும், உங்களது கைகளைச் சுத்தமாக வைக்க வேண்டும். நல்ல தூய்மையான பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், குழந்தை வயிற்றுபோக்கால் அவதிப்படும் தருணங்களும் உண்டு. சுத்தமாக இருந்தால், இந்நோய் மீண்டும் வராமல் தடுக்கலாம். குழந்தைக்கு ஏற்படும் சுகவீனத்தை தவிர்க்க, சிலவழிகளை பின்பற்றலாம். தொடர்ந்து வரும் மலத்தினால், குழந்தையின் பிட்டத்தில் எரிச்சல் ஏற்படும். மலம் கழித்த பின்னே, பிட்டத்தை சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் பெட்ரோல் ஜெல்லை பூசினால், மிருதுவாக இருக்கும்.

மருத்துவரை நாட வேண்டுமா?

வயிற்றுபோக்கு சில நேரங்களில், எதிர்பார்த்ததை விட மோசமாகவும் இருக்கும். இச்சமயங்களில், மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். பின்வரும் அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை நாடுக.

  • நீர்சத்து குறைபாடு அறிகுறிகள்; அதாவது, நீண்ட நேரத்திற்கு சிறுநீரைக் கழிக்காமலும் (12 மணிநேரம்), உள்ளடங்கிய கண்கள், அழும்போதோ அல்லது சோம்பல் முறிக்கும் போது குறைந்த அல்லது கண்ணீரில்லாமை, அதீத அயர்சி, தூக்கம் மற்றும் விளையாடமல் சோம்பி இருப்பது.
  • மலத்தில் இரத்தம்.
  • தொடர்ந்து வாந்தியெடுப்பது.
  • மலத்தில் சீழ் அல்லது சளி கலப்பது.
  • அதிக காய்ச்சல் (102’F அதிகமாய் இருத்தல்).
  • இரண்டு வாரத்திற்கு மேல் நிலவும் மிதமான வயிற்றுபோக்கு.

முடிவுரை:

தளர்வான மலம் குழந்தைக்கு சாதாரணம் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். கொஞ்சமே தளர்வான மலம் மட்டுமே குழந்தை கழிக்கிறதே என்று வருந்த வேண்டாம். குழந்தையின் உடல் புதிய உணவுக்கு பழக்கப்படும் வரை அவ்வாறு தான் இருக்கும். அடிக்கடி மலம் கழித்தால் (மணிக்கு மூன்று அல்லது நான்கு முறை) மட்டுமே தேவையான மருத்துவ உதவிகளை செய்வது அவசியமாகும்.

பொதுவாக, வயிற்றுபோக்கு என்பது தீவிரமான உபாதை அல்ல. ஆனாலும், குழந்தையின் உடலில் நீர்ச்சத்தின் அளவு மிகவும் குறைந்தால், அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், மருத்துவரை அணுகத் தயங்காதீர். ஏனெனில், வருமுன் காப்பதே சிறந்தது.