தாய் பால் நிறுத்தம்: எப்போது, எப்படி நிறுத்துவது?

தாய் பால் நிறுத்தம்: எப்போது, எப்படி நிறுத்துவது?

 

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

குழந்தை தாய் பாலிலிருந்து திட உணவுக்கோ அல்லது பாதி திடமான உணவுக்கோ அல்லது வேறு வகையான உணவுக்கோ  மாறும் போது, பொதுவாக தாய்பால் நிறுத்த காலம் தொடங்குகிறது. தாய்பால் மற்றும் பார்முலா பாலில் கிடைக்கும்  சத்துக்கள் மற்றும் ருசி ஆகியவற்றை மேலும் நீடிக்கும் பொருட்டு முதல் தடவையாக திட உணவு வழங்கப்படுகிறது. குழந்தை வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு தேவைப்படும் சத்துக்களின் அளவு கூடுவதால் தாய் பாலால் அதை ஈடு செய்ய முடியாது. எனவே உடலியல் ரீதியாகவும், மூளை வளர்ச்சிக்காகவும்  குழந்தையின் உடலுக்கு வேறு பல சத்துக்கள் அடங்கிய உணவு தேவைப்படுகிறது.

பால் மறத்தல் என்பது ஒரு படி படிப்படியாக நடைபெறும் சம்பவமாகும், இந்த விஷயத்தில் ஒரு தாயிடமிருந்து பொறுமை மற்றும் புரிதல் அவசியம். ஒரு குழந்தை திடீரென்று ஒரே நாளில் திட உணவை உடனடியாக சாப்பிடும் என்பதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. உங்கள் குழந்தைக்கு தற்போதுள்ள சுவை, வாசனை பிடிக்காமல் போகலாம்  அல்லது புதிய சுவை மற்றும் பழக்கவழக்கத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் அல்லது குழந்தை அதை உடனே பெறலாம். இந்த புதிய அனுபவத்திற்கு ஒரு குழந்தை எப்படி பதிலளிக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது, எனவே இந்த விஷயத்தில் குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கும் அம்மாதான் முடிவு செய்வார்.

தாய்ப்பால் மறப்பது எப்போது?

குழந்தைகள், முதல் ஆறு மாதத்திற்கு தங்களுக்குப் தேவையான உணவைத்  தாய்ப் பால் மூலம் பெறுகின்றன. தாய்பால் ஒரு உணவு மட்டுமில்லை, இது நோய் மற்றும் தொற்றுக்கு எதிராக உங்கள் குழந்தையை பாதுகாக்க உதவுகிறது. இருப்பினும், குழந்தை வளரும் போது, அதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பாலால் மட்டுமே வழங்க முடியாது. என்றாலும் உங்கள் குழந்தை திட உணவுக்குத் தயாராக இருக்கும் வரை, அவர்கள் தங்களுக்குத் தேவையான திட உணவை தாங்களே விழுங்கத் தெரியும் வரை  தாய் பால் அல்லது பார்முலா வகைகளை தொடர்ந்தே ஆக வேண்டியுள்ளது. .

ஒரு குழந்தைக்கு திட உணவை அறிமுகப்படுத்துவதற்கு 6 மாதங்கள் வரை காத்திருங்கள் என்பதன் அர்த்தம் என்னவெனில், திட உணவு வகைகளை  குழந்தைகள் தானாக சாப்பிடுதல் அல்லது விழுங்கத் தெரியும் வரை என்பதாகும். ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறுவதன் காரணம் உணவு ஒவ்வாமை  அபாயத்தை குறைப்பதற்காக ஆகும். மேலும் குழந்தைகளின் உடலில் போதுமான அளவில் நோயெதிர்ப்பு மண்டலம் உருவாகும் வரை போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

குழந்தை  திட உணவுக்கு  தயாராக உள்ளது என்பதை அதன் நடவடிக்கைகள் கூறுகின்றன. ஒரு குழந்தையின்  சில நடவடிக்கைகள் கீழே சொல்லப்பட்டுள்ளன :

 • உங்கள் குழந்தை பின் பக்க ஆதரவு இல்லாமல் தானாகவே நாற்காலியில் அமர முடிகிறது என்றால்,
 • குழந்தையின் தலை மற்றும் கழுத்து சாயாமல் நிலையாக இருக்கிறது என்றால்,
 • குழந்தையால் ஒரு கரண்டியை ( ஸ்பூனால்) எடுத்து, அதன் வாயைத் தானாகவே திறந்து, மூட முடிகிறது என்றால்
 • குழந்தையே தன் கையால் உணவை அள்ளி, வாயில் வைத்துக் கொள்ள முயற்சி செய்தல் என்றால்,
 • குழந்தைக்கு பசி எடுத்தப் பிறகும் தாய்ப்பால் மற்றும் பார்முலா உணவுகளை விரும்பாமல், திட உணவின் மேல் ஆர்வம் செலுத்துகிறது என்றாலோ குழந்தை திட உணவு எடுத்தக் கொள்ள தயாராக இருப்பதாக கருதலாம்.

தாய் பால் மறத்தலுக்கான அணுகுமுறைகள்;

தாய்ப்பால் மறப்பதற்கான அணுகுமுறைகள் இயல்பாகவோ அல்லது தாயிடமிருந்தோ தூண்டப்படலாம். இயல்பான முறை என்பது குழந்தை திட உணவுகளைத்  தானாக சாப்பிடத் தொடங்கிய பிறகும் தாய் பால் அளித்துவருவது தொடர்வதாகும். தூண்டப்படும் முறை என்பது ஒரு தாய் தனது குழந்தைக்கு பிடித்தமான திட உணவு வகைகளை அளித்துக் கொண்டே அதே சமயம்  தாய்ப்பாலையும் தொடர்வதாகும்.

பால் மறப்பதற்கான இந்த இரண்டு அணுகுமுறைகளின் முடிவுகளும் வேறுபட்ட இரண்டு குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்டவை.

 • நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு முன்னர் மற்ற உணவுகள் மற்றும் திரவங்களை எடுத்துக் கொள்ளும் குழந்தைகள், தங்கள் முதல் வருடத்தின் இரண்டாவது பாதியில் தங்கள் ஊட்டச்சத்தின் பெரும்பகுதிக்காக  இதே உணவைச் சார்ந்தும் வருகின்றனர்.
 • தூண்டல் முறையில் ஆறாவது மாதத்திலிருந்து, பன்னிரண்டாம் மாதம்வரை ஆர்வத்துடன் திட உணவுகள் எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் படிப்படியாக இதற்கு முன் வழங்கப்பட்ட தாய் பால் மற்றும் பார்முலா பாலின் மீதான ஆர்வத்தை குறைத்துக் கொள்கின்றன. பெரும்பாலும் அவர்கள் தாய் பாலை மறந்து அவர்களுக்கு பிடித்தமான பொருள்களை நாடத் தொடங்குவர்.

உதவிக் குறிப்பு:

குழந்தைக்கு திட உணவு வழங்குவது சரிதான், சுலபமானதுதான் என நீங்கள் நினைத்தால் தயக்கமின்றி, குழந்தை தாய் பால் சாப்பிடும் நிலையிலும் சில வேளைகளுக்கு வழங்கலாம்.  குழந்தை அடுத்த வளர்ச்சிக் கட்டத்துக்கு செல்லும் வரை தினமும் இதே அணுகு முறையை மேற்கொள்ளலாம்.

பால் மறத்தலுக்கான 3 நாள் விதிகள்  

நாட்கள் அளவு நேரம்
முதல் தினம் 1 மேசைக் கரண்டி மதிய உணவு
இரண்டாம் தினம் 2 மேசைக் கரண்டி மதிய உணவு மற்றும் காலை உணவு
மூன்றாம் தினம் 3 மேசைக் கரண்டி மதிய உணவு மற்றும் காலை உணவு

தாய்ப்பால் மறப்பதற்கான  3 நாள் விதியை நீங்கள் இங்கு பார்த்திருப்பீர்கள். இதன்படி, உணவின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு அம்மா என்ற முறையில் பொறுமையையும் புரிந்துகொள்ளுதலையும் கொண்டுள்ள நீங்கள் அதிக திட உணவை குழந்தைக்கு அவசர அவசரமாக தரத் தேவையில்லை. ஏனென்றால் அவனுக்கு இதுவரை இது என்ன உணவு என்பதே தெரியாது.  

எனவே சிறிய அளவுகளில் தொடங்கி, உங்கள் குழந்தைக்கு பழக்கமாகும் வரை  கொஞ்சம், கொஞ்சமாக அவற்றை அதிகரிக்கவும். முதன் முதலாக கொடுக்கும் போது காலை அல்லது மதிய நேரத்தில் உணவை வழங்கவும். குழந்தைக்கு அளிக்கப்பட குறிப்பிட்ட உணவின் அலர்ஜித் தன்மையை சோதித்துப் பார்க்க பகல் நேரம் வசதியாக இருக்கும்.  எனவே இரவு நேரத்தில் திட உணவை முதன் முதலாக அளிக்கும் முயற்சியை தொடங்கக் கூடாது.

எந்த வகையான திட உணவுகளை அறிமுகப்படுத்தலாம்:

 • மசித்த வாழைப் பழம்
 • காச்சிய ஆப்பிள் சாறு
 • நன்கு வேகவைக்கப்பட்ட கேரட்,  இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி, பிரஞ்சு பீன்ஸ் போன்றவை  
 • நன்கு வேகவைத்த மற்றும் தூய்மையான காய்கறிகள்
 • பல்ஸ் சூப் (மூங் தல் பாணி)
 • அரிசிக்கஞ்சி
 • தாய்பால் மற்றும்பார்முலா பாலில் கலந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட  பார்லி, ஓட்ஸ் மற்றும் ஒற்றை தானியங்கள்.
 • வேகவைத்து மசிக்கப்பட்ட பேரிக்காய், பீச், சிக்கூ பழ வகைகள் மற்றும் வெண்ணெய்  பாதாம் பொருள்கள்
 • வீட்டில் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப்

6 மாத குழந்தைக்கு பால் மறப்பதற்கான வாராந்திர முறைப் படிகள்:

உங்கள் குழந்தைக்கு உணவளிக்க வசதியான முறையில் , இந்த உணவு அட்டவணையை ஒரு வழிகாட்டியாக நீங்கள் பின்பற்றலாம் அல்லது உங்கள் விருப்பப்படி உங்கள் சொந்த உணவு அட்டவணையை செய்யலாம்.

முதல் வாரம் :

இந்த வாரம் 3 நாட்களுக்கான  விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதல் வாரத்தில், நீங்கள் தாய்பால்  அல்லது குழந்தை பார்முலாக்களுக்குப் பிறகு, ஒரு நேரத்தில் ஒரு புதிய உணவை அறிமுகம் செய்ய வேண்டும். இது வரை இல்லாத புதிய உணவுகளை அளிப்பதால் மிகக் குறைந்த அளவோடு ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டாவது வாரம்:

உங்கள் குழந்தைக்காக 2 புதிய அரை-திட உணவுகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. மற்றும் ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதால், இப்போது நீங்கள் இன்னும் கொஞ்சம் புதிய உணவை அறிமுகப்படுத்தலாம். உங்கள் குழந்தைக்கு இப்போது 4 புதிய உணவுகளை நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

உதவிக்குறிப்புகள்:

தூங்கும் நேரம் , உணவு உண்ணும் நேரம் என உங்கள் குழந்தையின் செயல்பாட்டு நேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள், மூன்றாவது மாதத்தின் முடிவில், உங்கள் புதிய குழந்தைகளுக்கு ஆறு புதிய உணவுகளில் வரை புதிய 2 உணவுகள்  அறிமுகப்படுத்தப்படும். இந்த நேரத்தில், இந்த 6 பொருள்களில் உங்கள் குழந்தைக்கு சில உணவுகள் பிடிக்காமல் இருப்பதகான வாய்ப்புகள் உள்ளன.  உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுத்த எல்லாவற்றையும் போலவே கட்டாயப்படுத்தாதீர்கள், அதற்கு பதிலாக, பொறுமையாக இருங்கள் மற்றும் அளிக்கப்பட உணவுகள் அவருடைய பசியை அதிகரிக்கும் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

இப்போது உங்கள் குழந்தைக்கு தாய்பாலை மறக்க வைக்க முயற்சிக்கும்  நான்காவது வாரம் ஆகும், இப்போது அது ஒரு மாதமாக உள்ளது. மொத்தம் 8 புதிய திட உணவுகள் உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் குழந்தை இப்போது திட உணவை உட்கொண்டிருக்கிறது. இப்போது உங்கள் குழந்தைக்கு  அட்ட்வனைப்படியும், அதன் விருப்பப்படியும்  நீங்கள் எந்த நேரத்திலும்  உணவளிக்க முடியும்.

குறிப்பு:

உங்கள் குழந்தைக்கு 4 வாரங்கள் தாய்ப்பாலூட்டுதல் மற்றும் 8 புதிய திட உணவுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றில், சில குழந்தைகளுக்கு சில உணவுகளுக்கான ஒவ்வாமை உருவாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குழந்தைக்கு  ஒரு குறிப்பிட்ட உணவால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அதற்கான சில அறிகுறிகள்:

 • மூக்கிலிருந்து நீர் வடிதல்
 • தோல் தடித்தல்
 • வயிற்று வலி
 • குழந்தை அசௌகரியம் அடைதல்
 • குழந்தை ஒழுங்கற்ற நிலையில் இருத்தல்
 • வயிற்றுப்போக்கு
 • வாந்தி

உதவிக்குறிப்பு:

உங்கள் குழந்தைக்கு  ஒரு குறிப்பிட்ட உணவு மூலம்  ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் அந்த உணவை நிறுத்திவிட்டு  உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். ஒவ்வாமைக்குக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தாய் பால் மறத்தல் கடினமான விஷயமல்ல. நீங்கள் தேர்வு செய்வதற்கான அணுகுமுறைகள் நிறைய உள்ளன. ஆனால், தாய்ப்பால் மறத்தலை செய்ய இயற்கையான முறையில் செய்வதே சிறந்ததாகும். ஏனெனில் தாய் பால் அளித்தல் என்பது, ஒரு தாய் மற்றும் குழந்தைக்கு இடையே ஒரு வலுவான உறவு மற்றும் புரிந்துணர்வை உருவாக்குவதால் இயல்பான மறத்தல் முறையே பரிந்துரைக்கப்படுகிறது. அவசர அவசரமாக முடிவுகளை எடுக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.தாய் பாலை மறக்க செய்யும் முயற்சிகளுக்கு முன்பும் சரி, பின்பும் சரி பொதுவாக தாய் பால் தொடர்வது சிறந்ததுதான். ஆனால் குழந்தை இயல்பாக புதிய உணவுப் பழக்கத்துக்கு வரும் வரை அவசரப்பட வேண்டியதில்லை. பொறுமை அவசியம்.