கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் கூடுதலாக உண்ண வேண்டிய சப்ளிமென்ட்கள் யாவை :

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் கூடுதலாக உண்ண வேண்டிய சப்ளிமென்ட்கள் யாவை :

 

ஊட்டச்சத்து மிக்க உணவை கர்ப்பமாக இருக்கும் பொழுது பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் உண்ணும் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் கருவில் குழந்தை சரியாக வளர்ச்சி அடையாது.

ஊட்டச்சத்து மிக்க உணவிற்கு “சப்ளிமெண்ட்ஸ்” மாற்றாகாது. ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது தேவையான அனைத்து சத்துக்களும் உணவில் இருந்து கிடைக்கும் என கருத இயலாது. சில நேரங்களில் நமக்கு ஊட்டம் அளிக்க வேண்டிய அளவிற்கு மண்ணில் சத்துக்கள் இல்லாமல் போகலாம், அல்லது காய்கள் மற்றும் வைட்டமின்களை உண்ணும் அளவிற்கு நமக்கு நேரம் இல்லாமல் போகலாம்.

வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் உங்களது ஆரோக்கியத்திற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் கர்ப்பத்தின் ஒவ்வொரு நிலையிலும் உதவியாக இருக்கும்.  தேவைக்கும் குறைவாக சப்ளிமென்ட்ஸ் எடுக்கும் பொழுது, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த பாதிப்புகள் உங்கள் கருவையும் மோசமாக பாதிக்கலாம்.

பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் காயம் ஆறாமல் இருத்தல்,  முன்கூட்டியே பிரசவித்தல்,  இறந்த நிலையில் குழந்தை பிறப்பது போன்ற சிக்கல்களை இன்றும் இந்திய பெண்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக தேவையான அளவு ஊட்டச்சத்து அளிக்கும் சப்ளிமென்ட்ஸ் உண்ணாது இருத்தல் ஆகும். அவை விலை குறைந்து அல்லது இலவசமாக கிடைக்கும் போதும், இந்நிலை நீடிக்கின்றது.

சப்ளிமென்ட்களை உண்பதால், பெண்களின் இரத்தத்தில் வைட்டமின் அளவீடுகள் மாறுபடும். மருத்துவர்களை பொறுத்தவரை, இரும்பு, ஃபோலேட், வைட்டமின்டி , மற்றும் சிறிய அளவுகளில், கால்சியம், ஐயோடின் ஆகியவை பொதுவாக பெண்களிடம் குறைவாக காணப்படும் ஊட்டச்சத்துக்களாகும். இவை பெண்களின் கற்பகாலத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

எதை உண்ண வேண்டும் ?

போலேட் (இயற்கைவடிவம்) நரம்பு மண்டல குறைபாடுகளை சரி செய்ய உதவும் ஊட்டச்சத்தாகும். மகப்பேறுக்கு முற்பட்ட காலத்தில், 600 முதல் 800 மில்லிகிராம் அளவுகளில் போலேட் உணவில் இருப்பது அவசியம். விலை குறைவாகவும் , அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கிடைக்கும் படியும் இது அமைந்துள்ளது.

 ப்ரோபயாட்டிக்ஸ்:

கர்பகாலத்தில் உங்கள் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும். எனவே உங்கள் குழந்தை சுகப்பிரசவமாக பிறக்கும் தருணத்தில் அதற்கு தேவையான அளவு எதிர்ப்பு சக்தி இருப்பதற்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதனுள் இருப்பது அவசியம்.  அதற்கு நீங்கள் சரியான அளவுகளில் தொடர்ந்து ப்ரோபயாட்டிக்ஸ் எடுப்பது முக்கியம். இதன் மூலம், காதுகளில் ஏற்படும் தொற்று, மற்றும் முதல் சில வருடங்களில் உங்கள் குழந்தை நலமில்லாது போவது போன்றவை தடுக்கப்படும். மேலும் ப்ரோபியாட்டிக்ஸ் அம்மாவிற்கு பிரசவத்திற்கு முன்னும் பின்னும் மலச்சிக்கல் உண்டாகாது தடுக்கும்.

ப்ரீநேட்டல்வைட்டமின்கள்:

மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதற்கு ப்ரீநேட்டல் வைட்டமின்கள் எடுப்பது அவசியமாகும். முன்சூல் வலிப்பு வந்து குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதை இவைத டுக்கும். எனவேமருத்துவரைகலந்துஆலோசித்து, அவர் கூறும் அளவுகளில் இவற்றை எடுத்தல் அவசியம்.

வைட்டமின்டி :

பிரசவத்தின் போது, வைட்டமின் டி மிகவும் முக்கியமாகும்.  தாயாகப் போகும் பெண்கள், தங்களது உடம்பில் வைட்டமின் டி அளவுகளை சரிபார்த்து, குறைவாக இருப்பின், அதனை சரி செய்ய தேவையான அளவு வைட்டமின் சப்ளிமென்ட்களை உண்ண வேண்டும். ஆரோக்கியமான பெண்களுக்கு வைட்டமின் டி அளவுகள் 400 units / தீமை.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆய்வு முடிவுகள், வைட்டமின் டி, பிரசவகாலத்தில் ஏற்படும் சக்கரை நோய், முன்சூல் வலிப்பு, மற்றும் எடை குறைவாக குழந்தை பிறத்தலை தடுக்கும் என கூறுகின்றன. குழந்தையின் எலும்பு மற்றும் ஹார்மோன்கள் வளர்ச்சியடைவது, முழுக்க முழுக்க வைட்டமின் டியை நம்பியுள்ளது. மேலும் தாயின் உடலில் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கின்றது.

குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்டும் பொழுது, அவர்களுக்கு தினமும் 5,000ஐயூ/ நாள் வைட்டமின் டி கிடைத்தால், குழந்தைகளுக்கும் அது பாலின் மூலம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் ஒரு நாளில், 5 முதல் 10 நிமிடங்களுக்கு மதிய சூரியனில் முகம், கால்கள், கைகள், முதுகு தெரியும் படி நிற்க வேண்டும்.

வைட்டமின் பீ  :

இதனை வைட்டமின் பீ காம்பிளக்ஸ் எனகூறுவார்கள். இதனுள் உள்ள 8 வைட்டமின்கள் குழந்தை கருவில் வளர்ச்சி அடையும் பொழுது மிகவும் அவசியமானதாகும். முதல் மூன்று மாதம் மற்றும் இறுதி மூன்று மாதங்களின் போது பல பெண்கள் சோர்வாக உணர்வார்கள். அப்போது, வைட்டமின் பீ அதிகமுள்ள உணவை உட்கொள்ளுவதன் மூலம், உடலில் சோர்வு நீங்கி ஆற்றல் பிறக்கும். மேலும் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.

வைட்டமின் பீ 12 உங்களது நரம்பு மண்டலத்தை சரியாக வைத்துக்கொள்ள தேவையான ஊட்டச்சத்தாகும். மேலும், மகப்பேறு காலத்தின்போது, போலிக் அமிலத்தோடு சேர்த்து பீ12 சப்ளிமென்ட்கள் உண்ணும் பொழுது, பிறப்பிலேயே குழந்தைக்கு முதுகு தண்டு வடம் மற்றும் மைய நரம்பு மண்டல பாதிப்புகள் தவிர்க்கப்படும் என நம்பப்படுகின்றது.

வைட்டமின் சி :

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வைட்டமின் சீ அவசியம். ஏனென்றால் வைட்டமின் சீ கொலாஜென் எனப்படும் உடலை கட்டமைப்பதற்கான ஒரு புரதத்தை உருவாக்க பயன்படுகின்றது. இந்த கொலாஜென் எலும்பு, தோல், தசை நாண்கள் (டென்டன்ஸ்), குருத்தெலும்புகள் (கார்டிலேஜ்) உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. வைட்டமின் சீ மேலும், பழுதடைந்த திசுக்களை சரி செய்தல், காயங்களை ஆற்றுதல், எலும்புகளின் வளர்ச்சி, மற்றும் தோலின் ஆரோக்கியம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மெக்னீசியம் :

உடலில் கடுமையான மெக்னீசியம் பற்றாக்குறை முன்சூல் வலிப்பு வரும் நிலையை உருவாக்கும். சில நேரங்களில் கருவளர்ச்சி பாதிப்பு, அல்லது கரு இறந்து போவது கூட நடக்கும். சரியான அளவு மெக்னீசியம் உடம்பில் இருந்தால் குழந்தைக்கு தொப்புள் கொடிமூலமாக தேவையான சத்துக்கள் கிடைக்கவும், பிரசவத்தின் போது தாய் மீண்டும் எழவும் உதவும். உணவு மூலமாக மெக்னீசியம் கிடைப்பது மிகவும் சிரமம். எனவே மருத்துவரை அணுகி மெக்னீசியம் நிறைந்த கூடுதல் துணை உணவிணை உண்ணுதல் நலம்.

ஒமேகா 3 :

மீன் எண்ணையில் இருக்கும் ஒமேகா 3, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. குழந்தை முன் கூட்டியே பிறப்பதில் இருந்து இது காப்பாற்றுகின்றது. மேலும் அன்னையின் இருதய ஆரோக்கியம் மற்றும் உளவியல் சார்ந்த ஆரோக்கியம் ஆகியவற்றை காப்பாற்றுகின்றது.

ஐயோடின் :

தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்க ஐயோடின் உடலில் தேவைப்படுகின்றது. தைராய்டு ஹார்மோன்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த வாழ்க்கை முழுவதும் அவசியமாகும். மகப்பேறு காலத்தில் ஐயோடின் குறைபாடு, கருவின் நலனை மோசமாக பாதிக்கும். கடுமையான ஐயோடின் குறைபாடு குழந்தையின் உடல் மற்றும் மன நலனை பாதிக்கும். இதனை “க்ரீட்டநிசம்” என கூறுவார்கள். எனவே மகப்பேறு காலத்தில் ஐயோடின் சத்து உடலில் குறையாது இருத்தல் குழந்தை நல்ல முறையில் பிறக்க உதவும். ஐயோடின் சரியான அளவில் கொடுப்பது சமூக நலனுக்கும் அவசியம்

கால்சியம்:

குழந்தையின் உடல் கூடு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம். எலும்பு, தாதுக்கள், கருவின் வளர்ச்சி, இவற்றின் மீது கால்சியத்தின் விளைவுகளை காட்டிலும், ரத்த அழுத்தம் அதிகமாவதை கால்சியம் நிறைந்த துணை உணவுகள் 30% தவிர்க்கும்.

வைட்டமின் மற்றும் தாதுக்கள் அளவுகள்:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்

வைட்டமின் ஏ 770 மி.கிராம்

வைட்டமின் டி 5 மி.கிராம்

வைட்டமின் ஈ 15 மி.கிராம்

வைட்டமின் கே 90 மி.கிராம்

நீரில் கரையும் வைட்டமின்கள்

வைட்டமின் சீ  85 மி.கிராம்

வைட்டமின் பீ6 1.9 மி.கிராம்

வைட்டமின் பீ12 2.6 மி.கிராம்

போலேட் 600 மி.கிராம்

தாதுக்கள்

கால்சியம்            1000 மில்லிகிராம்

இரும்பு                   27 மில்லிகிராம்

துத்தநாகம்          11 மில்லிகிராம்

இவை கர்ப்பமாக உள்ள பெண்களை மையமாக கொண்டவை

  • 25 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள்
  • பீஎம்ஐ : 18.5 – 24.9 (உடல் எடை அதிகரிப்பு  5 – 17.5 கிலோ)

(நிபுணர் ஒப்சலட்கைநேகாலின் கருத்து, 2010)

குறிப்பு :

இரும்பு மற்றும் கால்சியம் ஒன்றாக உடலால் ஏற்கப்படாது. எனவே பல மருத்துவர்கள், கால்சியம் பரிந்துரைப்பதில்லை. ஆனால் நீங்கள் இரண்டு சப்ளிமென்ட்களையும் எடுத்து வந்தால், இரண்டையும் வெவ்வேறு நேரங்களில் எடுக்கவும். அப்போது இரண்டும் ஒன்றோடு ஒன்று இடையூறாக இராது.

எதை தவிர்க்க வேண்டும்?

வைட்டமின் ஏ அதிக அளவுகளில் இருப்பது தவிர்க்கபட வேண்டும். அது ஈரல், இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றில் காணப்படும்.  தானியங்களிலும் வைட்டமின் ஏ உள்ளது. எனவே உணவில் இருந்தே அதிக அளவில் உங்களுக்கு வைட்டமின் ஏ கிடைக்கும். எனவே அதற்காக ஒரு சப்ளிமென்ட் எடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்.

வைட்டமின் ஏ போன்றே வைட்டமின் ஈயும் அதிக அளவில் உட்கொள்ளுதல் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் வைட்டமின் ஈ சப்ளிமென்ட்டாக உண்ட  70% பெண்கள் இருதய குறைபாடுகளுடன் குழந்தைகளை பெற்றதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

வைட்டமின்கேஅதிகமாகஉட்கொண்டால், மஞ்சள்காமாலையுடன்குழந்தைபிறக்கவாய்ப்புள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவானது வாழ்வை மாற்றி அமைக்கும் முடிவாகும். எனவே ஒரு தாயாக குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உண்ணுவது உங்களது கடமையாகும். ஆரோக்கியமாக மகப்பேறு காலத்தை கடக்க ப்ரீநேட்டல் சப்ளிமென்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவத்துறை தெரிவிக்கின்றது.  எனவே எந்த ஒரு ஊட்டச்சத்தையும் உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை ஒரு முறை ஆலோசிப்பது நலமாகும்.