மகப்பேறு காலத்தில் ஏற்படும் குமட்டல் வாந்தி மற்றும் தேவைப்படும் சத்துக்கள்

மகப்பேறு காலத்தில் ஏற்படும் குமட்டல் வாந்தி மற்றும் தேவைப்படும் சத்துக்கள்

 

ஒரு பெண்ணின் வாழ்வில் மகப்பேறு காலம் என்பது அழகான அதே சமயம் சற்று பயமிக்ககாலம் எனலாம். ஒரு குடும்பத்தின் மைய புள்ளியாக, அனைவரின் அன்பிற்கும் அரவனைபிற்க்கும் அந்த பெண் உரித்தானவள் ஆவாள். ஒரு இந்திய அம்மாவாக கணக்கில் அடங்கா முறைகள், என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பலர் கூறியுள்ளனர். சில நேரங்களில் இதுபோன்ற அறிவுரைகள் நமது பயத்தை மேலும் அதிகரிப்பது போன்றும் இருக்கும். எனவே மகப்பேறு காலத்தில் உடலிலும், மனத்திலும் என்ன என்ன மாற்றம் நிகழும் என்பதை ஒவ்வொரு கர்ப்பிணியும் அறிந்திருப்பது அவசியம்.  அவற்றை முழுமனதோடு ஏற்றுகொள்வது அவசியம். காரணம் “தாயின் மகிழ்ச்சியே குழந்தையின் வளர்ச்சியாகும்”.

மகப்பேரின் அறிகுறிகள்:

கருப்பையில் குழந்தை தங்கியவுடன் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றம் வாந்தி மற்றும் குமட்டல் ஆகும். இதனை ஆங்கிலத்தில் “மார்னிங் சிக்னஸ்” என்பர். குமட்டல் மற்றும் வாந்தி எந்த நேரத்திலும் வரலாம், காலையில் மட்டும் தான் என்றில்லை.

குமட்டல் வரும் பொழுது அதை தாங்கிக்கொள்வது கடினம் தான் என்றாலும், அது உடலுக்கு கேடு விளைவிக்காது. அது உடல் ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியாகும். பெண்ணின் உடல், இயற்கையான முறையில் அவளையும் அவளது குழந்தையையும் அவளது உணவில் உள்ள நச்சு பொருட்களிடம் இருந்து காப்பது ஆகும்.

குமட்டலின் காரணம் :

குமட்டல் வருவதற்கு இவைதான் காரணங்கள் என்று கூறி விட முடியாது. கர்ப்பம் காரணமாக உடலில் ஹார்மோன்கள் மாறுவதால் இது நிகழ்கின்றது.

நீங்கள் உண்ணும் உணவு காரணமாகவும் குமட்டல் வரலாம். இனிப்புகள், கபைன், மாமிசம், பால், முட்டை ஆகியவற்றை அதிக அளவில் உண்பதால் சிலநேரங்களில் குமட்டல் நிகழலாம். தானியங்கள் வயிற்றின் மீது சிறிது கருணைகாட்டும் எனலாம். சில உணவுகளின் மணம் கூட குமட்டலை வரவழைக்கும்.

எனவே குமட்டலின் காரணங்களை குறிப்பிட்டு கூற இயலாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும்.

எவ்வளவு நாட்கள் நீடிக்கும்?

குமட்டல் மற்றும் வாந்தி 70% கர்ப்பிணி பெண்களில் காணப்படும்.  4-8 வாரங்களில் துவங்கி 3-4 மாதங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். சில நேரங்களில் பிரசவம் வரைக்குமே வாந்தி நீடிக்கலாம். மகப்பேறு காலத்தில் ஒருநாளில் இருமுறை வரை பெண்கள் வாந்தி எடுப்பது சாதாரணம். மேலும் அனைத்து பெண்களுக்கும் குமட்டல் மற்றும் வாந்தி இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

சில பெண்களுக்குகடுமையானவாந்தி, தலைசுற்றல், குமட்டல் ஆகியவை இருக்கும். இதன் காரணமாக உடலில் நீர்சத்து மற்றும் எலெக்ட்ரோலைட் குறைபாடு ஏற்பட்டு ஊடச்சத்து குறைபாடு, எடை குறைவு ஆகியவை ஏற்படலாம். இதனை ஹைபர்மீசிஸ்கிராவிடாரம் என்று கூறுவர். இந்தநிலையில் தாய் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் திரவத்தை உடலினால் உள்வாங்க இயலாது. அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுதல் நலம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நரம்பு மண்டலம், கல்லீரல் பாதித்து அதன் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

குமட்டல் மற்றும் வாந்தியை எவ்வாறு எதிர்கொள்வது?

  1. காலையில் ஏற்படும் குமட்டலுக்கு சிறிய உணவோடு நாளை துவங்குவது பலனளிக்கும். ஒரு துண்டு பிஸ்கட், ஒரு துண்டு ரொட்டி ஆகியவை படுக்கையில் இருந்து எழும்போது குமட்டாது தடுக்கும்.
  2. அதிகம் புரதம் உள்ள உணவை உறங்க செல்லவதற்கு முன் உண்ணுவது
  3. காலையில் பால் அல்லது தேநீர் அருந்துவதை தவிர்த்தல். அதற்கு பதிலாக பழச்சாறு, நீர் அருந்தலாம். ஒரே நேரத்தில் அதிகமாக திரவ உணவு உட்கொள்வதும் வாந்தியை உண்டாக்கலாம்.
  4. 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிய அளவுகளில் தீனிகளை உண்டால் விரைவில் செரிமானம் நிகழும்.
  5. அதிக மணமுள்ள உணவுகளை தவிர்க்கவும்.
  6. கைகளில் எலுமிச்சை வைத்திருக்கவும். எலுமிச்சையின் மனம் அல்லது சுவை வாந்தியை தடுக்கும்.
  7. சரியான ஓய்வு உடலுக்கு கிடைப்பதை உறுதிசெய்யவும்.

மகப்பேறு காலத்தில் உணவுத்திட்டம்:  

மகப்பேறு காலம் முழுவதும் சரிசமமான உணவுத் திட்டத்தை கடைபிடிப்பது அவசியம். அதுமட்டுமின்றி இரும்பு மற்றும் போலிக் அமிலத்திர்கான சப்ளிமென்ட்டுகளை மருத்துவர் கூறுவதுபடி உண்ண வேண்டும்.

சரியான அளவுகளில் திரவ ஆகாரம் உண்ண வேண்டும். பால் தயிர், பாலாடைக்கட்டி ஆகியவற்றில் வைட்டமின் பீ12 நிறைந்திருக்கும். பாதம் மற்றும் வால்நட் போன்ற கொட்டைகளையும் பசிக்கும் நேரத்தில் கொறிப்பதற்கு வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்திய உணவுகளில் பல்வேறு பருப்புகள் மற்றும் பயிறுகள் இருப்பதால் அவற்றை நமக்கு ஏற்றவாறு சரியான அளவுகளில் உண்ணவேண்டும். பழங்கள் மற்றும் காய்களில் தேவையான அளவு நார்ச்சத்து கணிமசத்து மற்றும் வைட்டமின்கள் ஆகியவையும் அடங்கியுள்ளது. மாமிசம் உண்ண இயலும் என்றால், சூப் மற்றும் இறைச்சியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக மீன் உண்பது நல்லது. கடைகளில் அல்லாது வீட்டில் சமைத்த உணவுகளை உண்பது நலம். ஒவ்வொரு நபரின் உடலும் மகப்பேறு காலத்தில் வெவ்வேறு விதமாக இயங்கும். எனவே அவரவர் பழக்கங்களுக்கு ஏற்ப உண்ணுவது நலம். முடிந்த அளவிற்கு சரிசமமாக உண்ணுவது சரியான அணுகு முறையாகும்.

முடிவாக உடல் வெளிப்படுத்தும் மாற்றங்களை அறிகுறிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மனதை சந்தோஷமாக வைக்கும் விஷயங்களில் ஈடுபட வேண்டும். ஒருநோய் போன்று கர்ப்பத்தை அணுகுவதுநல்லதல்ல. வாழ்வில் நாம் நேர்மறையான எண்ணங்களோடு அணுகவேண்டிய பகுதியாகும் மகப்பேறு காலம்.