மகப்பேறு காலத்தில் சத்தாக உண்பது எவ்வாறு? இருவருக்கு உண்ணுதல் என்றால் என்ன ?

மகப்பேறு காலத்தில் சத்தாக உண்பது எவ்வாறு? இருவருக்கு உண்ணுதல் என்றால் என்ன ?

 

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, அல்லது குழந்தை பெற முடிவு செய்திருந்தாலோ, பலர் உங்களிடம் இருவருக்கு உண்ணவேண்டும் என கூறுவதை கேட்டிருக்க வாய்ப்புண்டு. அதை கேட்கும் பொழுது சரியாக தோன்றினாலும், மகப்பேறு காலத்தில் அது அவசியமல்ல.

மகப்பேறு காலத்தில் எடை அதிகரித்தல் :

தாய் மற்றும் சேயின் நலனிற்காக, தாய் சரியான அளவு எடை அதிகரிப்பது அவசியம் ஆகும். கருவில் வளரும் குழந்தைக்கு நாளுக்கு நாள் அதிகப்படியான சத்து அவசியமாகும். அதனை உங்கள் உணவு மூலம் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், பின் இருவருக்கும் ஆபத்தாக முடியும்.

சரியான எடை என்னவாக இருக்க முடியும் என்பதை அறிய BMI அளவீடு உதவும். 

 1. உங்களது BMI< 18.5 ஆக இருந்தால், நீங்கள் 13 முதல் 18 கிலோ வரை எடை கூடுவதுஅவசியம்.
 1. உங்களது BMI 25.0 முதல் 29.0 வரை இருந்தால், 7 முதல் 11 கிலோ வரை நீங்கள் எடையை மகப்பேறின் பல்வேறு காலகட்டங்களில் கூட்ட வேண்டும்.
 1. உங்களது BMI>30 ஆக இருந்தால், 5 முதல் 9 கிலோ வரை எடை அதிகரிப்பு நிகழ வேண்டும்.
 1. உங்களது BMI 18.5 முதல் 24.9 வரை இருந்தால் 11 முதல் 15 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும்.

இருவருக்காக உண்ணுவது  என்று இந்த அளவுகளுக்கு மேலே நீங்கள் எடை அதிகரித்தால் எவ்வித நலனும் நிகழாது. அதன் மூலம் சிக்கல் உருவாகவே வாய்ப்புகள் அதிகம். பின்னர் அந்த எடையை குறைப்பது இயலாத காரியம் ஆகும்.

மகப்பேறு காலத்தில் இருவருக்காக உண்ண வேண்டுமா?

மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு இருமடங்கு உண்ணவேண்டும் என பெண்கள் கருதுகின்றனர். இது தவறான நம்பிக்கை மட்டுமல்லாது, ஆபத்தான ஒன்றாகவும் அமையும் வாய்ப்பு உள்ளது. முன்னதை விடவும் அதிகமான சத்துக்கள் நீங்கள் உண்ண வேண்டும். ஆனால், நாள் ஒன்றிற்கு 300 கலோரிகள் மட்டுமே அதிகம் கிடைத்தால் போதும் உங்களது உடலிற்கு என்கின்றனர் வல்லுனர்கள்.

முதல் மூன்று மாதங்களில் சரியான சத்தான உணவுகளை நீங்கள் உண்டு வந்தால்,  அதிகமாக உண்ணவேண்டிய அவசியம்இல்லை.  இரண்டாம் ட்ரைமஸ்டரில், நாள் ஒன்றிற்கு 340 கலோரி அதிகம் உண்ணுவது அவசியம். மூன்றாம் ட்ரைமஸ்டரில் தினமும் 450 கலோரி அதிகமாக உண்ண வேண்டும். உங்கள் எடை மேலே கூறியது போன்று எந்த அளவுகளில் இருந்தாலும், சரியான அளவுகளில் வருமாறு உணவு உண்பது அவசியம்.

ஆரோக்கியமான பிரசவத்திற்கு என்ன உண்ண வேண்டும்?

மகப்பேறு காலத்தில் இருவருக்கு உண்ணுவது அவசியம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருக்க முடியும். எனவே தற்போது என்ன உண்ணவேண்டும் என்பதை பற்றி காணலாம்.

மூன்றாவது ட்ரைமஸ்டராக இருந்தாலும், 2 கோப்பை பால், 2-3 சப்பாத்திகள் அதிகமாக உண்டு தேவையான சத்துக்களை பெற இயலும். வேறு என்ன என்ன உண்ணலாம் என்பதை கீழே காணவும்.

 1. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் முதன்மையானவை. இவற்றில் போலிக் அமிலம், வைட்டமின் சீ, இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு அவசியமாகும்.
 2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். அவற்றில் சத்துகள் இல்லை ஆனால் கலோரிகள் அதிகம். கொழுப்பும் அதிகம்.
 3. சாதா எண்ணையை விட்டு விட்டு ஆலிவ் எண்ணையில் சமைக்கவும். இதன் மூலம் எண்ணை பயன்பாட்டை குறைக்க இயலும். அதிகமான எண்ணை பயன்பாடு குழந்தையின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும்.
 4. உண்ணும் அளவை குறைவாக வைத்துக் கொள்ளவும். இதன்மூலம் கலோரிகளை கட்டுபடுத்த இயலும்.
 5. அதிகமாக நீர், சாறு வகைகளை அருந்தவும். உடலில் நீர்சத்து அவசியம்.
 6. மீன் உண்ணும் பொழுது, மெர்குரி இல்லாத மீன்களாக பார்த்து உண்ணவும்.
 7. சமைக்காத உணவுகளை உண்பதை தவிர்க்கவும். அவற்றின் மூலம், கிருமிகள் தொற்றும் ஏற்படலாம்.  கர்ப்பிணி பெண்கள் லிஸ்டீரியா தொற்றிற்கு எளிதாகஆளாவர்கள்.

முடிவு:

உணவு பழக்கம், ஆரோக்கியமான பிரசவத்திற்கு வழி வகுக்கும். உங்களில் சாதாரணமான உணவு பழக்கமே பிரசவத்திற்கு போதுமானதாகும். பிரசவம் முடிந்த பின்பு உங்களின் எடையில் கவனம் கொள்ளவும். சரியான எடை அளவுகளில் இருக்க முயற்சி செய்யுங்கள். அதிகமான கலோரி உண்ணாதிருப்பத்தையும் உறுதி செய்யுங்கள்.

இருவருக்காக உண்ணுவது அவசியம் இல்லை.