மித மிஞ்சிய பால் வெளியேற்ற அறிகுறிகளும், சமாளிக்கும் வழிகளும்

மித மிஞ்சிய பால் வெளியேற்ற அறிகுறிகளும், சமாளிக்கும் வழிகளும்

 

பால் குடித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் குழந்தைகளின் நடவடிக்கைகள் தாய்க்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. பாலை விழுங்கும் போது திடீர் இருமல், பொறை ஏற்றம், அடைப்பு ஏற்பட்டு பால் வெளியே தள்ளப்படுவதை காணலாம். அப்போது குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு முகத்தை திடீரென வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறது. சில சமயங்களில் தாயின் மார்புக்காம்புகளை முரட்டுத் தனமாக கவ்வவும், கடிக்கவும் செய்கிறது. திடீரென அழுது கொண்டே பால் குடிப்பதை நிறுத்திக் கொள்கிறது. சிறிது நேரத்திலேயே ஏப்பம் வருகிறது. குடித்த பால் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் உங்கள் மார்பகங்களிலிருந்தும் தானாகவே பால் அதிக அளவில் வெளியே கசிந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இது தான் மிதமிஞ்சிய தாய்பால் வெளியேற்ற அறிகுறிகளாகும்.

மிதமிஞ்சிய பால் வெளியேற்றம் என்றால் என்ன?

தாயின் மார்புப்பகுதிக்கு கீழே உருவாகும்பால், காம்புகளை அடைந்து அதன் வழியாக குழந்தையின் வாய்க்குச் செல்கிறது. செல் சுவர்களுக்குள் இருக்கும் தசை திசுக்கள் பாலை உற்பத்தி செய்து, அவற்றை சேமித்தும் வைக்கிறது. மேலும் தனது சுருங்கி, விரியும் தன்மையால் உற்பத்தி செய்த பாலை நுண்ணிய குழாய்களின் வழியே காம்புகளுக்கு அனுப்பி குழந்தைகளுக்கு கிடைக்கச் செய்கிறது. குழந்தைகளின் உறிஞ்சும் சக்தியால் ஏற்படும் எதிர்வினை மற்றும் மார்பக காம்புகளில் ஏற்படும் தூண்டுதலால் ஓரிரு நிமிடங்கள் இந்த பாலூட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.

மித மிஞ்சிய பால் வெளியேற்றம் என்பது ஒரே நேரத்தில் பால்வெகு வேகமாக வெளியேறுவதாகும். இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியதென்னவென்றால் மிதமிஞ்சிய பால் வெளியேற்றம் என்பது, அதிக அளவிலான பால் சப்ளையிலிருந்து வேறுபட்டதாகும். அதாவது பால் மார்பிலிருந்து வேகமாக, சக்தியுடன் வெளியேறுகிறது. ஆனால் அளவில் அதிகமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும், சில சமயங்களில் மிதமிஞ்சிய பால் வெளியேற்றம், அதிகபால் உற்பத்தியினாலும் ஏற்படுகிறது.

மிதமிஞ்சிய பால் வெளியேற்றத்துக்கான காரணங்கள்:

பால் மிதமிஞ்சி வெளியேறுவதற்கான சரியான காரணங்கள் இதுவரைத் தெரியவில்லை.  கூடுதல் பால் உற்பத்தி அல்லது அதிக அளவிலான பால் சப்ளை காரணமாக இருக்கலாம் என்றும் அல்லது பாலை வெளியேற்றும் ஹார்மோனான ஆக்ஸிடோசினுக்கு ஏற்படும் ஒரு அசாதாரணமான எதிர்வினையும் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

உங்கள் குழந்தை காம்புகளில் வாய் வைத்ததுமே, காம்பின் முனையில் (முலை) ஒரு வித தூண்டுதல் ஏற்பட்டு, தாயின் மூளைக்கு சமிக்ஞை அனுப்பப்படுகிறது. மூளை உடனடியாக புரோலாக்டின், ஆக்சிட்டோசின் எனப்படும் மார்பகங்களிலுள்ள இரண்டு பால் சுரப்பிகளின் மூலம் பாலை வெளியேற்றி காம்புகள் வழியே குழந்தைக்கு கிடைக்கச் செய்கிறது. இதில் நுண்ணிய குழாய்கள் மூலம் பாலை வெளியேற்றி குழந்தைகளுக்கு கிடைக்க செய்வதில் ஆக்ஸிடோசின் முக்கிய காரணமாக விளங்குகிறது.

இப்பிரச்சினைக்கான தீர்வுகள்:

உங்கள் குழந்தைகளின் தேவைக்கு, போதுமான ஒத்துழைப்பு தர உங்கள் உடல் நேரம் எடுத்துக்கொள்கிறது என்பது முக்கியமான விஷயமாகும். எனவே சில நாட்கள் கழித்து உடல்நிலை சரியாகி. மீண்டும் குழந்தை வழக்கம்போல் பால் எடுத்துக்கொள்ளும்.   இந்த இடைப்பட்ட நேரத்தில் பிரச்சினையை கையாள சிலவற்றை செய்யலாம்:

  • குழந்தை கவ்வும் விதத்தை சரிபார்க்கவும்
  • இதை சரி பார்ப்பதுமூலம் பால் விழுங்குவதை கட்டுப்படுத்தலாம்.
  • பல்வேறு நிலைகளிருந்து பால் ஊட்டுதல்

நிமிர்ந்த நிலையில்:

இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தையின் தலை மற்றும் தொண்டைப் பகுதி மார்பக காம்புக்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற மாறுபட்ட நிலைகளில் பால் அளிப்பதன் மூலம் பிரச்சினையை சமாளிக்கலாம்.

சாய்ந்த நிலையில்:   மார்பின் மீது குழந்தையை வைத்து உங்கள் முகத்தை பார்க்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். சாய்வு நாற்காலி அல்லது பின்பக்கம் தலையணையை வைத்து பாதி சாய்ந்த நிலையில் அமர்ந்து பால் அளிக்கலாம். இந்த முறையில் உங்கள் குழந்தை சீரான முறையில் பால் விழுங்கலாம்.

பின்பக்க நிலையில்: இந்நிலையில் குழந்தையின் வயிறு உங்கள் வயிற்றின் மேல் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த நிலையில் ஈர்ப்பு விசைக்கு எதிரான முறையில் பால் குழந்தையின் வாய்க்குள் செல்லும்போது மெதுவாக செல்கிறது

பக்கவாட்டு நிலையில்: இந்த நிலையில் உங்கள் பக்கத்தில் குழந்தையைகிடத்தி, உங்கள் மார்பகத்தை நோக்கி குழந்தையின் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பிறகு தனது கையால் குழந்தையின் கழுத்து, தோள்பட்டைகளை பற்றியவாறு பால் ஊட்டலாம். இந்த முறையில் பால் ஊட்டும் போது குழந்தையின் வாய்க்குள் பால் வேகமாகவும், அதிகமாகவும் சென்றாலும், மீதி பால் கீழ் நோக்கி வெளி வந்துவிடும். இந்த முறையில், தாயின் மார்பிலிருந்தும், குழந்தையின் வாயிலிருந்தும் தானாகவே மீதி பால் வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் ஊட்டுவதை நிறுத்தலாம்:

அதிக பால் பீறிடும் போது, அதை குழந்தை விழுங்காத வகையில் மார்பகங்களிலிருந்து குழந்தையின் வாயை எடுத்து விடுவது மிகவும் சிறந்ததாகும். மீண்டும் குறைந்த வேகத்தில் வெளியேறும் போது பால் ஊட்டத் தொடங்கலாம்.  குழந்தைக்கு அடைப்பு மற்றும் பொறை ஏறும்போது இவ்வாறு நிறுத்தி, நிலைமை சரியாகும் போது மீண்டும் பால் கொடுக்கலாம்.

காற்று வெளியேற்றம்:

குழந்தை வேகமாக பாலை விழுங்கும்போது, பாலுடன் அதிக அளவில் காற்றும் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. பால் கொடுத்தப்பிறகு, ஒவ்வொரு முறையும் குழந்தையின் வயிற்றை இலேசாக அழுத்தி காற்றை வாய் வழியே அகற்றிவிடுவது நல்லது. இதனால் பால் அடைப்பு, துப்புதல், குடிக்கும் போது ஏற்படும் கடினநிலை குறைகிறது. மேலும் ஜீரணசக்தியும் அதிகரிக்கிறது.

  • அடிக்கடி பாலூட்டவும் : அடிக்கடி பாலூட்டுவதன் மூலம் உங்கள் மார்பகங்களில் பால் குவிவதை தடுக்கலாம். இதனால் பால் வெளிவரும் வேகம் குறைந்து, ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு சீராகக் கிடைக்கிறது. இதனால் அடிக்கடி பாலூட்டுவது அவசியம்.

மருத்துவர்களின் உதவி:

மிதமிஞ்சிய பால் வெளியேற்றப் பிரச்சினையை சமாளிக்க மேலே பலவழிகள் கூறப்பட்டாலும், இதில் எந்த வழியைக் கடைபிடிப்பது என்பது குறித்து நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நல்லது.

இந்த சிரமமான அனுபவத்தால், தாய், குழந்தை இருவருக்குமே கவலை ஏற்படுகிறது. இதை அப்படியே விட்டுவிடாமல் சரிவர கவனிக்க வேண்டும். பாலூட்டும் இனிய அனுபவத்தை தொடர வேண்டும். இதற்கான ஆற்றல் உங்களிடம் உள்ளது.