குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் -   தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும்:

குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் -   தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும்:

 

குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் – தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும்:

பிறக்கும் போது குழந்தை தூய குடலுடன் பிறக்கிறது. பிறந்த சில நொடிகளில் தரப்படும் தாய்ப்பால் மூலமாகவோ, ஃபார்முலா உணவு மூலமாகவோ அல்லது பின்னர் அளிக்கப்படும் உணவுகள் மூலமாகவோ அவர்களது குடலில் நுண்ணுயிரிகள் உருவாகின்றன.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இது போன்ற நுண்ணுயிரிகள்அவசியம். குறிப்பாக நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அதாவது ப்ரோபையாட்டிக்ஸ் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பல்வேறு விதங்களில் உதவுகின்றன.

ப்ரோபையாட்டிக்ஸ் என்றால் என்ன? அவற்றினால் என்ன பயன்?

ப்ரோபையாட்டிக்ஸ் என்பவை குடலில் வாழும் நன்மை தரும் நுண்ணுயிரிகள் ஆகும். குடலில் கேடுவிளைவிக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி, சமநிலையை ஏற்படுத்தும். இந்த நுண்ணுயிரிகள் உணவை செரிமானம் செய்து, எதிர்ப்புசக்தியை அதிகரித்து, வைட்டமின் B மற்றும் Kவை உள்வாங்கி, குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஆரோக்கியமான குழந்தைகள் ப்ரோபையாட்டிக்ஸ் எடுத்துக்கொள்வதில் எவ்வித

தீங்கும் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், குறைப்பிரசவத்தில் பிறந்தகுழந்தைகள், எடை குறைவாக பிறந்த குழந்தைகள் மற்றும் HIVஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மத்தியில் இந்த ப்ரோபையாட்டிக்ஸ் நல்ல சகிப்புத் தன்மை காணப்படுகிறது.  ஆனால் தீவிரமான உடல் நலக்குறைவு கொண்ட, எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம், ப்ரோபையாட்டிக்ஸ் பயன்பாட்டால் இரத்தத்தில் கிருமியினால் அதீத பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிசுக்களுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் தரும் நன்மைகள்

தற்போதுள்ள மருத்துவ ஆய்வுகளின்படி, சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ப்ரோபையாட்டிக்ஸ் மூலம் கிடைக்கும் நான்கு நன்மைகள் கீழ்வருமாறு:

செரிமான அமைப்பு

ஜாமா பீடியாட்ரிக்ஸ்-இல் ஜனவரி 13/2014-இல் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, குழந்தைகளுக்கு குடலில் ஏற்படும் தொந்தரவுகளும், பிறவாயுக் கோளாறுகளையும் தடுக்க ப்ரோபையாட்டிக்ஸ் உதவும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ப்ரோபையாட்டிக்ஸ் ஒரு தீர்வாக அறிவிக்கப்பட மேலும் சில ஆய்வுகள் தேவை.

ஒரு ஆஸ்திரேலிய ஆய்வின்படி, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் குடலை தாக்கும் கொடிய நோயான necrotizing enterocolitis உருவாவதை குறைக்கும் திறன் ப்ரோபையாட்டிக்ஸ் – க்கு உள்ளது என கண்டுபிடிக்கபட்டுள்ளது. பீடியாட்ரிக்ஸ் (Pediatrics) என்னும் பத்திக்கையின் படி வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்யவும், குழந்தைகளுக்கு தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும், லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) பாதுகாப்பான முறையில் உதவும் என்று கூறப்படுகிறது.

2007-ஆம் வருடம் நடத்தப்பட்ட பத்து கட்டுப்பாட்டு சோதனைகளின் மதிப்பாய்வின்படி, Lactobacillus rhamnosus   GG மற்றும் Saccharomyces boulardi என்ற கிருமிகள், மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதே சமயம் ப்ரோபையாட்டிக்ஸ் பயன்பாட்டின் மூலம் குழந்தைகள் மருந்துகள் உட்கொள்வதால் ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று வெப் MD இதழ் கூறுகிறது.

நோய் எதிர்ப்பு அமைப்பு

ஒவ்வாமை மற்றும் சளி பிடிப்பதால் ஏற்படும் கடுமையான சுவாச பிரச்சனைகளை குறைக்க லாக்டோபேசில்லஸ் மற்றும் பைபிடோபாக்டீரியம் கிருமிகள் உதவும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ப்ரோபையாட்டிக்ஸ் மூலம் எதிர்ப்பு சக்தியை எந்த அளவிற்கு அதிகரிக்க முடியும் என்பது குறித்து சரியான புரிதல் இதுவரை இல்லை. மேலும் ப்ரோபையாட்டிக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று சொல்வதற்கு சரியான ஆதாரம் இன்னும் இல்லை.

தோல்:

அரிக்கும் தோலழற்சி நோய் பொதுவாக குழந்தைகளை அதிகம் தாக்கும். ஆனால் இந்த நோய் வராமல் தடுக்க ப்ரோபையாட்டிக்ஸ் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், பால் ஒவ்வாமையால் ஏற்படும் தோலழற்சியை தடுக்கவும் பயன்படுகிறது.

மூளை:

குழந்தையின் மைக்ரோபயோம் மூளைவளர்ச்சிக்கு நேரடியாக உதவுகிறது. நீண்டகாலம் வரை அவர்களது மூளையின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் உறுதிப்படுத்துகிறது. 75 குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்கள் பிறந்த முதல் ஆறுவாரங்களில்,  ஒரு சிலருக்கு மருந்து போலிகளும், சிலருக்கு ப்ரோபையாட்டிக்ஸ் அளித்ததின் மூலம், ப்ரோபையாட்டிக்ஸ் எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு 14 வயதில் ADHD அல்லது ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் இருந்தது தெரியவந்தது.

ப்ரோபயாடிக்ஸின் ஸ்ட்ரெயின்கள் மற்றும் அவற்றின் பயன்கள் :

 • லாக்டோபேசிலஸ்
 • ஸ்ட்ரேப்டோகோக்கஸ்
 • பைபிடோ பாக்டீரியம்
 • சாக்கரோமைசீஸ் பௌளார்டி

இவை ஒவ்வொன்றும் உடலின் மீது வெவ்வேறு தாக்கம் கொண்டுள்ளன. சிசுக்களுக்கு பயன் தரும் முதல் மூன்று பின்வருமாறு.

பைபிடோபாக்டீரியம் (பீ.பைபிடம்):

குழந்தைகளின் குடலில் முதலில் தங்கும் சில பாக்டீரியாக்களில் இதுவும் ஒன்று. குழந்தை தோலில் ஏற்படும் எக்சீமா, ஈஸ்ட் தாக்குதல், நெக்ரோடைசிங் என்டிரோகொலிடிஸ் (NEC), மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மற்றும் நுறையீரல் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

பைபிடோ பாக்டீரியம் (பீ.இன்பான்டிஸ்):

குழந்தைகளின் குடலில் அதிகளவில் காணப்படும் ஒருவகை கிருமி இது. ஆனால் வயது அதிகமாக இதன் எண்ணிக்கை குறையும். இந்த கிருமிக்கு ஒரு நோய் தடுப்பான் போன்ற செயல்பாடு மற்றும் நோயினால் உண்டாகும் எதிர்வினையை குறைக்கும் திறன் இருக்கும்

இருக்கும் என அறியப்பட்டுள்ளது

லாக்டோபேசிலஸ் ஸ்ரீயூட்டேரி (எல். ரீயூட்டேரி) :

குழந்தைகள் மற்றும் சிசுக்களுக்கு அதிக பயன் தரும் ஒன்றாக இது உள்ளது. வயிற்றுப்போக்கு, சுவாசகோளாறு, வயிற்றுவலி போன்றவற்றில் இருந்து விடுதலை அளிக்கின்றது.

குழந்தைகளுக்கு ஏற்ற ப்ரோபையாடிக்ஸ் என்பது ஒரு வகை மட்டும்இல்லாது, 2 அல்லது 3 வகைகள் உள்ளடிக்கிய ஒன்றாக இருப்பதே என ஒரு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகின்றது. ஆனால்அதற்கும்அதிகமாகசேர்ப்பதும்கூடாதுஎனகூறியுள்ளனர்.

தாய்ப்பாலும் ப்ரோபையாடிக்சும்:

குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்தது. அதனை உங்கள் குழந்தைக்கு நீங்கள் புகட்டினால், அதன் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர நீங்கள் உதவுகிறீர்கள். காரணம் தாய்ப்பாலில் ஆரோக்கியமான மைக்ரோபையோட்டாவை வளர்க்கும் ப்ரீபையோடிக்ஸ் உள்ளன. மேலும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்தி, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தகர்க்கவும் உதவுகிறது.

நீங்கள் தாய்ப்பால் புகட்டி வந்தால், சுவையூட்டப்பட்ட தயிர், கேபிர், மிசோ, கிமிச்சி, நாடோ, டேம்பே போன்ற ப்ரோபையாடிக்குகள் நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். பாக்டீரியல் சமநிலையை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கு எவ்வாறு ப்ரோபையாடிக்ஸ் கொடுப்பது?

சொட்டு மருந்தாக, தூளாக, கடித்து முழுங்கும் மாத்திரையாக ப்ரோபையாடிக்குகள் குழந்தைகளுக்கு கிடைகின்றன. மூன்று மாதங்களுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ப்ரோபையாடிக்குகள் கொடுப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். நுண்ணியிர் கொல்லிகள் கொடுக்கும் போது ப்ரோபையாட்டிக்ஸ் கொடுப்பதால் வாய்ப்புண் வருவதை தடுக்க இயலும்.

சந்தையில் இந்த பாக்டீரியல் வகைகளின் ஸ்ட்ரெயின்கள் அதிகம் உள்ளன. ஆனால் எந்த வகையான நோய்களை எந்த வகை ஸ்ட்ரெயின் குணப்படுத்தும் என்ற தகவல் இல்லை.

ப்ரோபையாடிக்ஸ் மூலம் ஒவ்வாமை குறைதல், எக்சீமாவில் இருந்து விடுதலை போன்ற பயன்கள் இருந்தாலும், மருத்துவரை கேட்காமல் குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதுகூடாது.

Reflux and GERD in babies

இரையக உண் குழலியப் பின்னோட்ட நோய் (GERD)

குழந்தைகள் உணவு சாப்பிட்டதும், அந்த உணவு அடிக்கடி வாய் வழியாக எச்சிலுடன் வெளியேறுகிறது. அல்லது துப்பிக்கொண்டே இருக்கிறது. இது சாதாரணமானது தான். இதனால் அதிக பிரச்சினைகள் இல்லை. குழந்தைகள் அதிகபாலை, அதிகவேகத்துடன் சாப்பிடும் போது இவ்வாறு வெளியேறுகிறது. என்றாலும் தொடர்ந்து வாந்தி எடுத்தால் பல்வேறு அசௌகரியம், சிரமங்கள் உண்டாகி குழந்தைகளுக்கு எடை இழப்பு ஏற்படுகிறது. மேலும் குழந்தையின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுவதுண்டு. இது இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (GERD) என்று அழைக்கப்படுகிறது.

பின்னோட்ட நோய் (reflux) என்றால் என்ன?

இரப்பையிலிருக்கும் உணவுச் சாறுகளும், அமிலங்களும் உணவுக் குழாய் வழியாக வாய் அல்லது தொண்டைக்கு வருவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி குறிப்பிடுவதே GERD எனப்படும் இரையக உண் குழலியப்பின்னோட்டம் ஆகும். இந்த GERD உங்கள் குழந்தை சிரமின்றி விழுங்குவதையும், உணவு வெளியே தள்ளப்படுவதையும் பொறுத்து வகைபடுத்தப்படுகிறது. பொதுவாக குழந்தை திட வகை உணவுகளை எடுத்துக்கொள்ளும் போதும், பல் முளைக்கும் நிலையிலும், தவழ ஆரம்பிக்கும் போதும் இந்த நோயின் பிரச்சினை வெளிப்படுகிறது. இது ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் ஏற்படலாம். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் வரை கவலைப்படத் தேவையில்லை.

GERD என்பது என்ன?

இரப்பையில் இருந்து பின்னோட்ட நோய் என்பது உணவு ஒவ்வாமை, மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லது குடல் அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். பின்னோட்ட பிரச்சினைகளால் குழந்தையின் இயல்பான வளர்ச்சி பாதிப்படைவதுடன், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறலும் ஏற்படலாம். நாள்பட்ட இருமல், சுவாசப்பிரச்சினை, 6 மாதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவை வெளியே துப்புதல், உணவுக்குப் பிறகு எரிச்சல் மற்றும் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கு இடையே இந்நோய் தொடர்பாக பொதுவான மருத்துவ அணுகுமுறைகளே உள்ளன.

பொதுவான அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் இரையக உண் குழலியப்பின்னோட்ட நோய்க்கான பொதுவான அறிகுறிகள்;

 • அடிக்கடி அல்லது தொடர்ந்து வாந்தியெடுத்தல்
 • உணவை ஏற்பதில் பிரச்சினை, விழுங்குவதில் பிரச்சினை
 • உண்ணும்போது அதிக அழுகை அல்லது அசௌகரியம்
 • மீளுருவாக்கம் மற்றும் மீண்டும் விழுங்குதல்
 • வயிற்றுவலி அல்லது தொடர் சிடுசிடுப்பு தன்மை
 • மூச்சுத்திணறல்
 • குறைவான எடை அல்லது எடை இழப்பு
 • அடிக்கடி காது நோய்த்தொற்றுகள்
 • அதிக அளவில் அடிக்கடி வாந்தியெடுத்தல்

பின்னோட்டநோய் (reflux) அறிகுறிகள்

சோம்பல்தன்மை

 • ஜுரம்
 • தொடர்ந்து அழுகை,
 • இரத்தம் கலந்த அல்லது பிசுபிசுப்பான பச்சை நிறத்தில் வாந்தி
 • பழைய உணவை வாந்தி எடுத்தல்,
 • அடிவயிறு வீக்கம்
 • மந்தநிலை மற்றும் உற்சாக குறைவு
 • பீரிட்டு அடிக்கும் வாந்தி
 • மலத்தில் இரத்தம், தொடர்ந்து வயிற்றுப்போக்கு

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் குழந்தைக்கு உடனடியாக பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது என்று அர்த்தமாகும். உடனடியாக சுகாதார ஆய்வாளர்களையோ,  மருத்துவர்களையோ பார்க்கவேண்டும்.

பொதுவாக குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகளையும், மருத்துவம் அளிக்கப்பட்ட விவரங்களை பரிசீலிப்பதன் மூலம் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்படுகிறது. வளர்ச்சி விளக்கப்படம் மற்றும் கொடுக்கப்பட்ட உணவுகள் குறித்த விவரப்பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும். எப்போதாவது, சோதனைகளும் பரிந்துரைக்கப்படுகிறது.

 • பேரியம் முழுங்கச் செய்யும் (Barium Swallow) பரிசோதனை: பேரியம் கொடுத்து மேல் குடல் பகுதியை கதிர்வீச்சு முறையில் படம் பிடித்தல் விழுங்குவதிலுள்ள தொண்டை பிரச்சினைகள் குறித்து தெரியவரும். இந்த முறையில் எக்ஸ்கதிர்கள் வயிறு மற்றும் குடலில் உள்ள தடைகள், குறுகல்கள் அல்லது விழுங்குவதை பாதிக்கும் எந்த உடற்காப்பு சிக்கல்களும் உள்ளனவா என்பதைக் காண்பிக்கும்.
 • PH Probe: குழந்தைகளிடம் பின்னோட்ட நோய் குறித்து எஸாபேஜியல் பிஎச் முறையில் பரிசோதனைகள் செய்யப்படும். இந்த முறையில் குழந்தையின் உணவுக்குழாயில் உள்ள அமிலம் மற்றும் உணவுச்சாற்றின் அளவு குறித்து மருத்துவர்கள் பரிசோதிப்பர்.
 • மேல் இரைப்பை குடல் (G.I.) எண்டோஸ்கோபி: ஒரு கேமிராவின் உதவியுடன், குறுகிய மற்றும் நெகிழ்வான குழாயை தொண்டை வழியாக செலுத்தி உணவுக்குழாய், வயிறு, மற்றும் சிறுகுடலில் உள்ள பிரச்சினைகள் அறியும் முறையாகும்.

காரணங்கள்:

பெரும்பாலான குழந்தைகளுக்கு, உணவுக்குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள வால்வு வளர்ச்சியடையாத நிலையில் உள்ளதாலும், சில குழந்தைகளுக்கு பலகீனமாக உள்ளதாலும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. உங்கள் குழந்தையின் வயிறு நிறைந்து விட்டால் தானாகவே பால் மீண்டும் வெளியே வந்துவிடும்.

ஒரு வயதிற்குள் பெரும்பாலான குழந்தைகள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள். 5 சதவிகித குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை நீடிக்க வாய்ப்புள்ளது. 18 மாதங்களுக்குப் பிறகு உணவுக்குழாய்க்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள வால்வு வளர்ச்சியடைந்து, உணவு வயிற்றில் முறையாக தங்கும் நிலையில் இந்த பிரச்சினைகள் குறையத் தொடங்கும்.

சிகிச்சை:

உங்கள் குழந்தைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெற்று, நல்ல எடையுடன் இருக்கும்போது பொதுவாக இந்த பிரச்சினைகளுக்கு மருத்துவ உதவி எதுவும் தேவையில்லை. கீழ்கண்ட சிகிச்சைகளும், அறிவுரைகளும் உங்கள் குழந்தைகளுக்கு பின்னோட்ட நோய் ஏற்பட்டிருந்தால் குணப்படுத்தலாம்.

 • தாய்ப்பால் ஊட்டும்போது, உட்கார்ந்த நிலையில் குழந்தையை வைக்க முயற்சிக்கவும்.
 • உங்கள் குழந்தைக்கு சிறிது, சிறிதாக அதிகமான உணவை சாப்பிடக் கொடுங்கள்.
 • அடிக்கடி ஏப்பம்விடச் செய்தல்
 • குழந்தைகளுக்கு பாட்டில் உணவை திடப்படுத்த தானிய உணவை பயன்படுத்த மருத்துவரை நாடுதல்.
 • திடஉணவு வழங்க முயற்சித்தல் (உங்கள் மருத்துவர் அனுமதியுடன்)
 • பால்கொடுத்த அடுத்த 30 நிமிடங்களுக்கு பிறகு, குழந்தையை தரையில் படுக்கவிடாமல் நிமிர்ந்த நிலையில் வைத்திருத்தல்.

உங்கள் குழந்தை மாட்டுப்பால் சாப்பிடுவதால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுவதாக டாக்டர் கூறினால், அதை கைவிட்டு அவர் சிபாரிசு செய்யும் ஒவ்வாமை குறைவாக உள்ள உணவுகளை பயன்படுத்த தொடங்கலாம்.

சில சமயங்களில் உங்கள் குழந்தைக்கு ரெப்லக்ஸ் பிரச்சினை கடுமையாக இருக்கும்போது, டாக்டர்கள் உங்கள் குழந்தையின் வயிற்றில் அமில அளவைக் குறைப்பதற்காக, அமில தன்மை குறைக்கும் மருந்துகள், ஹிஸ்டமைன் – 2 (H2) பிளாக்கர்கள் மற்றும் புரோட்டான்பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் ஆகிய பொதுவான மருந்துகளை சிபாரிசு செய்வர். இவை குடல் வாயுவைக் குறைக்கவும் அல்லது வயிற்று அமிலத்தை   சீர்படுத்தவும் பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு உதவுகின்றன.

துரதிஷ்ட்டவசமாக உங்கள் குழந்தைகளுக்கு நீண்ட காலத்திற்கு மருந்தியல் சிகிச்சை அளிக்கும் போது அமில தன்மை குறைக்கும் மருந்துகளால் பி12 வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் எலும்புகள் வலு குறைந்து ரிக்கெட்ஸ் உண்டாகலாம். சில சமயங்களில் மிகக் குறைந்த அளவிலான குழந்தைகளுக்கு GERD சிகிச்சைக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். பண்டோப்ளிகேஷன் (Fundoplication) பெரும்பாலும் நிகழ்த்தப்படும் அறுவை சிகிச்சை ஆகும். இது மூளை வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் மேல் குடல் அடைப்பு உள்ள குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது.

என் குழந்தையை ரிப்லக்ஸிலிருந்து மீட்க நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் குழந்தையின் வாழ்வியல் முறைப்பற்றி மருத்துவர் சொன்னதை கடைபிடிக்க வேண்டிய வளர்ச்சி குறித்து உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் அடிக்கடி தெரியப்படுத்த வேண்டும். குழந்தை சாப்பிட்ட பிறகு, கடினமாக, வேகமாக நடந்து கொள்ளாமல் குழந்தைகளை இலகுவாக கையாள வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது கண்காணித்து மருந்துகளை தேவைப்பட்டால் மாற்றி சரி செய்யவேண்டும்.

தீர்வு: 

ரிப்லக்ஸ் மற்றும் GERD பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு உதவ அதிக அளவிலான தகவல்கள் மற்றும் ஆதரவு கிடைத்து வருகின்றன. ரிப்லக்ஸ் பிரச்சினை எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான ஒன்றுதான். ரிப்லக்சுடன் உள்ள பல குழந்தைகள் சாப்பிட்ட உணவை வாய் வழியே துப்பிக்கொண்டிருந்தாலும், ஆரோக்யமாகவே உள்ளன. உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் பற்றி உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், ஆலோசனையைப்பெறவும். சிகிச்சைகள் தாரளமாக கிடைக்கிறது.