பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் ஏன்?

பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் ஏன்?

 

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

அறிமுகம்:

இந்த கால கட்டத்தில்  நாள்  மற்றும் வயதின் அடிப்படையில்  தாய்ப்பால் அளிப்பதன்  முக்கியத்துவத்தை கவனிக்காமல் விட முடியாது. உலக அளவில் உள்ள உயர்மட்ட சுகாதார அமைப்புகள் அனைத்தும் ஓன்று சேர்ந்து, பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக தாய்பால் ஏன் அளிக்க வேண்டும், அதை எவ்வாறு அளிப்பது என்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன. பிறந்ததும் அடுத்த அரை மணிநேரத்துக்குள் முதல் உணவாக சீம்பால் அளிக்க வேண்டும்.

குழந்தையின் தேவைக்கேற்ப ( வழக்கமாக குறைந்த பட்சம் 24 மணி நேரத்தில் எட்டு தடவை) தாய் பால் வழங்கப்பட வேண்டும். இதில் குழந்தைக்கு தேவையான சக்தி, சத்துக்கள், தொற்று நோய் எதிர்ப்பான்கள் உள்ளன. ஒவ்வாமையற்ற தாய்பால் தாயின் கருத்தடை சாதனமாகவும் விளங்குகிறது. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, முன்னேற்றம், நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றையும் தாய் பால் அளிப்பதால் இது மிக, மிக அவசியமானதாகும்.

தாய்ப்பாலூட்டல் ஆரம்பம்

குழந்தை பிறந்ததும், அடுத்த அரை மணிநேரத்துக்குள் தாய்பால் அளிக்கப்பட்டால், 1 மில்லியன் குழந்தைகள் இறப்பை உலக அளவில் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் குறைந்த பட்சம் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு முறையாக தாய்ப்பால் வழங்குவதன் மூலம், ஐந்து வயதுக்குட்பட்ட 13% குழந்தைகளை மரணத்தின் பிடியிலிருந்து மீட்க முடியும் எனவும் ஆதாரத்துடன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், உரிய காலத்தில் தாய்பால் அளிக்கத் தொடங்கி, 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து அளித்து வந்தால் 6% குழந்தைகள் இறப்பைத் தடுக்க முடியும். பார்முலா பால் ஊட்டப்படும் குழந்தைகளை விட  தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு குறைந்த அளவிலான வயிற்றுப் போக்கு, குறைந்த அளவிலான சுவாசப் பிரச்சினை, அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆதாரபூர்வமான தகவல்கள் கூறுகின்றன.

சீம்பால்:

குழந்தை பிறந்ததும் தாயிடமிருந்து பெறப்படும் முதல் பால்தான் சீம் பால். இது வெள்ளை நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ பிசு, பிசுப்புடன் காணப்படும். பிரசவத்தின் போதும், அதற்குப் பிறகு 2 அல்லது 5 நாட்கள் வரை இந்த பால் சுரக்கிறது. குழந்தைக்கு முதன் முதலாக உற்சாகத்துடன் அளிக்கப்படும் தாய்பால்தான் சீம்பால்.

சீம் பாலில் உள்ள சத்துக்கள் மற்றும் பலன்கள்:

அடர்ந்த மஞ்சள் நிறத்தில், கெட்டியான திரவமாக, இயலபான காரத் தன்மையுள்ள சீம் பால் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் ( பாலை விட ) இருக்கிறது; அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. வைட்டமின் ஏ, சோடியம் மற்றும் குளோரைட், குறைந்த அளவில் கார்போஹைரேட், கொழுப்பு, அதிக அளவில் பொட்டாசியம் இதில் உள்ளது (முதிர்ந்த தாய்பாலை விட). மேலும் இதில் நோய் எதிர்ப்பு திறன்கள் அடங்கிய இம்யூனோக்ளோபூலின் ஏ, ஃபுல்மென்ஸ், மேக்ரோபஜஸ், லிம்போசைட்கள், லாக்டோபெர்ரின் மற்றும் பிற என்சைம்கள் (லாக்டொபெரோக்ஸைடிஸ்) இதில் உள்ளன. மேலும் நுண்ணுயிரியல் அடிப்படையில் சீம்பாலில் கொழுப்பு குளோபல்ஸ், காற்பசில்ஸ் மற்றும் அசினர் எபிதேலியல் செல்கள் உள்ளன. பெருங்குடல் நிறமிகள் பெரிய பாலிஹுக்ளிக் லிகுகோசைட்கள், ஓவல் அல்லது சுற்று வடிவத்தில் பல கொழுப்பு குளோபியூல்கள் அடங்கியுள்ளன.

சீம்பாலில் அடங்கியுள்ள noநோயெதிர்ப்பு கூறுகள்;

முதன் முதலாக ஊட்டப்படும் சீம்பால், பிறந்த குழந்தைகளுக்கு முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. நோய்த் தொற்றுகளுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பை உரிய முறையான உணவு பழக்கங்கள் மூலம் மட்டுமே எளிதில் தர முடியும். இதன் அடிப்படையில் குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவாக சீம்பால் உள்ளது.  இதில் அடங்கியுள்ள நோய் எதிர்ப்பு கூறுகள்:

 • இம்யூனோக்ளோபூலின்ஸ் (எ.கா. ஐஜிஎ , ஐஜிஜி, ஐஜிஎம்)
 • செல்லுலார் கூறுகள் (எ.கா.வெள்ளை இரத்த அணுக்கள் )
 • லியோசைம், லாக்டோபரின், டிரான்ஸ்ஃபெரின்
 • இணக்க அமைப்பு (C3 மற்றும் C4 இன் ஆஸ்போனிக் மற்றும் வேதியியல் செயல்பாடுகள்)
 • ஒலிகோசரார்டுகள் (பாக்டீரியாவை நுண்ணிய மேற்பரப்பில் இணைவதை தடுக்கும்)
 • பைடுபுலஸ் காரணி (குடலில் சிறப்பு பாக்டீரியாக்கள் வளர உதவி மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும்)

முதிர்ந்த பாலிடமிருந்து வேறுபாடு:

தாய்பால் அதிக சத்து, நோயெதிர்ப்பு சக்தி, ஒவ்வாமை எதிர்ப்பு மற்றும் பொருளாதார சிக்கனம் வாய்ந்தது. என்றால் கூட சீம்பால் தேசிய சுகாதார முன்னேற்றத்தில் முன்னுரிமை வழங்கப்படும் மூல ஆதாரப் பொருளாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்த அடுத்த அரை மணி நேரத்தில் வழங்கப்படும் சீம்பாலில், மனிதப் பாலுடன் ஒப்பிடுகையில் கீழ கண்ட தனித்துவமான அம்சங்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

 • புரோட்டீன் செறிவு (கிட்டத்தட்ட 10%)
 • அதிக அளவில் இம்யூனோக்ளோபூலின்ஸ், லேக்டோபெரின் மற்றும் வெள்ளை ரத்த செல்கள்
 • குறைந்த கொழுப்பு மற்றும் லாக்டோஸ்
 • அதிக அளவு வைட்டமின் ஏ
 • அதிக சோடியம் மற்றும் துத்தநாகம்

சீம்பால் மற்றும் மார்பக பால் கலவை விகிதம்:

புரோட்டீன் கொழுப்பு கார்போஹைட்ரேட் தண்ணீர்
சீம்பால் 8.6 2.3 3.2 86
தாய்பால் 1.2 3.2 7.5 87

 சீம்பாலின்  நன்மைகள் / முக்கியத்துவம்

பல்வேறு உயிரியல் பண்புகள் வாய்ந்த சீம்பாலில் காணப்படும் நன்மைகள் கீழே தரப்பட்டுள்ளன:

 • சீம்பால் குழந்தைகளுக்கான முதல் சரியான உணவாகும். முதிர்ச்சியடைந்த தாய் பாலை விட புரதமும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன.
 • இது மிகவும் சத்தானது. மேலும் ஆன்டிபாடிகள் இருப்பதால் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது (ஐஜிஎ , ஐஜிஜி, ஐஜிஎம்).
 • இது பாக்டீரியா மற்றும் வைரசுக்கெதிரான முதல் தடுப்பு மருந்தாகும். இரைப்பை குடல் மற்றும் சுவாசக்குழாய் பகுதிகளில் நோய் தொற்றைக் குறைக்கிறது.
 • அத்துடன், லாக்டொபரினை உள்ளடக்கிய பல காரணிகள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நோய்த் தடுப்பு பாதுகாப்பை அளிக்கிறது.
 • இதில் அடங்கியுள்ள லிம்போசைட்கள் மற்றும் மேக்ரோபாய்கள் நோய்களுக்கு எதிராக போராடும் உயிரணுக்களாகும்.
 • இதில் காணப்படும் டஜன் கணக்கான எதிர்ப்பு அழற்சிகள் வீக்கத்தால் ஏற்படும் தீமையைக் குறைக்கின்றன.
 • குழந்தையின் வயிற்றில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் பழைய, கரும் பச்சை மலத்தை இளக்கி வெளிவரச் செய்கிறது. மஞ்சள் காமாலை நோயை தடுக்க உதவுகிறது.
 • கார்போஹைட்ரேட், முக்கியமாக லாக்டோஸ், குடல் ஃபுளோராவின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் வைட்டமின் பி தயாரிப்பிற்குத் தேவையான கரிம அமிலங்களை உற்பத்தி செய்கிறது.
 • நரம்பியல் வளர்ச்சிக்கான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு உள்ளன.
 • எல்லாவற்றிற்கும் மேலாக, இது சிறப்பான நுண்ணறிவு, மனநோய் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவுகிறது.
 • குறைபிரசவ குழந்தைகளுக்கு தேவையான அதிக பட்ச கலோரிகளை இது அளிக்கிறது.

தாய்ப்பால் தொடர்பான ஆலோசனை

தாய்ப்பால் மற்றும் சீம்பாலின் அவசியத்தை குழந்தையின் தாய் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. ஆரம்பத்தில் பால் அளவு குறைவாக சுரக்கலாம், ஆனால் அந்த சிறிய அளவு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மிக முக்கியமான ஊட்டசத்தாகும். எனவே, கீழ் கண்ட வழிகாட்டுதலை பயன்படுத்தி தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும் வகையில் ஊக்குவிக்கப்படுகின்றனர்:

 • குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். பிரத்தியேகம் என்பதற்கான அர்த்தம் என்னவெனில் 6 மாதங்கள் வரை தண்ணீரையோ அல்லது மற்ற உணவையோ கூட கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
 • குழந்தைகளுக்கு பார்முலா பாலையோ, மற்ற விலங்கின் பாலையோ அளிக்கக் கூடாது. மாட்டுப்பாலிலும், பார்முலா பாலிலும் அதிக அளவில் கால்சியம், பாஸ்பேட் மற்றும் சோடியம் உள்ளது.
 • குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக மற்ற உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தீர்வு:

உங்கள் குழந்தைக்கு வழங்கப்படும் சீம்பால் மிக,மிக அவசியமானதாகும். இது தாயின் முதல் பால் என்பதால் மறுக்காதீர்கள், ஏனெனில் இது வெறும் உணவு மட்டுமல்ல. நோய்களைத் தடுக்கும் ஆற்றல் மிகுந்த தடுப்பூசி போன்றது. சொல்லப்போனால், குழந்தைக்கு முதன் முதலாக தரப்படும் இந்த அடர்த்தியான பால் குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்தையும் தரும் சிறப்புத் தன்மை வாய்ந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.