மிகமுக்கிய நுண்ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் வேலை :

மிகமுக்கிய நுண்ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் வேலை :

 

இந்த கட்டுரை தற்போது IAP நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது; கட்டுரையில் தொழில்நுட்ப மற்றும் மொழி பிழைகள் இருக்கலாம் எனவே கட்டுரை இன்னும் திருத்தம் மற்றும் ஒப்புதல் செய்யபடவில்லை. திருத்தப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில பதிப்பைப் படிக்க இங்கு கிளிக்(சொடுக்கு) செய்யவும்.

உங்கள் குழந்தையின் முதல் 6 மாதங்களுக்கு , தாய்ப்பால் மட்டும் தான் அதன் முக்கிய ஆகாரமாக இருக்கும். தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கும்.

ஆனால் 6 மாதங்கள் கடந்த பிறகு, குழந்தைக்கு தேவைப்படும் ஊடச்சத்துக்கள் கிடைக்காத  பச்சத்தில், அதன் தாக்கம், மனநிலை, உடல்நிலை, ஆரோக்கியம் ஆகியவற்றில் வாழ்நாள் முழுவதும்  எதிரொலிக்கும். இங்குதான் நுண்ஊட்டச்சத்துகளின் தேவை உருவாகிறது.

நுண்ஊட்டச்சத்துகள் என்பது  சிறிய அளவுகளில்,  மனித உடலின்  சரியான வளர்ச்சி, மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படுவன ஆகும்.  போரான், லித்தியம், அயர்ன், சோடியம் மற்றும் வைட்டமின் பீ, வைட்டமின் டீ, வைட்டமின் கே மற்றும் இதர வகையான வைட்டமின்களும் நுண்ஊட்டச்சத்துகள் வகையில் பொருந்தும்.

நுண்ஊட்டச்சத்துகள்  உடலின் வளர்சிதை மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் படிகளான, செல் பிரிதல், இதய வளர்ச்சி போன்றவற்றுக்கு பொறுப்பாகும். குழந்தைகளின் வளர்ச்சியில் அவை மிகப்பெரிய பங்காற்றுகின்றன. காரணம் குழந்தைகள், அவர்களின் வளர்சிதை மாற்றத்தின் பொழுது அதீத வளர்ச்சியை அனுபவிப்பார்கள். அதன் காரணமாக நுண்ஊட்டச்சத்துகள் அவர்களின் உணவில் மிக முக்கிய அங்கம் ஆகும்.

மிகமுக்கிய நுண்ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் வேலை :

மனிதர்களுக்கு தேவையான நுண்ஊட்டச்சத்துகளில், 40 வகையான முக்கிய வைட்டமின்கள், கனிமங்கள், மற்றும் இதர உயிர் இரசாயனங்களால்  ஆனது. அவற்றில் முக்கியமானது என்றால்,

இரும்பு :

உடலில் ஹீமோக்ளோபின் உற்பத்திக்கு இரும்பு தேவைப்படுகிறது. ஹீமோக்ளோபின் தான் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயுவை கொண்டுசேர்க்கிறது. இரும்புச்சத்து குறைபாடு என்பது மிகவும் சிக்கலாகும். உடல் உறுப்புகளுக்கு தேவையான பிராணவாயு(ஆக்ஸிஜன்) கிடைக்காமல் போகும். அதன் காரணமாக உறுப்புகள் சரியாக இயங்க முடியாது, பழுதடையும்.

முதல் 6 மாதங்களுக்கு குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து தாய்ப்பால் மூலம் கிடைக்கும்.  அதன் பின்பு, குழந்தை திட ஆகாரம் உண்ண ஆரம்பித்த பிறகு, அதன் உடல் வெகுவேகமாக வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் தான் குழந்தைக்கு இரும்புச்சத்து அதிகம் தேவைப்படும். அதிகம் இரும்புச்சத்து நிரம்பிய உணவை உண்ணும் பொழுது, குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியும், மேம்பாடும் தொடர்ந்து நடைபெறும்.

12 மாதங்கள் ஆன ஒரு குழந்தைக்கு தினமும், 11 மில்லிகிராம் இரும்புச்சத்து அவசியமாகிறது. அதனை, இரும்புச்சத்து நிறைந்த ப்ரோகோலி, உருளை, சோயாபீன், கீரை, சுண்டல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பெற முடியும். உங்கள் குழந்தையின் உணவில் கறி மற்றும் மீன் ஆகியவற்றை சில மாதங்கள் திட ஆகாரங்கள் அவர்கள் உண்ட பிறகு சேர்க்கலாம்.

கால்சியம் :

கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அது மட்டுமே கால்சியமின் வேலை அல்ல. உறுதியான பற்கள், நரம்புகள், தசைகளின் இயக்கம், உட்கொள்ளும் உணவு உடலால் உறுஞ்சப்படுதல் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவை கால்சியமின் பொறுப்புகளாகும்.

குழந்தைகளுக்கு வழக்கத்தை விடவும் அதிகமான கால்சியம் முதல் சில வருடங்களிலும், பின்னர் 11 – 15  இடைப்பட்ட வயதிலும் தேவைப்படும். அந்த நேரங்களில் அவர்கள் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும். தினமும் உடலுக்கு 700 மில்லிகிராம் கால்சியம் தேவை.

குழந்தைகளில் கால்சியம் குறைபாடு இருந்தால், ரிக்கெட்ஸ், வலு குறைந்த எலும்புகள், ஆகியவை உண்டாகி, அவ்வப்போது உடைவது மட்டுமன்றி வாழ்க்கையின் தரத்தையும் பாதிக்கும்.

தினமும் நாம் உண்ணும், பால், பாலடைக்கட்டி, யோகர்ட்(சுவையுட்டபட்ட தயிர்),வெள்ளை பீன்ஸ், ஓட்ஸ் ஆகியவற்றில் கால்சியம் காணப்படுகிறது.

துத்தநாகம் (ஜின்க்) : 

துத்தநாகத்தின் பங்களிப்பு மனித உடலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் இல்லை என்பது போன்று தெரியலாம், ஆனால் நுண்ஊட்டச்சத்துக்களில்  மிகவும் முக்கியமான ஒன்றாகும் இது. ஜீரணம் மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு பொறுப்பான 70 நொதிகளின் செயல்பாடுகளை இந்த துத்தநாகம் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் மரபணு மற்றும் புரத உருவாக்கத்திற்கு ஜின்க் அவசியம். எனவே வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம்.

துத்தநாக குறைபாடு ஒரு குழந்தையில் பல மாற்றங்களை கொணரும்.  வளரும் குழந்தைகளில் மனநிலை வளர்ச்சி வேகம் குறைதல் அவற்றில் முக்கியமான ஒன்று. கண்கள் மற்றும் தோல் வறட்சி, பசி குறைதல், எச்சரிக்கை உணர்வு குறைவாக இருப்பது போன்றவையும் நிகழும்.

நமது உடலால் துத்தநாகத்தை சேமிக்க இயலாது என்பதால், முறையாக குழந்தைக்கு துத்தநாகம் நிறைந்த உணவினை கொடுப்பது அவசியம். தினமும் 3 மில்லிகிராம் அளவு துத்தநாகம், 12 மாத குழந்தைக்கு அவசியம். இதனை கோழி மற்றும் கறியில் காணலாம். மாமிசம் உண்ணாதவர்களுக்கு துத்தநாக குறைபாடு வராமல் தடுக்க, பருப்பு வகைகள், அஸ்பாரகஸ் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றை அவர்கள் உண்ண வேண்டும்.

வைட்டமின்கள் :

மற்ற  நுண்ஊட்டச்சத்துகள் போல வைட்டமின்களும் உடலின் செயல்பாட்டுக்கு முக்கியமானவை. நமது உடலில் அவை தயரிக்கப்படுவது  இல்லை என்பதால், உணவுகள் மூலம் அவற்றை கொடுப்பது அவசியமாகிறது.

தற்போது 13 வகையான வைட்டமின்கள் உள்ளன. அவற்றில் சில கொழுப்பில் கரைபவை (A, D, E மற்றும் K) மற்றவை நீரில் கரையக்கூடியவை(C, B, B2, B3 மற்றும்  Bயின் மற்ற வகைகள்). பல்வேறு விதமான செயல்களை இந்த வைட்டமின்கள் உடலில் நிகழ்த்துகின்றன. ஆனால் அனைத்தும் உடலின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவசியம்.

நமது கல்லீரல், கொழுப்பில் கரையும் வைட்டமின்களை சேமித்துவைக்கிறது. அங்கு அவை பல மாதங்கள் வரை இருக்கமுடியும்.

கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் வேலை :

  • சரியான பார்வை மற்றும் ஆரோக்கியமான தோல்
  • எலும்பு மற்றும்பற்களால் கால்சியம் சரியாக உள்வாங்கப்படுவது.(வைட்டமின் D)
  • செல்களின் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி (வைட்டமின் E)
  • இரத்தம் உறைதல் (வைட்டமின் K)

நீரில் கரையும் கொழுப்புகளின் வேலை :

  • இரும்புச்சத்தை உறுஞ்சுதல் (வைட்டமின் C)
  • ஸ்க்கர்வி வராது தடுத்தல் (வைட்டமின் C)
  • எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் (வைட்டமின் B)
  • ஆரோக்கியமான தோல் மற்றும் அதன் நிறம் காக்கப்படுதல் (வைட்டமின் B)

நன்கு சீரான உணவு உண்ணும் வரை, உங்கள் குழந்தைக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும் கிடைக்கும் எனக் கூறலாம். கீரைகள், பருப்புவகைகள், பழங்கள், கோழி, இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின்கள் நிறைந்துள்ள எனலாம்.

முடிவு :

தினமும் நமக்கு தேவையான நுண்ஊட்டச்சத்துகள் பல உள்ளன. சிறிய அளவுகளில் தான் தேவை என்றாலும்,  வளரும் குழந்தையின்  நலனை பொறுத்தவரை அவற்றை ஒதுக்கிவிட இயலாது. அதிர்ஷ்டவசமாக எந்த வித சிறப்பு செயல்பாடும் இவை கிடைக்க நாம் செய்யவேண்டியதில்லை. நன்கு சீரான உணவு இருந்தாலே போதும்.

உங்கள் குழந்தைக்கு நுண்ஊட்டச்சத்துகள் குறைபாடு உள்ளதாக நீங்கள் கருதினால், உங்கள் மருத்துவரை அணுகவும். அவற்றை பெறுவதற்கான உணவுகள் குறித்து அவர் கூற இயலும். அதையும் மீறினால், குழந்தைக்கு சப்லீமென்ட்டுகள்  மூலமும் அவற்றை கொடுக்க இயலும். ஆனால் மருத்துவரின் ஆலோசனை படி நடப்பது நன்று.