பாலூட்டும்போது முலைக்காம்புகளில் புண்கள் ஏற்படுகிறதா?

பாலூட்டும்போது முலைக்காம்புகளில் புண்கள் ஏற்படுகிறதா?

 

நாங்கள் தரும் நிவாரண வழி முறைகளை கடைபிடியுங்கள். பாலூட்டும் தாய்மார்களால் பொதுவாக, அடிக்கடி தெரிவிக்கப்படும் புகார் முலைக் காம்புகளில் ஏற்படும் புண்கள் குறித்துதான். பாலூட்டத் தொடங்கிய முதல் வாரத்தில், குழந்தை பாலை முதன் முதலாக உறிஞ்சத் தொடங்கியதும் சந்திக்கும் முதல் அனுபவம் என்றாலும், இதனால் வலியும், காம்புகளில் ஒருவித நொய்வுத் தன்மையும் ஏற்பட்டு பால் சரிவர அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தொடக்கத்தில் சில வினாடிகளுக்கு ஏற்படும் இந்த வலி பிறகு பாலூட்டும் நேரம் முழுவதும் ஏற்படுகிறது. இது பாலூட்டும் அனுபவத்தின் சாதாரண நிகழ்வாகவும், தவிர்க்க முடியாததும் கிடையாத்து என்பது இல்லை.

முலைக்காம்புகளில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

முலைக்காம்புகளில் வீக்கம், தோல் அழற்சி, நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள மருத்துவரைப் பார்த்து, உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தவறான வாய்ப்பூட்டு             

குழந்தையின் வாயில் சரியான ஆழத்தில் (அண்ணப்பகுதியில்) தாயின் முலைப்பகுதி பொருந்தாமல் இருந்தாலோ, வசதியான முறையில் பால் விழுங்கும் நிலை இல்லாவிட்டாலோ இது போன்ற புண்கள் ஏற்படுகின்றன. சரியான முறையில் குழந்தைக்கு பால் கிடைக்காத போது அது தாயின் முலைக்காம்புகளை கவ்வி இழுக்கிறது. முலையிலிருந்து தனது வாயை அடிக்கடி வெளியே எடுத்து மீண்டும் அழுத்தமாக முலைப் பகுதியை கவ்வுகிறது. அப்போது குழந்தையின் வாய் மார்பகத்திலிருந்து பிடுங்கப்படுகிறது.  இதனால் தாயின் முலைகள் சேதமடைந்து, வலியை ஏற்படுத்துகிறது.

நாக்கு-அமைவு

குழந்தையின் வாய்க்குள் இருக்கும் ஃபெர்னூலம் (வாயின் அடிப்பகுதியுடன் நாக்கை கீழே இணைக்கும் திசுகுழு) மிகக் குறுகியதாக இருந்தாலோ அல்லது நாக்குக்கு முன்னால் மிகவும் விரிவடைந்தாலோ நாக்கின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.. இதனால் வசதியான முறையில் தாயின் முலையை வாய்க்குள் பற்றி பால் உறிஞ்ச முடியாத நிலை ஏற்படுகிறது. இதுவும் தாயின் முலைப் பகுதிகளில் புண் ஏற்படுவதற்கும், பால் சரிவர அளிக்க முடியாததற்கும் காரணங்களாகும்.

வெண்புண்கள் குழந்தைக்குப் பாலூட்டும் போது முலைக்காம்புகளில் ஏற்படும் புண்கள் காரணமாக ஆரம்பத்தில் வலியேற்படுகிறது. பின்னர் இந்த புண்கள் ஒரு வித பூஞ்சை ( கேண்டியா ஆல்பிக்கன்ஸ் ) தொற்றாக மாறி வெண்புண்களாக, திட்டு, திட்டான வடிவில் மாறுகின்றன. இது வலி மற்றும் கடுமையான எரிச்சலையும் உண்டு செய்கிறது. இதற்கான அறிகுறிகள் அடர்த்தியான சிவப்பு, பளபளப்பான தோல், முலைகளில் கடுமையான வலி, மார்பகங்களில் குத்தல்வலி ஆகியவை அடங்கும். இந்த வலி குழந்தைக்கு பாலூட்டிய அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏற்படத் தொடங்குகிறது. குழந்தையின் வாய்க்குள் ஏற்படும் பூஞ்சான் தொற்றால் ஏற்படும் இந்த வெண்புண்கள் நாளடைவில் தாயின் முலைப்பகுதியிலும் பரவி வலியை அதிகமாக்குகிறது.

வாஸ்போஸ்மாஸ் (Vasospasm) என்பது முலைக்காம்புகளின் தசைப் பகுதிகளில் உள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் திடீர் இறுக்கம் அல்லது திடீர் ஒடுக்கம் ஆகும். இதனால் காயங்கள் மற்றும் ஊசிகுத்தல் போன்ற வலி ஏற்படுகிறது. பால் அளித்தவுடன் அல்லது அளிக்கும் போது சிறிதளவு இரத்தம் வருவதுடன், முலைகள் வெளிர்ந்த நிறத்துக்கு மாறி பிறகு மீண்டும் பழைய நிறத்துக்கு வருகிறது.

கொப்புளங்கள்

முலைக்காம்புகளில் தொடர்ந்து ஏற்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக அதே இடத்தில் கொப்புளங்கள் உருவாகின்றன. இதனால் பாலூட்டும் போது தாய்மார்களின் முலைக்காம்புகளின் உள் பகுதியில் வலி ஏற்படுகிறது. குழந்தை சரியான நிலையில் வாய்வைத்து பாலை உறிஞ்சாத போது இதுபோன்ற கொப்புளங்கள் உண்டாகின்றன.

டெர்மட்டிட்டிஸ்

டெர்மட்டிஸ், எக்ஸிமா, மற்றும் சொரியாஸிஸ் உள்ள தோலால் முலைக்காம்புகளில் வீக்கம், அரிப்பு ஏற்படலாம். வெளிர் சிவப்பு, வறண்ட தடிப்புகள் அல்லது தடிமனான தோல் செதில்கள் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. த்ரஷ் புண்களுக்கான கிரீம்கள் அல்லது லோஷன்களை இந்தப் பிரச்சினைக்கும் பயன்படுத்தலாம்.

இதற்கான சிகிச்சைகள்

தாய்ப்பால் அனுபவம் என்பது வலிமிக்க ஒன்றாக இருக்கக்கூடாது. நீங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போதோ அல்லது பால் குடித்து முடித்த போதோ உங்கள் முலைக்காம்புகளில் வலியையோ, புண்களையோ உணர்ந்தால் அதற்கான தீர்வுகளைக் கீழே காணலாம்:

மூலத்தை சரி செய்தல்

முலைக் காம்புகளில் புண்களை சரி செய்வதற்கு முதலில் இந்தப் புண்கள் தோன்ற காரணமான மூலத்தை சரி செய்ய வேண்டும். குழந்தையின் வாயில் மார்பகங்கள் சரியாக பொருத்தி வைக்காததால் தான் இதற்கு மூலக்காரணம். இந்தப் பிரச்சினையை சரி செய்தால் தாயின் முலையில் தொடர்ச்சியாக ஏற்படும் சேதங்களை தவிர்க்கலாம்.

இதற்கிடையில், குறைவான புண்கள் உடைய அல்லது புண்களற்ற மற்றொரு முலை மூலம் உங்கள் குழந்தைக்கு பால் அளித்து குழந்தையின் பசியை போக்குங்கள். மற்றொரு முலை குணமான பிறகு அந்த முலைக்கு குழந்தையை மாற்றுங்கள்.

உங்கள் பாலை பயன்படுத்தவும்

தாய்பால் முழுக்க, முழுக்க ஆண்டிபாக்டீரியாக்களால் நிறைந்த ஒன்றாகும். ஒவ்வொரு முறை பாலூட்டியப்பிறகும் முலைப்பகுதியை உங்கள் பாலால் ஈரமாக்கி, இலேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு காய்ந்தவுடன் மறக்காமல் துணியால் மூடவும்.

உங்கள் முலைக்காம்புகளை உலரவையுங்கள்

முடிந்த வரை, உங்கள் காம்புகளை காற்றில் உலர விடுங்கள். அல்லது ஒரு துண்டால் அவ்வப் போது துடைத்து உலறவிடுங்கள்.

உங்கள் மருத்துவரை அணுகவும்

அறிகுறிகளைப் பொறுத்து நோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சையை பரிந்துரைக்கும் மருத்துவரிடம் நீங்கள் செல்ல வேண்டும்.

வலியைக் குறைத்து பாலூட்டுவதற்கான வழிகள்:

சரியான நிலை மற்றும் வாய் தாள் பொருத்தம் . ஒரு சரியான இடத்தில் அமர்ந்து, உங்கள் குழந்தையை மார்பகத்துக்கு அருகே வசதியான நிலையில் வைத்து அவன் மூக்கு முலைக்கு நேராக பார்க்குமாறு செய்து கொள்ளுங்கள். பின் தலையை இலேசாக பிடித்துக் கொள்ளுங்கள். குழந்தை வாயை திறந்ததும், வாயின் அடிப்பகுதியில் (அண்ணப்பகுதியில்) உங்கள் முலையை வைக்கவும்.   ஊட்டத்தின் போது குழந்தை உங்கள் முலைக்கு இடைஞ்சல் தராமல் பாலை விழுங்கும். உங்கள் முலைக்காம்பு பாதுகாக்கப்படுவதை இது உறுதி செய்யும்.

அடிக்கடி பாலூட்டல்

ஒருமுறை பாலூட்டியப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த முறை பால் ஊட்டக்கூடாது. இதனால் குழந்தைக்கு அதிக பசி எடுத்து வேகமாக ஓட்டத் தொடங்கும். உதனால் உங்கள் முலைப்பகுதி சேதமாக வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு வலியை அதிகப்படுத்தும் என்பதால் சீரான இடைவெளியில் அவ்வப்போது குழந்தைக்கு சரியான நிலையில் குழந்தையை வைத்து பாலூட்டவும். இதனால் உங்கள் முலைக்காம்புகள் சேதமடைவது தவிர்க்கப்படுகிறது.

நாக்கு-அமைவு சரிபார்க்கவும்

குழந்தை அழும்போது அதன்நாக்கு வாயின் உள்புறத்திலுள்ள மேல் கூரைப்பகுதியை நோக்கி உயர்கிறதா அல்லது கீழ் உதட்டுக்கு வெளியே குவிகிறதா என்பதை கண்காணிக்கவும். மேற்கண்ட அசைவுகளை குழந்தை செய்யவில்லை என்றாலோ , அடிக்கடி இடைவெளிவிட்டு குடித்தாலோ அல்லது குடிக்கும் போது கிளிக்கிங் சப்தங்களை எழுப்பினாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். உங்கள் குழந்தையின் நாக்கு- பிரச்சினையை  ஃப்ரேனோட்டோ என்ற எளிய வழிமுறை மூலம் சிகிச்சையளிக்க முடியும். இந்த சிகிச்சையின்படி நாக்கு மற்றும் வாய் அடிபாகத்துக்கிடையேயான சதை பகுதியை வெட்டி சரி செய்வர்.

தாய்பாலூட்டுவது என்பது, தாய் மற்றும் குழந்தைக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்கும் அனுபவம் ஆகும். இந்த நிலையில் முலைக்காம்புகளில் வேதனையை அனுபவிக்கும் போது தாய்மார்களுக்கு தேவையற்ற மனஉளைச்சலை அதிகரிக்கும். எனவே இந்த பிரச்சினைக்கான காரணங்களை முதலிலேயே தெரிந்து கொண்டால் குழந்தைக்கு நல்ல முறையில், சந்தோஷமான முறையில் பாலூட்டுவதைத் தொடரலாம்.